உடற்பயிற்சிகள் இல்லாமல் ஒரே இடத்தில் வேலை செய்கிறீர்களா!

  • by
Work Without Exercise Cause Problems

ஒரு காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு வேலைகளும் நம்முடைய வாழ்க்கையை இணைக்கும் வகையில் இருந்தது. இதனால் நாம் உடற்பயிற்சிக்கு என்று தனியான நேரங்களை ஒதுக்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இப்போது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கையில் செய்யும் வேலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் அமர்ந்து செய்கிறோம். இது எந்த அளவிற்கு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதில் பலரும் அறியாமல் இன்று வரை உடற்பயிற்சி என்பதே செய்யாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

மன அழுத்தம் உண்டாகும்

நாம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதன் மூலமாக நமக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். இதனால் நாம் செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் மிக விரைவில் முதுமையை உணர்வோம். எனவே இது போல் வாழ்பவர்கள் தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியும்.

மேலும் படிக்க – ராஜ்மா சாப்பிட்டி வந்தால் ராஜா போல் தேகம் ஆரோக்கியம் பெறும்..!

நீரிழிவு நோய்

இன்றைய காலகட்டத்தில் 30 வயதை கடந்தவுடன் ஏற்படும் நோய் நீரிழிவு நோய். உலக சுகாதார அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் நீரிழிவு நோயின் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்காக நாம் தினசரி உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக 58 சதவீதம் வரை நீரிழிவு பாதிப்பிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

உடல் பருமன்

உடற்பயிற்சிகள் ஏதும் செய்யாமல் ஒரே இடத்தில் பல நாட்கள் அமர்ந்து வேலை செய்வதன் மூலமாக நம் உடல் எடை எளிதில் அதிகரிக்கும். ஒருசிலர் உடற்பயிற்சிகள் செய்யாமல் அதிக கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொள்வது, அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். எனவே உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக உடற்பயிற்சி செய்வதை தொடங்குங்கள், இல்லையெனில் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் நினைப்பதைப் போல் வாழ முடியாது.

மேலும் படிக்க – ஆப்ரிகாட் பழத்தின் அதிசயம் இதுதானுங்க..!

உயர் ரத்த அழுத்தம்

40 வயதை கடந்த அனைவரும் தங்கள் கையில் ரத்த அழுத்தத்தை கணக்கிடும் கருவியை வைத்துக் கொண்டு திரிகிறார்கள். இதன் மூலமாக நமது உடலில் எந்த அளவு ரத்தத்தில் சக்கரை உள்ளது என்பதை அறிந்து கொள்கிறார்கள். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதனால் நமக்கு ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை கண்டறிந்து ஆரம்ப முதல் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இருதய நோய்க்கான காரணம்

உலக சுகாதார நிறுவனம் அமைப்பு இருதய நோய் வருவதற்கான காரணங்களை வெளியிட்டுள்ளது. புகை பிடித்தல், அதிகக் கொழுப்பு உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இதனால் இதயநோய் ஏற்படுகிறது. இந்த மூன்றையும் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமாக நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதற்கு நீங்கள் புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும், அதை தொடர்ந்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

மேலும் படிக்க – இரவு தூக்கத்தை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகளும்….. தீர்வுகளும்….!

மார்பக புற்றுநோய்

சுறுசுறுப்பில்லாமல் சோர்வாக எப்போதும் ஒரே இடத்தில் வேலை செய்யும் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக காணப்படுகிறது. இதன் வளர்ச்சி இன்மையினால் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. எனவே அவர்களின் உடல் ஈஸ்ட்ரஜன் அளவை அளவை அதிகரிப்பதற்காக தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். ஆண்களை விட பெண்கள் திருமணம் ஆன பிறகு உடற்பயிற்சி என்பதை ஒரு துளி கூட செய்வதில்லை எப்போதாவது நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள், எனவே இதை கருத்தில் கொண்டு தினமும் முடிந்தவரை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

ஒரே இடத்தில் அசையாமல் இருந்து வேலை செய்வதன் மூலமாக உடற்பயிற்சிகளை தவிர்ப்பதன் மூலமாக எல்லோருக்கும் தூக்கமின்மை, சிறுநீரக பிரச்சனை மற்றும் எலும்பு பலவீனம் ஆகுதல் போன்றவைகள் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு தினமும் அதிகாலையில் 20 நிமிடங்கள் உடற்பயிற்சியும், 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக உங்கள் ஆரோக்கியத்தை புதுப்பிக்க முடியும் அதே போல் எப்போதும் இளமையாகவே தன்னம்பிக்கையுடன் வாழ உடற்பயிற்சி அவசியம் ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன