பால் இருந்தால் போதும் உங்கள் முடியை நேராக மாற்றிக் கொள்ளலாம்.!

with the help of milk you can straighten your hair

பெண்களின் கூந்தல் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. அதிலும் ஒரு சிலருக்கு நேரான முடியும் மற்றொரு சுருளை முடியும் இருக்கிறது. நேரான முடி இருப்பவர்கள் அதை சுருட்டு வதற்காக ஏகப்பட்ட உபகரணங்கள் விற்கின்றார்கள்.  அதேபோல் சுருட்டை முடி உள்ளவர்களுக்கும் இதுபோன்ற பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் இதை பாலைக் கொண்டு இயற்கையாகவே எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நம் கூந்தல் மிகவும் எளிதில் சேதம் அடைய கூடிய ஒன்றாகும் இதை நாம் அதிகளவில் தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது. ஆனாலும் நம் கூந்தல் அழகை பெறுவதற்காக ஏகப்பட்ட ஷாம்புகள் மற்றும் கூந்தல் உபகரணங்களை பயன்படுத்துகிறோம். இதனால் நமது கூந்தல் அதிக அளவில் சேதமடைகிறது இதை தவிர்த்து இயற்கை முறையில் நமது கூந்தலை ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க – கத்திரிக்காயை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்குங்கள்.!

ஸ்ட்ரைட்னிங் செய்வதற்காக நாம் மூன்று கப் பாலை எடுத்துக் கொள்ளவேண்டும். இது எந்த பாலாகவும் இருக்கலாம் தேங்காய் பால், பசும்பால் என எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் பவுடர் பால் கூட நாம் பயன்படுத்தலாம். பிறகு அதில் சிறிதளவு வாழைப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை சேர்த்துக்கொள்ளலாம் இது உங்களுக்கு தேவை என்றால் சேர்த்துக் கொள்வது நல்லது.

உங்கள் கூந்தலை ஸ்ட்ரைட்னிங் செய்வதற்கு முன்பு அதை குளிர்ந்த நீரால் நன்கு அலச வேண்டும். அச்சமயத்தில் எந்த ஒரு ஷாம்பயும் பயன்படுத்தக் கூடாது. பிறகு உங்கள் கூந்தலை நன்கு காயவைத்து விட வேண்டும். பாலினை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும், பிறகு உங்கள் தலை முழுக்க அந்த கலவையை ஸ்பிரே செய்ய வேண்டும். இது உங்கள் கூந்தலின் வேர் வரை செல்கிறதா என்பதை நன்கு கவனிக்க வேண்டும்.

மேலும் படிக்க – பண்டைய கால மனிதர்கள் வழுக்கைகளை அகற்றும் விசித்திர வழிகள்.!

ஸ்பிரே செய்த பிறகு கூந்தல் முழுக்க சீப்பைக் கொண்டு வாரிக்கொண்டே மசாஜ் செய்யவேண்டும். உங்கள் முடி நேராக ஆகும்வரை இதை செய்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும். பால் வாசனை அவ்வளவு எளிதில் போகாததால் இரண்டு அல்லது மூன்று முறை அலசுவது நல்லது.

இதை செய்த பிறகு உங்கள் கூந்தல் ஸ்ட்ரைட்டாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இதை இயற்கை முறையில் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் எனவே இதற்காக பணத்தை செலவு செய்யாமல் இந்த வழியின் மூலமாக பயன் பெறுங்கள்.

1 thought on “பால் இருந்தால் போதும் உங்கள் முடியை நேராக மாற்றிக் கொள்ளலாம்.!”

  1. Pingback: பெண்களின் முகத்தில் முடிகள் வளர்வதை தவிர்ப்பதற்கு?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன