மஞ்சள், உப்பு, வேப்பிலை கொண்டு உங்கள் வீட்டைச் சுற்றி உள்ள கிருமிகளை அழிக்கலாம்..!

  • by
with turmeric,salt and neem leaves you can kill bacteria and virus

அக்காலம் முதல் இக்காலம் வரை நாம் மஞ்சள் மற்றும் வேப்பிலையை கிருமிநாசினியாக பயன்படுத்தி வருகிறோம். நம் வயிற்றுக்குள் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் சிறிதளவு வேப்பிலை விழுதை சாப்பிட்டால் போதும், அந்த கிருமிகள் அனைத்தும் அழியும். அதேபோல் மஞ்சளில் ஏகப்பட்ட எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. எனவே இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டிற்குள் நுழையும் கிருமிகளை அழிக்க முடியும்.

வேப்ப இலை

ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய மருத்துவ இலைதான் இந்த வேப்ப இலை. இதைக் கொண்டு பலவிதமான நோய்களை அழிக்க முடியும். இது அண்டி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்றவர்களை கொண்டது.

மேலும் படிக்க – தைரியமாக கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை..!

இனிப்பான உள்ள பொருட்களை தவிர்த்து இது போன்ற கசப்பு நிறைந்த பொருட்கள் தான் உங்கள் உடலில் பலவித நன்மைகளை உண்டாக்குகிறது. அதிலும் வேப்ப இலை சர்க்கரை நோயை தடுக்கிறது, வயிற்றுப் புழுக்களை அழிக்கும், வயிற்றுப் போக்கை குணப்படுத்தும், ரத்த ஓட்டத்தை சீராக்கி இருதய நோயை வரவிடாமல் தடுக்கும், கீழ்வாதம், காய்ச்சல், ஜலதோஷம் போன்ற அனைத்தையும் தடுக்கும் ஆற்றல் வேப்பிலைக்கு உண்டு.

மஞ்சள் பயன்பாடு

மஞ்சள் ஒரு கிருமி நாசினி தான் இதை ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதைக்கொண்டு சளி, காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற அனைத்தையும் குணப்படுத்த முடியும். பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதன் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைத் தவிர்த்து உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தும் செயல் மஞ்சள் செய்கிறது.

மஞ்சள், உப்பு, வேப்பிலை

ஒரு கிருமிநாசினி ஒரு பொருள் மிக எளிதில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பயன்படுத்துவார்கள், அத்தகைய பயன் கொண்டது தான் உப்பு. உணவுகளில் கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் உண்டாகாமல் இருப்பதை உப்பு பார்த்துக்கொள்கிறது.

மேலும் படிக்க – அக்காலத் தமிழர்கள் தொற்றுகளை எப்படி தடுத்தார்கள்..!

இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீரில் ஊறவைத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அதன் மூலமாக உங்கள் வீட்டை சுற்றி எந்த ஒரு கிருமிகள் மற்றும் நோய்த் தொட்டுக்கொள்ளும் அண்டாது.

இதைதான் அக்காலத் தமிழர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தார்கள். எனவே வீட்டிற்குள் நுழைபவர்கள் இந்த நீரைக் கொண்டு கைகள் மற்றும் கால்களை கழுவுமாறு கேட்டுக்கொள்ளுங்கள். இதைத்தவிர வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பினால் இதைக்கொண்டு உங்களை சுத்தப்படுத்துங்கள். இதனால் கரோனா வைரஸ் மட்டும் அல்லாமல் எந்த ஒரு தொற்றுக்களும் உங்கள் வீட்டிற்குள் நுழையாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன