ஊரடங்கை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் யூடியூப்பர்ஸ்..!

  • by
youtubers are making people happy during this lock down

உலகத்தில் வாழும் அனைத்து மனித உயிரினங்களையும் வீட்டில் இருக்கும்படி இயற்கை செய்தது, இதைத் தவிர்த்து இனிவரும் காலங்களில் இயற்கையானது மேலும் பல இன்னல்களை மக்களுக்கு அளிக்க உள்ளது, இப்படியெல்லாம் வரப்போகும் சிக்கல்களை எண்ணி பயம் கொள்ளாமல் நம்மை எப்போதும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் பொறுப்பில் யூடியூபர்ஸ் இருக்கிறார்கள். சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறை முழுமையாக முடங்கி உள்ளதால் எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப முடியாமல் அனைத்து தொலைக்காட்சிகளும் தவித்து வருகிறது. இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட யூடியூபர்ஸ் தினமும் வெவ்வேறு விதமான சிந்தனையுடன் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள். மக்களின் மனநிலையை மகிழ்ச்சியாக்கும் மற்றும் அவர்களின் பொழுதை கழிப்பதற்கு தமிழல் மட்டும் ஏராளமான யூடியூப் பக்கங்கள் இருக்கிறது. அதில் ஊரடங்கு சமயத்தில் அதிகளவில் மக்கள் பார்க்கப்பட்ட மற்றும் மக்களுக்கு பிடித்த யூடியூப் சேனல்களை இங்கே காணலாம்.

பரிதாபங்கள்

யூடியூப்பை பொழுதுபோக்கு தளமாக மாற்றி அமைத்த மிகப்பெரிய பங்கு இவர்களுக்கு உண்டு, அது யார் என்றால் கோபி மற்றும் சுதாகர். மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலில் அறிமுகமாகி படிப்படியாக முன்னேறி தங்களுக்கென தனி யூடியூப் சேனலை உருவாக்கி இன்று ஏராளமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இருக்கும் இந்த சேனலில் ஏராளமான நகைச்சுவை காணொளிகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் ஊரடங்கின் போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மக்கள் செய்யும் தவறுகள் என அனைத்தையும் நகைச்சுவையான முறையில் நடித்தும் மற்றும் அதற்கேற்ப வசனங்களை எழுதியும் மக்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்கிறார்கள்.

மேலும் படிக்க – ரக்குள் பிரீத் சிங்கின் யோகா பயிற்சி..!

எரும சாணி

இளைய தலைமுறைகளுக்கு ஏற்ற யூட்யூப் சேனல்களில் இதுவும் ஒன்று. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையாக சித்தரிக்கும் நிகழ்ச்சிகளை இந்த சேனலில் நாம் காணலாம். ஆண்கள் விசஸ் பெண்கள், சிங்கிள்ஸ் விசஸ் கமிட்டெட், ஸ்கூல் விசஸ் காலேஜ் என ஏராளமான ஒப்பீடுகள் செய்து நிகழ்ச்சிகளை உருவாக்குவார்கள். இதன் மூலமாக அனைத்து விதமான ரசிகர்களையும் இவர்கள் கவர்ந்து இன்று ஏராளமான வாடிக்கையாளர்களை வைத்துள்ளார்கள்.

பிளாக் ஷீப்

ஸ்மைல் சேட்டை என சிறிய வகையில் தொடங்கப்பட்ட இந்த சேனலில் பணிபுரிபவர்கள் படிப்படியாக முன்னேறி பிளாக் ஷீப் என்ற மற்றொரு சேனலை உருவாக்கினார்கள். இன்று ஏராளமான வாடிக்கையாளர்கள் மற்றும் புதுவிதமான நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். இதைத் தவிர்த்து மக்களுக்கு ஊக்கமளித்து கொரோனா வைரஸிற்கான விழிப்புணர்வுகளையும் செய்து வருகிறார்கள். யூடியூபர்கலை ஊக்கம் அளிப்பது மற்றும் அவர்களை கௌரவிப்பது என ஏராளமான செயல்களில் ஈடுபடும் இவர்களின் நிகழ்ச்சிகளும் மக்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறது.

மைக் செட்

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்குப் பின்பு, காதலுக்கு முன்பு காதலுக்கு பின்பு, கல்லூரிக்கு முன்பு கல்லூரிக்கு பின்பு என ஏராளமான வகைகளில் இவர்கள் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள். தரமான வீடியோ மற்றும் ஆடியோ கொண்டுள்ளது இந்த யூடியூப் பக்கம். அதைத் தவிர்த்து இதில் இருக்கும் அனைத்து விதமான கலைகலும் ஏராளமான நகைச்சுவைகள் நிறைந்திருக்கும். எனவே ஊரடங்கு சமயத்தில் உங்கள் பொழுது போக்கை கழிக்க சிறந்த சேனல்களில் இதுவும் ஒன்று.

நக்காலடீஸ்

கோயம்புத்தூர் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த சேனலை தமிழகத்தில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள், சொல்லப்போனால் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட சேனல்களில் இதுவும் ஒன்று. பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் நகைச்சுவைகள், குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள், அலுவலருக்கும் சோதனைகள் போன்ற அனைத்தையும் நகைச்சுவையான முறையில் சித்தரித்து நமது பொழுதைக் கழிக்க உதவுகிறார்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸிர்க்கான விழிப்புணர்வு பாடல்கள்..!

ஜம்கட்

ஹரிபாஸ்கர் என்ற ஒருவன் மட்டுமே முழுக்க முழுக்க வெவ்வேறு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். சமுதாயத்தில் நடக்கும் அனைத்து விதமான கதைகளையும் சித்தரித்து அதை நகைச்சுவையான முறையில் காணொளியாக வெளியிட்டு வருகிறார். இவரை ஏராளமான இளைஞர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள், இதைத் தவிர்த்து இவர்களின் வீடியோக்கள் அனைத்திலும் நகைச்சுவை நிறைந்துள்ளது.

இதைத் தவிர்த்து சோதனைகள், புட் சட்னி, மெட்ராஸ் சென்ட்ரல் போன்ற ஏராளமான பொழுதுபோக்கு சேனல்கள் யூடியூபில் இருக்கிறது. எனவே உங்கள் பொழுதை மகிழ்ச்சியுடனும் மற்றும் ஏராளமான விபரங்களையும் தெரிந்து கொள்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சேனல்களையும் பின்தொடர்ந்து ஊரடங்கை மகிழ்ச்சியுடன் கடந்து விடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன