இடுப்பு மற்றும் முதுகு வலியை குறைக்கும் யோகா பயிற்சி..!

  • by
yoga practice to reduce hip and back pain

நடைமுறை வாழ்க்கையில் எல்லா வயதினர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து தங்கள் வேலைகளை செய்யும் சூழலில் வாழ்ந்து வருகிறோம். அதைத் தவிர்த்து பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட இது போன்ற பிரச்சினைகளில் சிக்கி உள்ளார்கள். நாம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மூலமாக நம்முடைய முதுகுப்பகுதி பாதிப்படைகிறது. இதனால் ஒரு வயதை எட்டியவுடன் நம்முடைய ஆற்றல் குறைந்து முதுகு பகுதிகளில் வலிகள் உண்டாகிறது. எனவே இதை தடுப்பதற்காக ஒரு சில யோகா பயிற்சிகள் உதவியாக இருக்கிறது.

முதுகு மசாஜ்

நம்முடைய இரு கைகளை வைத்து நம்முடைய முதுகு எலும்பு ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒவ்வொரு விரல்களைக் கொண்டு அழுத்தியவாறு மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் இடுப்புப் பகுதியை தொடங்கி கழுத்துப் பகுதி வரை உங்கள் முதுகெலும்பை அழுத்தி அதில் இருக்கும் வலிகளை குறைக்க வேண்டும். இந்த மசாஜ் செய்வதற்கு நம்முடைய மன நிலையை ஒரு நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும், அதை பொறுத்து தான் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

யானை நிலை

யானையானது எப்படி நின்று கொண்டிருக்குமே அதே போல் நம் முட்டிகளையும் மடக்கியவாறு யானைபோல் கவர்ந்து இருக்க வேண்டும். பிறகு நம்முடைய முதுகை கீழ்நோக்கி முடிந்தவரை வளைக்க வேண்டும். அதே நிலையில் உங்களுடைய கழுத்தை மேல் நோக்கி பார்க்க வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலமாக முதுகில் இருக்கும் அனைத்து சிக்கல்களையும் விளக்கி உங்களுக்கு நல்ல தளர்வை தரும்.

மேலும் படிக்க – இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் ஊட்டச்சத்து நிபுணரை சந்திக்க வேண்டும்..!

முக்கோண நிலை

இது முதுகுப் பகுதியில் ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வை அளிப்பது மட்டுமல்லாமல் இடுப்பு, தொடை, கால்கள், கைகள் போன்றவற்றில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு அளிக்கிறது இந்த முக்கோண நிலை. நம்முடைய இரு கால்களையும் நேராக சேர்த்துக் கொண்டு அப்படியே முன்பக்கமாக வளைந்து கைகளால் ஊன்று கொள்ள வேண்டும். பிறகு உங்களுடைய பின்புறத்தை மடித்து நேராக மேல் நோக்கி நீட்ட வேண்டும். இப்போது நீங்கள் முக்கோண வடிவில் இருப்பீர்கள், இதை தொடர்ந்து சில வினாடிகள் செய்வதன் மூலமாக நல்ல தீர்வு கிடைக்கும்.

குப்புறப் படுக்கும் ராணுவம் நிலை

ராணுவத்தில் வீரர்கள் எப்படி தரையில் படுத்துக்கொண்டு துப்பாக்கி ஏந்தி கொள்வார்களோ, அதே போல் நாம் தரையில் படுத்துக் கொண்டு நம் கையை மேலே தூக்கியவாறு பார்க்க வேண்டும். இந்த நிலையில் நம்முடைய இருகால்களையும் ஒன்றாக இணைத்து நேராக நீட்டியிருக்க வேண்டும். இதை சில வினாடிகள் செய்தாலே போதுமானதாகும்.

திரும்பி படுக்கவும்

இப்போது நாம் திரும்பிப் படுத்துக் கொண்டு நம்முடைய இரண்டு முட்டிகளையும் நம்மை நோக்கியவாறு உயர்த்த வேண்டும். பிறகு நம் கைகளைக் கொண்டு அதை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் இடது புறமாகவும், வலது புறமாகவும் திரும்ப வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் முதுகுப் பகுதி வலுவாகும்.

மேலும் படிக்க – மனோதத்துவ நிபுணரை பார்ப்பதற்கான 7 அறிகுறிகள்..!

உடற்பயிற்சி

உடற்பயிற்சியின்போது நாம் நின்றுக்கொண்டு காலை விரித்தபடி இரண்டு கைகளையும் மற்றொரு காலைத் தொட்டு எடுப்போம், அதேபோல் இந்த யோகா பயிற்சியில் நம் கைகளைக் கொண்டு மற்றொரு காலை தொட்டவாறு சிறிது நேரம் இருக்க வேண்டும். இதை மாற்றி மாற்றி செய்வதன் மூலமாக உங்கள் இடுப்பு, முதுகு, கைகள், கால்கள் போன்ற அனைத்து எலும்புகளும் உறுதியாகும்.

இந்தப் பயிற்சிகளை தினமும் சிறிது நேரம் செய்தால் உங்களுக்கு உண்டான முதுகுவலி, முதுகு பிரச்சினைகள் போன்ற அனைத்தும் விலகும். இதை எல்லா வயதினரும் அவர்களால் முடிந்த வரை செய்யலாம். உங்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு இது போன்ற சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன