பெண்களின் ஆடை அழகோவிய கலெக்சன்கள் இதோ!

  • by

பொங்கல் விழா கொண்டாட்டங்கள் உலகெங்கிலும் இந்திய மக்களால் அறுவடையை போற்றி கொண்டாடப்படுகின்றது. பொங்கல் திருநாளில் புதுப்பானை, பச்சரிசி, கரும்பு, வெள்ளம், வீடு வெள்ளையடித்தல் போல் புத்தடைகள் வாங்குவது முக்கியமான ஒன்றாகும். 


பாரம்பரியமிக்க இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் புத்தாடைகளுக்கு என் பல்வேறு   வகையில் நாம் செலவிடுகின்றோம். அதிலும் பெண்கள் இந்தப் பொங்கலுக்கு என தங்கள்   வெரைட்டிஸ் கலெக்சன் லிஸ்டு வைத்திருப்பார்கள். 


நாம் அணியும் உடைகள் பல்வேறு வேலைபாடுகள் கொண்டு, பல வண்ண நிறங்களின் கோர்வையானவை ஆகும். இந்திய உடைகளில் இருக்கும் பலவகையான வேலைப்பாட்டிற்கு ஈடு இணையே இல்லை அந்தளவிற்கு நமது உடையில்  நிறம், துணியின் தன்மை போன்றவை அனைத்தும் மாறுப்பட்டிருக்கும். அதற்கு மிகச் சிறப்பான சான்று, நம்நாட்டு புடவை மற்றும் ஆடைகளுக்கு வெளிநாட்டு சந்தையில் அதிகமான வரவேற்பு இருப்பதுதான். இப்பொழுது பெண்களால் அணிந்து கொள்ளப்படும் நாகரீகமான ஆடைகளின் போக்குகளைப் பற்றிய நம்மில் பலருக்கு ஆர்வம் இருக்கும் அதனை இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். 

மேலும் படிக்க – பன்னீர் ரோஜாவை கொண்டு அழகு செய்வோம்!

நீளமான ஓன் பீஸ் ஆடை:

ஒன் பீஸ் ஆடையானது கழுத்து முதல் கணுக்கால் வரை நம் உடல் அமைப்பிற்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்ட ஒன்று ஆகும். இது  நீளமான அங்கி போன்ற ஆடையாகும். இந்த ஒன்பீஸ் ஆடையானது பெரும்பாலும் அதிக வேலைப்பாடுகளுடன் விருந்து மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்வது போல் சேட்டின் சில்க் மற்றும் காட்டன் துணிகளில் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றது. இவை வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விலை இருக்கும். 

சல்வார் கமீஸ்:

சல்வார் கமீஸ்  காலத்திற்கு ஏற்றார் போல் தையல், கட்டிங் அனைத்தும் மாறி வருகின்றது.  உடலின் மேற்புறம் அணியும் டாப்பானது சரிகையுடன் வரும் லேஸ் அல்லது சாதாரண லேஸ்களுடன் மிகவும் அழகான கவரும் தோற்றதுடன்  வடிவமைக்கப்பட்டு அதற்கு அணியும் பேன்ட்டுகள் அதிக பளபளப்பில்லாதவாறு வந்திருக்கின்றன. பொதுவாக நகரம். பெரு நகரங்களில் துப்பட்டாவுடனும் அவை இல்லாமலும் பெண்கள் அணிந்து வருகின்றனர்.

அனார்கலி சூட்:

சல்வார் கமீஸ் ஒரு டிரெண்டாக இருந்த அதே நேரத்தில் அதனை ஓவர் டேக் செய்து அழகான வடிவமைப்பல பெயர்  பெற்றது அனார்கலியாகும். இதனை அடுத்த வெர்சன் என்றும் இதைக் கூறலாம். அனார்கலி கழுத்திலிருந்து இடுப்பு வரை உடலைச் சிக்கென பிடித்ததுபோல் வடிவமைப்பு பெற்றது.  இடுப்பு பகுதி முதல் சிறிது சிறிதாக அகன்ற ஃப்ளோர்கள் எனப்படும் பீளிட்கள் கொண்டு இருக்கும். இவைகள் கணுக்கால் வரை நீண்டிருக்கும். 

அனாகலி சற்று  பிரம்மாண்டமானது மேலும் இவை திருமண வைபோகங்களுக்கு அணிய ஏற்றவை. அனார்கலியானது  சுடிதார் மாடலில் இருக்க மிகவும் ஆடம்பரமான துப்பட்டாவுடன் உங்களின் தோற்றத்தை பிரம்மாண்டமாக காட்ட உதவுகின்றன. 

இதனை   அனார்கலி ஆடைகள். மணப்பெண்கள் அணிந்து கொள்ளக்கூடிய பிரத்யேகமான அனார்கலி ஆடைகள் மிகவும் கம்பீரமாகவும், அழகிய தோற்றத்தை தரும் வகையிலும் ஆடரின் பேரில் உருவாக்கித் தரப்படுகின்றன.  

நெட் குர்தா:

இன்றைய டிரெண்டிங்கில் முக்கிய இடம் பெற்ற ஒன்று என்றால் அது நிச்சயம் நெட் குர்தாதான், இன்றைய இந்தியப்  பெண்களால் அதிகம் விரும்பி அணியப்படும் சமீபத்திய குர்தா ரகங்களில் முக்கிய இடம் பெறுகின்றது. 

இது  நீண்ட குர்தாவில் நெட் (வலை) வேலைப்பாடு செய்யப்பட்டு அழகிற்கு அழகு கூட்டுவதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். 

குர்த்தியின் உள் துணியின் பிரிண்ட்  மேற்புறம் இருக்கும் வலை போன்ற துணியின் வழியாகத் தெரிவது மிகவும் அழகான தோற்றத்தை பார்ப்பவருக்கு தரும்.  இது அணியும் பெண்களின் கணுக்கால் வரை நீண்டிருக்கும். நெட் லேயர்களில் குர்தாவின் மேல் ஜாக்கெட் போன்று அதுவும் கணுக்கால் வரை நீண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது  பார்க்க ரிச்சான தோற்றத்தைத் உண்டாக்கும்.

பிரிண்டடு  லெஹங்கா:

லெகங்கா அன்றைய பட்டுபாவடையைப் போன்றது ஆனால் கட்டிங்களில் மாற்றம் கொண்டது.  லெகாங்கா இடுப்பிலிருந்து நீண்டு அகன்றிருக்கும் பாவாடை மற்றும் , மார்பை மறைக்கும் சோளி ரகத்தில் , அழகான வேலைப்பாட்டுடன்  வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இது  துப்பட்டா கொண்டது இதன் அழகான பிரிண்டட் செய்யப்பட்ட ஆடையது அணிபவருக்கு அழகு மற்றும் கம்பீரம் கொடுக்கும்.  இன்றைய லெகங்காக்கள் பெரும்பாலும் குட்டையாகவும், கவர்ச்சிகரமாகவும் வடிவமைப்பு கொண்டது. 

மேலும் படிக்க – உதடுகள் பொலிவுடன் இருக்க இதனைப் பின்பற்றவும்

சேலைகள்:

காட்டன் புடவை உட்பட எந்தப் புடவையாக இருந்தாலும் ஸ்டைலாக டிசைன் செய்து வடிவமைப்பாளர்கள் மெருக்கூட்டுகின்றனர் அதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. குறிப்பாக, மாதம் மாதம் ஒரு ஸ்டைல் புடவையில் வந்து கொண்டே இருக்கின்றன. அப்படி அண்மையில் டிரெண்டாக இந்த ஸ்டைல் மக்களை ஈர்க்கின்றது.

திருமணத்திற்கு  தயாராகும் பெண்கள் தொடங்கி திருமணத்தில் கலந்துகொள்ளும் பெண்கள் வரை அனைவரும் இந்த ஸ்டைலை பின்பற்றத் துவங்கியுள்ளனர். அலுவலகப்  பெண்கள் தங்களுக்கு ஏற்ப நேர்த்தியான தேர்வுடன் அணிந்து அசத்துகின்றனர். 

புடவை கட்டுவதில் மாற்றம் இல்லை அன்று, இன்று புடவை அணிய பல்வேறு டிசைன்கள் பின்பற்றப்படுகின்றன. பெண்கள்  அணியும் பிளவுஸில்தான் பல்வேறு டிசைனை பொருத்தியுள்ளனர். 

பிளவுஸிலேயே இடது புறத்தில் முன் பக்கம் இரண்டு லேயர்கள் வருவது ஒரு ரகம் வடிவமக்கப்பட்டுள்ளது.  புடவையில் உள் பக்கம் வரும் லேயர் எந்தவித வார்புகளும் இனிறி அணிந்துகொள்வதுபோல் இருக்கும். மேற்புறம் உள்ள லேயரில்தான் விருப்பமான வகையில் எம்பராய்டரி டிசைன், ஸ்டோன் கற்கள் என பதித்து தைக்கின்றனர்.

பிளவுஸ்ஸின் லேஸ்கள்,  டிசைன்கள் வைத்து வடிவமைப்பு அனைவரது விருப்ப்ம் ஆகும். பிளவுஸின்   பின்புற இடையிலும் ஒரு கயிறு பொருத்தப்பட்டுள்ளது. சுங்கை எப்போதும் போல் புடவை அணிந்து அதன் மேல் இந்த லேயர் சுங்கை இடுப்புப் பகுதியில் இணைத்துக் கட்ட வேண்டும். சிலர் அந்த சுங்கில் பாம் போன்ற பாம் , கற்கள் பதித்த டிசைன்களையும் பொருத்திக்கொள்கின்றனர்.முதுகுக்குப் பின் கட்டும் சுங்கு போல் இப்படி இடுப்புப் பகுதியிலும் சுங்கு வைத்து தைக்கும் பிளவுஸ் டிசைன் தான் தற்போது பெண்களிடையே அதிக வரவேற்பைக் பெற்று  அணியப்படுகின்றன. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன