உங்கள் முக அழகிற்கு கரித்தூள் ஃபேஸ் மாஸ்க்கை போடுங்கள்.!

you can brighten youor skin using charcoal by glossy face mask

நாம் விறகுகள் மற்றும் பலகைகளை எரித்த பின்பு மீதமுள்ள கருத்துளை நாம் எதற்கும் பயன்படுத்தாமல் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் இந்த கறித் துண்டுகளை வைத்து பல் துலக்கி வந்தார்கள். இதற்கான காரணம் என்னவென்றால் கரித்துகளில் இருக்கும் சக்தியானது எந்த ஒரு தீங்கும் உண்டாக்காமல் நம் பற்களை வெண்மையாக்குகிறது. இதேபோல் இந்த கரிகளை கொண்டு நம் முகத்தில் பேஸ் மாஸ்க் போடுவதன் மூலம் நம் முகம் சுத்தமாகி பொலிவடைய உதவுகிறது.

கறித் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதை நன்கு பொடியாக்கிக் கொள்ள வேண்டும் அதில் பாதாம் எண்ணெய், பேக்கிங் சோடா மற்றும் முகத்திற்கு அழகு சேர்க்கும் பொருட்களை சேர்த்துக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் ஒன்றை செய்து கொண்டு நம் முகத்தில் தடவ வேண்டும். இதனால் நம் முகத்தில் இருக்கும் கமையைப் போக்கி நம் முகத்தை பொலிவடைய செய்கிறது.

மேலும் படிக்க – சில்கியான கூந்தல் அழகைப் பராமரிக்கும் சிகைக்காய்

இதை வேறுவிதமாகவும் நாம் பயன்படுத்தலாம். இதற்கு நாம் ப்ரோபயாடிக் மாத்திரை மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்ளவேண்டும். இது இரண்டையும் கரியுடன் நன்று கலந்துகொண்டு கொஞ்சம் தேங்காய் எண்ணெயையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவேண்டும். இது கட்டிய நிலை வரும்வரை கலக்கிய பின்பு நம் முகத்தை தடவ வேண்டும் பிறகு 15 நிமிடங்கள் இதை நம் முகத்தின் மேல் ஊறவைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தில் க்ரீமை தடவ வேண்டும். இப்படி செய்தால் நம் முகம் மிக சுத்தமாகவும் பொலிவுடனும் இருக்கும் இது மட்டுமில்லாமல் உங்கள் முகத்தில் இருக்கும் எண்ணெய்களை உறிஞ்சி உங்கள் முகத்தை உலர்ந்த நிலையில் வைத்திருக்கும்.

மேலும் படிக்க – நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா?

எனவே நாம் பணத்தை விரயம் ஆக்காமல் வீட்டிலேயே இது போன்ற அற்புதமான இயற்கை பேஸ்ட் செய்து முகத்தில் தடவி அதன் மூலம் நம் முகம் பொலிவடைய மட்டுமல்லாமல் எப்போதும் இளமையாக அழகாகவும் இருக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன