மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா பயிற்சி..!

  • by
yoga poses which relieves your stress

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகில் பல வருடம் ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வாழவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதற்கான வழிகளை பின் தொடர்வதில் ஒரு சில சிக்கல்கள் அவர்களுக்குள் ஏற்படுகிறது, அதில் முதலில் இருப்பது மன அழுத்தம். காலையில் எழுவது முதல் இரவு உறங்குவதற்கு இடையே நாம் ஏராளமான பிரச்சினைகளையும், சோதனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. இதை அனைத்தையும் தீர்த்து இரவில் உறங்குவதற்குள் நம்முடைய மனது ஏகப்பட்ட காயங்களை சந்திக்கிறது. இது அனைத்தையும் ஒவ்வொன்றாக போக்கி நம்முடைய மன அழுத்தத்தை மிக எளிமையான முறையில் போக்கும் வழிகளை நம்முடைய மூதாதையர்கள் யோகப் பயிற்சியின் மூலம் நமக்கு கற்பித்துள்ளனர். அதை நாம் பின்தொடர்ந்தால் நாமும் மனஅழுத்தம் இல்லாமல் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க முடியும்.

குழந்தை நிலை

நீங்கள் முதலில் யோகா மேட்டை தரையில் போட்டுக் கொண்டு அதில் முட்டி போட்டு அமர வேண்டும். பின்பு உங்கள் கைகளை பின்னோக்கி, கால்கள் பாதங்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும், பின்பு உங்கள் நெற்றிப் பொட்டை தரையில் படும்படி வைக்க வேண்டும். பிறகு ஐந்து முறை மூச்சை நன்கு இழுத்துவிடுங்கள் இதன் மூலமாக உங்கள் மன அழுத்தம் குறையும்.

பாலம் நிலை

பாலம் நிலை என்பது தரையில் பின்னோக்கி படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு உங்கள் கால்களை மேல்நோக்கி முட்டி போட்டவாறு வைத்து உங்கள் முதுகுப் பகுதியை தரையில் படும்படி வைத்து கைகளை இரண்டையும் கால்களை நோக்கி நீட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் தலைமட்டும் முழுமையாக தரையில் பட வேண்டும். இந்நிலையில் 4 முதல் 8 மணி வரை மூச்சை நன்கு இழுக்க வேண்டும்.

மேலும் படிக்க – வைட்டமின் டி சத்தினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

நின்று கொண்டு முன்னே வளைவது

நாம் நேராக நின்று கொண்டு நம்மை பாதியாக வளைத்து முன்னே வலைய வேண்டும். இந்த நிலையில் உங்கள் கைகள், கால்கள் மற்றும் உடல் போன்ற அனைத்தும் முழுமையாக நேராக வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில் உங்கள் உடலில் இருக்கும் அழுத்தங்கள் அனைத்தும் வெளியேறும்.

கழகு நிலை

நாம் நேராக நின்றுகொண்டு நம்மின் வலது காலை இடது காலில் சுற்றி வைத்துக் கொள்ளவேண்டும். பின்பு நம் மார்பை முன்னோக்கி வைத்து நம் இரண்டு கைகளையும் ஒன்றாக பிணைத்து மூக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலை உங்களை ஒரு நிலையாக சிந்திக்க வைக்கும், அதே போல் உங்கள் மன அழுத்தத்தை போக்கும்.

பிணம் நிலை

உயிரிழந்தவர்கள் எப்படி எந்த ஒரு அசைவும் இல்லாமல் தரையில் நீட்டி படுத்து இருப்பாரோ அதுபோல் நாம் கைகள், கால்கள் மற்றும் உடல் அனைத்தையும் உலர்த்திக்கொண்டு நம் உடலை நீட்டியவாறு படுக்க வேண்டும். இந்நிலையில் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் உங்கள் உடல் சார்ந்தவையாக இருக்க வேண்டும். இந்த நிலையில் மெதுவாக மூச்சை இழுத்து விட வேண்டும். இது உங்கள் உடலில் இருக்கும் அனைத்து அழுத்தத்தையும் அகற்றும்.

முக்கோண நிலை

நம்முடைய இரு கால்களையும் நன்கு விரித்து நிற்க வேண்டும், பின்பு நம்முடைய இடது கையை உங்கள் இடது கால் தொடும்படி பக்கவாட்டில் வைக்க வேண்டும். இதை அவ்வப்போது மாற்றிக் கொள்ள வேண்டும் அதாவது வலது கை மற்றும் வலது காலைத் தொடும் படி வைக்க வேண்டும். இது உங்கள் மன அழுத்தத்தை போக்குவது மட்டுமல்லாமல் உங்கள் செரிமான சக்தியையும் அதிகரிக்கும்.

கால் நீட்டி சுவர் நிலை

நம் சுவரை ஒட்டி படுத்துக்கொள்ள வேண்டும். பின் நம்முடைய இரு கால்களும் நேராக சுவரில் படும்படி வைக்க வேண்டும். உங்கள் இருகைகளையும் இடது மற்றும் வலது புறம் நோக்கியவாறு நீட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் இது போல் படுத்திருப்பதன் மூலமாக உங்களுக்கு நல்ல முடிவைத் தரும்.

பப்பி நிலை

நீங்கள் தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு, உங்கள் முட்டி தரையில் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு உங்கள் பின் பகுதியை மேல் நோக்கி, உங்கள் தலை மற்றும் கை பகுதியை தரையில் படும்படி படுத்துக் கொண்டு கைகளை தரையில் நேராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலை உங்களால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு செய்தால் உங்கள் மனம் அமைதியடையும்.

மேலும் படிக்க – ராகி மால்டில் மருத்துவ குணங்கள்..!

பூனை நிலை

பப்பி நிலையை போல் இந்த நிலையிலும் குப்புறப்படுத்துக் கொண்டு முட்டிப்போட்டு உங்கள் கைகளை தரையில் படும்படி வைக்க வேண்டும். ஆனால் உங்கள் முதுகுப் பகுதியை நன்கு உயர்த்தி மேல் நோக்கி வைத்து தலையை கீழே சாய்த்து படி மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும்.

எளிய நிலை

நாம் சாதாரணமாக சப்பலங்காள் போட்டு தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்பு உங்கள் முதுகை நேராக உயர்த்தி எண்ணங்களை ஒருநிலைப்படுத்த வேண்டும். யோகாவில் இருக்கும் மிக எளிய நிலை இதுதான், இது செய்வதன் மூலமாக உங்கள் மன அழுத்தம் அனைத்தும் குறையும்.

இந்த அனைத்து நிலைகளையும் செய்வதற்கு உடல் வலிமை போதுமானதாக இருந்தால் போதும். இதன் மூலமாக உங்களின் மன அழுத்தம் அனைத்தையும் போக்கி உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன