ஆவி நடமாடும் இடங்கள்!!!

  • by
worldwide places where ghosts believe to roam

ஆவி பேய் பிசாசு போன்றவை எல்லாம் மூடநம்பிக்கை என்று கூறினாலும் ஒரு பகுதி மக்கள் இவையெல்லாவற்றையும் நம்பிக் கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி நம்பப்படும் சில பகுதிகள் மர்மமான பகுதிகளாக காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

டெட்மேனின் தீவு

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் வாக்கூவர் துறைமுகத்தில் அமைந்திருப்பது தான் இந்த டெட்மேனின் தீவு. இந்தத் தீவானது 1888 ஆம் ஆண்டு மற்றும் 1892 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட பகுதியில் மயானமாக  பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சின்னம்மையால் பலரும் அந்த காலகட்டத்தில் இறந்திருக்கின்றனர். அவர்களை இந்த இடத்தில்தான் அடக்கம் செய்து இருக்கின்றனர். எனவே இந்தப் பகுதி யாராலும் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. அதன்பிறகு கனடாவில் உள்ள கடற் படையினரால் இந்த இடம் கையகப்படுத்தப்பட்டு சரி செய்யப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் இப்பகுதியில் போலீசார் தங்கி வேலை செய்யும் போது இங்கு புதைக்கப்பட்ட மக்களின் கூச்சல் மற்றும் அவர்களுடைய எலும்புகளின் சத்தம் கேட்டதாக கூறுகின்றனர்.

மேலும் படிக்க – தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவர்கள்

ஓகினா வா தீவு

ஜப்பானில் உள்ள தெற்கு பகுதியில் அமைந்திருப்பது தான் இந்த ஒகினாவா தீவு. இங்கு இருக்கும் கட்டிடங்கள் அனைத்தும் முழுமையாக கட்டப்பட்டிருக்காது. அந்தப் பகுதியில் உள்ள கெட்ட சக்தி தான் இந்த கட்டிடங்களை முழுமையாக கட்ட விடாமல் தடுக்கிறது என்று மக்கள் நம்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த பகுதியில் பல மர்மமான விஷயங்கள் நடந்துள்ளதாகவும் கூறுகின்றனர். அப்படி ஒரு நிகழ்வு தான், ஒருமுறை வகுப்பறையில் இருந்த சிறுவன்  தன்னிடமிருந்த பொம்மையை வெளியில் தூக்கி எறிந்து இருக்கிறான். அதை ஏன் என்று ஆசிரியர் கேட்டதற்கு வெளியில் உள்ள சிறுவன் கேட்டான் என்று அவன் பதில் அளித்திருக்கிறான். ஆனால் வெளியில் யாருமே இல்லை என்பதுதான் உண்மை. 

 அல்கட்ராஸ் தீவு

சான் பிரான்சிஸ்கோ உள்ள விரிகுடாவில் அல்கட்ராஸ் தீவு உள்ளது. இந்த தீவில் உலகப் புகழ்பெற்ற சிலை ஒன்று உள்ளது. அந்த சிறையின் பெயர்தான் அல்கட்ராஸ். இங்கு சில சமயங்களில் சிறையில் உள்ள கதவுகள் தானாகவே திறந்து மூடுவதாக கூறுகிறார்கள். மேலும் இங்கு ஒளிரும் கண்களை உடைய ஒரு மனிதன் அங்கு இருப்போரின் கழுத்தை நெறிப்பதை போன்று தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க – கொரானா குறித்து பரவும் புரளிகள் பயங்கள்!

வைய்ட் தீவு

இங்கிலாந்தில் உள்ள தெற்கு கடற்கரையில் இந்த வைய்ட் தீவு அமைந்துள்ளது. இந்த இடம் உலகிலுள்ள அமானுஷ்யங்கள் நிறைந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு உள்ள ஓட்டல்கள் மருத்துவமனைகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான ஆவிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு எப்போதுமே ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் அவரைப் பின்தொடர்வது போல ஒரு மாயை இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன