யோகா சிகிச்சையும் தியான பயிற்சியின் விளைவுகளும்…!

  • by

நாம் வெறுமனே யோகா பற்றி கதைப் பேசிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், வெளிநாட்டினர் யோகாவை பற்றி ஆராய்ச்சி மூலம் நன்கு அறிந்து, மதிப்பீடு செய்து, அதன் சக்தியை உணர்ந்தனர். யோகாவின் பயன்பாடு எத்தகையது என்பதை அவர்கள்  புரிந்து கொண்டார்கள். ஆகையினாலே பல வெளிநாட்டினர் இந்தியாவை நோக்கி  யோகாவிற்காக வருகை தருகின்றனர்.

யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்:

யோகா சிகிச்சை என்பது யோகத்திலிருந்து வருவிக்கப்பட்டது. இருந்தும் இதன்  அணுகுமுறை வேறுபட்டது. யோகா சிகிச்சையில் ஒருவருடைய உடல், அவரின்  உடலமைப்பு, நோயின் தாக்கம், பரம்பரை நோய், நோய்க்கான சிகிச்சை, யோகா  செய்யும் நேரம் போன்றவற்றை அறிந்து அவருக்கு தனிப்பட்ட முறையில் தரும்  பயிற்சியாகும்.

மேலும் படிக்க – யோகாவில் ஓம் ஒலி மற்றும் 108 எனும் புனித எண்ணின் அவசியத்தை அறிந்துகொள்வோம்…!

எதற்காக யோகா சிகிச்சை:

 நாள்பட்ட பல பிரச்சனைகளையும் இந்த யோகா சிகிச்சையில் சிறந்த முறையில் சரி  செய்ய முடிகிறது. பல அறுவை சிகிச்சைகளை தவிர்த்து யோகா  மூலம் சரி  செய்யமுடியும்.

 உடல்வலி, முதுகுவலி, நாட்பட்ட சைனஸ், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பெண்களுக்கான உபாதைகள் உள்ளவர்கள் மேலும் பலர் யோகா சிகிச்சைக்கு வருகிறார்கள். உடல் முழுதும் ஒரே நோய் பிரச்சனை உள்ள இருவர் வந்தாலும் சிகிச்சை  வேறு  வேறாக தான் இருக்கும். காரணம் ஒவ்வொருவரின் தனித்தன்மை, உடலமைப்பு-இயல்பு-வயது என பல கரணங்கள் உள்ளது.

This image has an empty alt attribute; its file name is shutterstock_360192704-1-1024x683.jpg

யோகா சிகிச்சையின் பல்வேறு பலன்கள்:

தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் உடல் பருமனை குறைக்க சர்வாங்காசனம், சிவலிங்காசனம், ஹலாசனம் என்ற ஆசன பயிற்சிகள் உதவுகிறது. மருந்து, மாத்திரைகளால் உடலில் உண்டான கழிவுகளை நீக்க பிராணாயாமமும், கிரியா பயிற்சிகளும் பயன்படுகிறது.

கூடியுள்ள உடல் எடையைக் குறைத்திட சூர்ய நமஸ்காரம் மிகச் சிறந்த பயிற்சி. பணி இடத்தில், வாழ்க்கையில் என பல இடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இந்த யோகா சிகிச்சை உள்ளது.

யோகா சிகிச்சையின் பல சிறப்பம்சங்கள்:

யோகா சிகிச்சையை பெற இன்று பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஒருசில உடல் பிரச்சனைகளுக்கு மட்டும் யோகா சிகச்சையுடன் மருந்தும் கொடுக்கப்படுகிறது, இருந்தும் நாளடைவில் மருந்தின் அளவை குறைத்து பின்னர் மருந்தை முழுமையாக நிறுத்திடும் நிலைக்கு வர முடியும். ஒருசிலருக்கு மருந்து இல்லாமலும் யோகா முறை மட்டும் போதுமாக உள்ளது.

மேலும் படிக்க – நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..! 

இந்த யோகா சிகிச்சைக்கு முதலில் முழு நம்பிக்கை தேவை. அடுத்து யோகா பயிற்சிக்கு எடுக்கும் முயற்சி. யோகா பயிற்சிகள் செய்வதால் எதிர்காலத்தில் வரவிருக்கிற நோய்களை கூட வராமல் தடுக்கலாம். மேலும் இருக்கின்ற நோயின் வீரியத்தைக் குறைக்கமுடியும். மேலும் ஒரு சில நோய்களை முற்றிலுமாக தீர்க்க முடியும். இதனை சரியான யோகா சிகிச்சை கற்ற ஆசிரியர்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன