சர்வதேச சரித்திர சாட்சிபீடம் பெண்ணின் வளர்ச்சி

  • by

உலகம் முழுவதும் மகளிர் தினத்தின் முக்கிய அம்சங்கள் பல உள்ளன. 1910 ஆம் ஆண்டு டென்மார்கின் கோபன் ஹேகனில் பெண்களுக்கான சம உரிமை மற்றும் வாக்குரிமை ஆகியவை வலியுறுத்தி மகளிர் மாநாடு நடைபெற்றது. முதல் உலகப் போர் நேரத்தில் அமைதியை வலியுறுத்தி பெண்கள் நடத்திய போராட்டம் தொடங்கினார்கள் . பின்  மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்க தொடங்கி விட்டோம். 

உலகத்தை உருவாக்கியவள் பெண், உலகத்தின் உன்னதமான படைப்பு எனில் அது பெண்.  பெண் உலகின் முக்கிய ஒளியாவாள் அவளை உணர்ந்து அவளுக்கான முறையான அங்கிகாரத்தை  கொடுக்க வேண்டிய நமது கடமை ஆகும். 

அறிவின் விடியல் பெண்: 

பெண் என்பவள் அறிவின் பிறப்பிடம்,  அவளை சரியாக வழி நடத்தும் சமுதாயம் மிகப் பெரிய அளவில் சாதிக்கும். முறையான கல்வி, முழுமையான பயிற்சி,  வாழ்வை கணக்கிடும் திறமை, பல் துறை பயிற்சிகள் அவளுக்கு கொடுக்கும் பொழுதும் தன்னை முன்னிருத்தி நிருபிப்பவளே பெண் ஆவாள். பெண்மை என்பது  ஆளுமை, கம்பீரம், அறிவாற்றல், நிர்வாகம், ஆட்சிமை இவைகளின் பிறப்பிடம் தான் பெண். 

பெண் அழகு: 

பெண் அழகானவள் அவள் கருப்பு, வெள்ளை,  உடல் வாகு இவையெல்லாவற்றையும் விஞ்சியவள் அவளை அவளாக நிலைத்திரும் பொழுது அவள் அழகாய் ஜொலிப்பாள். வாழ்வில் அவளின் போராட்ட  நிமிடங்களை பொறுமையாக அவளால் மட்டும்தான் கடக்க முடியும் என்ற சூழலில் வெகுண்டு எழுந்து வேட்டையாடும் குணத்துடன் பயணிக்கும் அவளின் துணிவில்  ஆயிரம் அழகுண்டு. மல்லிகை பூ நிறமானாலும் நேர்மை உழைப்பு, உண்மை, மனதில் உறுதியுடன் உலகை எதிர்கொள்ளும் அவளின் குணம் ஒரு அழகு. கருணை உயிர்களிடத்தில் அன்பு இவையொத்த குணங்கள்தான் பெண்மை அதுதான் அழகு. 

வாழ்க்கை கல்வி: 

ஒரு தேசம்  தலைக்க வேண்டுமெனில் அந்த தேசத்தின்  பெண்களுக்கு முறைபடுத்தப்பட்ட கல்வி, பயிற்சியுடன் கூடிய பணி, ஆண்களுக்கு நிகரான ஆளுமையை எந்த தேசம் பெண்ணுகு கற்றுக் கொடுகின்றதோ அந்த தேசம் வளர்ச்சியின் உச்சத்தில்   இருக்கும். 

மேலும் படிக்க இந்திய பெண்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா..?

பாதுகாப்பு: 

பெண்மை என்றாலே பாதுகாப்பு, பாசம்தான் பெண் உறவுகளிடன் இணைவிடம், உறவுகளின் புதுவிடம், உணர்வுகளின் சங்கமம் ஆனால் உயர்வான அவளுக்கு அழகு என்ற ஆயுதம்,  வணிகம் என்ற சந்தைகள் புதிய பந்தயங்கள் வைக்கின்றன. இன்றைய சூழலில் அதனை உணரும் கண்மணிகள் வாழ்வின் உன்னத களம் காண்வார்கள்.

கல்வியை கற்றுக் கொள், கற்றத்தைப் பகிர்ந்து கொடு, பாதுகாப்பாய் நீதான் இருக்க வேண்டும். உன்னை நீ ஆயுதமாய் மாற்று, மெழுகாய் உருக்கி இலக்கை அடைய முயற்சி செய்,  தடம் மாறாதே, தடங்கள் வரும் பொழுது தளராதே 

வல்லமை  படைக்கும் சக்தி நீ என்பதை  வாழ்கையில் உணர்த்திவிடு. உயிர்களிடத்தில் அன்பு காட்டு, உன்னை சதை பிண்டமாய்  பார்க்கும் உயிர்களுக்கு உதை கொடு, உன்னை நிருபி உயர்வாய், உயர்த்துவாய் உலகை உன்னோடு வாழும்  மனித சமூகம் உயர்வடையும். 

பெண் குழந்தைகள் பாதுகாப்பு:

இது தாய் பிறந்த தேசம் , நமது தாயை பிறக்கச் செய்ததும் ஒரு தாய்நாடு தான், தாய் என்பவள் பெண், உயிர்களில் பெண் என்பவள் பெரும் மதிப்பிற்குரியவள் அவள் தன்னை உருக்கி சுற்றத்தை வளர்பாள், கல்வி கொடுப்பதுடன் , வாழ்வின் வழிகளை அவள் கடக்க வேண்டும். அவளுக்கு சமுதாயத்தில் நடக்கும் பாலியல் வன் கொடுமைகளை களைய வேண்டும்.

பெண்ணை தன்னை தற்காத்துக் கொள்வது அவசியம் ஆகும். அவளுக்கு தற்காப்பு கலை கற்றுத்தருவது நல்லது. ஆண்களை கண்டித்து வளர்க்கும் சமுதாயத்தால் தான் பெண்களுக்கு இந்த கலை கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கு. அறிவையும், அவளுடைய ஆக்கம் மட்டுமே மதிப்பிட பட வேண்டும். சதைபிண்டமாய் அவள் சித்தரிக்கப்படுவது சரி செய்யபட வேண்டும்.

உரிமைகளை கேட்டால் கொடுக்க மாட்டார்கள் உரிமை எடுத்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டிய பெண்களான நமது கடமை ஆகும். நிதி மேலாண்மை பெண்களுக்கு இன்று அவசியமானது ஆகும். பெண்களை குறி வைத்து வணிக அமைப்புகள் செய்யும் சந்தைகளை நிராகரியுங்கள், இயற்கையான் நின்றால் செயற்கை செயலிழந்து போய்விடும்.

மேலும் படிக்க: இந்திய பாதுகாப்புத்துறையில் பட்டாசு கிளப்பும் பாரதப் பெண்கள்..!

தொழிலள் பல உள்ளன, நெசவு செய்தல், கை விணைப் பொருட்கள் செய்தல், கலை திறன்கள் பல கற்று கொள்வது அவசியம் ஆகும். பெண்களுக்கு தொழிற்கல்வி என்பது அவசியம் ஆகும். அதனை அவர்கள் கற்றுத் தொடங்கினால் அவர்கள் சார்ந்த சமுதாயத்தையே கரையேற்றும் வல்லமை கொண்டவர்கள் ஆவார்கள்.

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன