மன அழுத்தத்தைப் போக்கும் யோகா பயிற்சி..!

  • by
yoga poses to reduce stress

எல்லோரின் வாழ்க்கையிலும் கடினமான பகுதிகள் உண்டாகும், அதை நாம் எப்படி கடந்து வருகிறோமோ அதை பொருத்து தான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலரின் வாழ்க்கையில் உண்டாகும் கஷ்டங்களினால் அவர்கள் மனம் வருத்தப்பட்டு மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள் கிறார்கள். உங்கள் உணர்வுகளின் உற்சாகம் இல்லை என்றால் அது உங்கள் உடலையும், உடல் உறுப்புகளையும் பாதிக்கக் செய்யும். எனவே மன அழுத்தம் உள்ளவர்கள் அதை போக்குவதற்கான சிறந்த வழியாக பார்க்கப்படும் யோகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

முன்னே மடித்தல்

நாம் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும், பிறகு முதுகை நேராக நிமிர்த்தி நம்முடைய இரு கைகளையும் தலையின் மேல் தூக்கி கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது நாம் அப்படியே முன்னோக்கி முன்னே அமர்ந்தபடி வளைய வேண்டும். இந்த நிலையில் ஐந்து முறை மூச்சை இழுத்து விட வேண்டும். பிறகு எழுந்து அமர்ந்து மீண்டும் ஐந்து முறை மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக உங்கள் மன அழுத்தம் குறையும்.

கீழே மடித்தல்

நாம் தரையில் அமர்ந்து முன்னே மடித்ததைப் போல் இப்போது எழுந்து நேராக நின்று நம்முடைய இரு கைகளையும் பின்புறமாக கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு நம் தலையை அப்படியே முன்னோக்கி வளைக்க வேண்டும். அந்த நிலையில் உங்கள் இரு கைகளும் கட்டியவாறு மேல்நோக்கி பின் திசையில் இருக்க வேண்டும். இதை 30 வினாடிகள் இடைவெளி விட்டு நிமிர்ந்து மடிந்தும் இருந்தால் உங்கள் உடல் அனைத்தும் தளர்ந்து நிம்மதியாக உணர்வீர்கள்.

மேலும் படிக்க – உணவு முறைகளே ஆரோக்கியத்தின் அடித்தளம்..!

தலைகனம் குறைக்க

தலையில் இருக்கும் அனைத்து அழுத்தத்தையும் குறைக்கும் நிலைதான் இது, இதற்கு நாம் நின்று கொண்டு நம்முடைய இரு கால்களையும் இடது மற்றும் வலது புறமாக அகலமாக நீட்டிக் கொள்ள வேண்டும். பிறகு நம்முடைய கைகளின் உதவியால் தரையில் நம்முடைய தலையை தொடும் படி வைக்க வேண்டும். அதே நிலையில் 10 முறை மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலமாக நல்ல மாற்றத்தை உணரலாம்.

yoga for stress

குழந்தை நிலை

மன அழுத்தமே இல்லாத ஒரு பருவம் தான் குழந்தை பருவம், எனவே அந்தப் பருவத்தை போல் நாமும் குழந்தை போல் தரையில் முட்டி போட்டு அமர்ந்து கொண்டு நம்முடைய தலையை தரையில் படும்படி ஊன்றி இரு கைகளையும் முதுகுக்குப் பின்னால் மேலே தூக்கி வைத்திருக்க வேண்டும். இந்த நிலையில் உங்கள் முதுகை நேராக வைத்திருக்க வேண்டும், பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் இந்த நிலைக்கு வரவேண்டும். இதை தொடர்ந்து மூன்று முறை செய்வதே சிறந்தது.

கழுகு நிலை

கழுகு நிலை என்பது மிக எளிமையான நிலை, இதற்கு நாம் இரு கால்களையும் உள்புறமாக மடித்து அமர்ந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நம்முடைய இரு கால்களையும் முன் நோக்கி நேராக நீட்டி அதை அப்படியே மடக்கி நம் கால் மேல் அமர வேண்டும். பின்பு நம்முடைய இரு கைகளையும் முன்னே நோக்கி பாம்பைப் போல் பின்னிகொண்டு மேலே உயர்த்த வேண்டும். தேவைப்பட்டால் இந்த நிலையில் அமர்ந்து கொண்டு நம்முடைய இடது கை பக்கமாக தரையைத் தொடவேண்டும், அதையே வலது புறமும் செய்ய வேண்டும். இப்படியே செய்து நம்முடைய மூச்சினை ஐந்து முறை இழுத்து விட்டால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

மேலும் படிக்க – காயங்களை குணப்படுத்தும் இசை.!

நம் மனதில் உண்டாகும் அனைத்து பிரச்சனையும் தடுக்கும் சக்தி யோகாவிற்கு உண்டு. இனிமேல் எந்த சூழ்நிலையிலும் உங்கள் மனதை அமைதியாகவும் மற்றும் உங்கள் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி யோகாவை முயற்சி செய்து பாருங்கள். இதை தவிர்த்து மேலே குறிப்பிட்டுள்ள வழிகளை பின்தொடர்ந்து உங்கள் மன அழுத்தத்தை முற்றிலுமாக குறைத்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன