கோவித் வைரஸ் கால ஓர்க் ப்ரம் ஹோம் அலப்பரைகள்

  • by

கோவிட் -19 வெடித்ததை அடுத்து, வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையால் பலர் சவாலான நேரத்தில் உள்ளது. வேலை உலகளவில் வழக்கமாகிவிட்ட நிலையில், பிஜி எனப்படும் பேயிங் ஹெஸ்ட் பகிரப்பட்ட தங்குமிடங்களில் வாழும் ஐடி மற்றும் மற்ற  பணி செய்வோர்கள் புதிய வேலை முறைக்கு ஏற்ப மாற்றுவது சவாலாக உள்ளது.

பிஜியில்  ஒர்க் ப்ரம் ஹோம் சிக்கல்:

பி.ஜி. தங்குமிடத்தில் வைஃபை வழங்கப்பட்டாலும், எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்வதால் அது தொடர்ந்து குறைந்துவிடுகிறது, அனைவரும் ஒரு சேர ஒரு வைஃபை வைத்திருந்தால், அதே இடத்தில் அருகில் இருக்கும்  மற்ற வேலை செய்வோர் சிக்கலில் மாட்டுகின்றனர். இங்கு வேலை செய்யும் பொழுது சிக்னல் கிடைப்பதில்லை வேலையும் நேரத்திற்கு முடிக்க முடிவதில்லை. 

மேலும் படிக்க: இந்திய ராணுவம் கொரோனாவுக்கு எதிராகப் போராடத் தயாரா..!

தொடங்கியது மின் வெட்டு: 

பிஜியில்   நெட் ஒர்க் சிக்னல் தொல்லை என்றால், தற்பொழுது சில நாட்களாக இந்த வட்டாரத்தில் மூன்று முதல் நான்கு மணி நேர மின்வெட்டுக்கள் உள்ளன. 

 மொபைல் ஹாட்ஸ்பாட்டைப் பயன்படுத்த முயற்சித்து பார்த்தால், ஆனால் அதுவும் சீரான வேகத்தில் கை கொடுப்பதில்லை.   மார்க்கெட்டிங், டிஜிட்டல் மீடியா, ஐடி, ஆப்கள் கொண்ட இந்த பெங்களுரில் இளக்குகள் எல்லாம் விதவிதமாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள அத்தனை இலக்குகளுக்கும் ஆணிவேர் இண்டர்நெட் அது சரியாக இல்லை என்றால் சறுக்கல்தான். 

வீட்டில் இருந்து வேலை பார்ப்பது போராட்டம்: 

ஒர்க் பரம் ஹோம்  வாய்ப்புகள் முடியாத கால கட்டங்களில்  செய்யலாம். ஆனால் எந்த வித வெளி நடமாட்டமும் இல்லாத காலத்தில்  அனைவருக்கும் கற்பிக்கப் போகும் பாடமானது என்னவென்றால், தொழில்நுட்பத்தை  நன்மைக்காகப் பயன்படுத்துவதாகும். எதிர்மறையானது என்னவென்றால், ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை மின்வெட்டுகள் உள்ளன. எனவே  மொபைல் ஹாட்ஸ்பாட்டை நான் நம்பியிருக்க வேண்டும். அதுவும் சீரான வேகத்தில் இயங்க வேண்டியது அவசியம் ஆகும். அடுத்து வரும் காலங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற பாடத்தை இன்றைய அனுபவங்கள் கற்றுக் கொடுத்துவிட்டது. 

வீட்டில் இருந்து வேலை செய்யும் பொழுது  நமக்கு அலுவலுக உணர்வு, வேகம் நேரத்திற்கு இதனை செய்தல் ஆகியவை எல்லாம் சரியாக வராது ஆனால் இதனை சரியாக செய்ய வேண்டும்.  வீட்டில் இருந்து வேலை செய்யும் பொழுது இலக்குகள் எல்லாம் முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். மன அழுத்தம், கோவம், டென்சன் இலக்கை முடிக்க வேண்டிய  நெருக்கடி எல்லாம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் முக்கியமான தருணத்தை அதிகரிக்கச் செய்கின்றது. 

மேலும் படிக்க: கொரோனாவுக்கு எதிராக போராடும் வீடுகளில் இருக்க வேண்டியவை..!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன