பொலிவான சருமத்திற்கு வெண்ணெய்யை பயன்படுத்தலாம்..!

you can use butter to make your skin glow like never before

சருமம் எவ்வளவுக்கு எவ்வளவு மென்மையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு அதை தொட்டு பார்க்க பிடிக்கும். இது மட்டுமல்லாமல் நமக்குள் ஒரு கர்வமும் ஏற்படும். இப்படி நம் சருமம் இல்லாமல் வறண்டு மற்றும் சோர்வாக இருந்தால் நாம் என்ன செய்வது இதற்காக நாம் மாய்ஸ்சுரைசர் கிரீம்களை வாங்கி தடவி வருவோம் ஆனால் இது அனைத்திற்கும் தீர்வாக வெண்ணை இருக்கிறது.

வாழைப்பழத்துடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதை நம் முகம் முழுக்க தடவி சிறிது நேரம் அதை உலர வைக்க வேண்டும். பிறகு அதை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். இதை உங்கள் கை, கால்களுக்கும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – உங்கள் அழகை அதிகரிக்கும் ஆரஞ்சு ஃபேஸ் பேக்..!

வெள்ளரிக்காயின் தன்மை பெறுவதற்காக நாம் அதை சிறிதாக நறுக்கி நம் கண்களில் வைத்துக் கொள்கிறோம் அதேபோல் அதனுடன் வெண்ணெய் சேர்த்து ஒன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும் பிறகு அதை முகம் முழுக்க ஒன்றாக 20 நிமிடங்கள் வரை நம் முகத்தில் வைக்க வேண்டும். பின்பு அதை நீக்கி விட்டு முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன், வெண்மையாகவும் இருக்கும்.

கடைசியாக ரோஸ் வாட்டரில் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவேண்டும் பிறகு நாம் அதை ஏதாவது துணியை வைத்து முகம் முழுக்க மென்மையான முறையில் தடவவேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் சருமம் பொலிவுடன் மற்றும் எந்த ஒரு சரும பிரச்சனைகளும் வராமல் நம்மை காத்துக்கொள்ள முடியும்.

மேலும் படிக்க – ஏவாளை மிஞ்சும் அழகு பெற எலும்பிச்சை பயன்படுத்துங்க!

இவை அனைத்தையும் உப்பு சேர்க்காத வெண்ணெயை கொண்டு தான் செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் எண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் அதிக அளவில் கொழுப்புகள் இருப்பதினால் இது நம் சருமத்திற்கு நன்மை மட்டுமே தருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன