தேன் இருந்தால் போதும், ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்..

with honey you can brighten your skin

அக்காலம் முதல் இக்காலம் வரை தேனின் சிறப்பு எல்லோரும் அறிந்த ஒன்றாகும். வீட்டு சமையலறை முதல் மருந்துகள் வைக்கும் அறை வரை தேனின் பங்கு அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட தேன் இயற்கையின் மிக முக்கியமான படைப்பாகும். இதனைக் கொண்டு நம் உடல் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்லாமல் நமது சருமத்தையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும்.

தேனின் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருப்பதினால் உங்கள் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள், வறண்ட சருமம், எண்ணெய் சருமம், கரும்புள்ளிகள் மற்றும் சென்சிட்டிவ் சருமம் போன்றவைகளில் இருந்து உண்டாகும் பிரச்சினைகளிலிருந்து தேன் நம்மை காப்பாற்றுகிறது.

தேனில் ஆன்டி-பாக்டீரியல் குணங்கள் இருப்பதினால் நம் முகத்தில் இருக்கும் துளைகளை இது அகற்றுகிறது. இதனால் முகப்பருக்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. இதுமட்டுமல்லாமல் முகப்பரு உள்ளவர்கள் தேன் மூலமாக செய்யப்படும் மாஸ்க் போட்டால் முகப்பரு சில நாட்களிலேயே மறைந்து விடும். தேன், பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து முகத்தில் நன்கு தேய்க்க வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் விரைவில் குணமடையும்.

மேலும் படிக்க – பன்னீர் ரோஜாவை கொண்டு அழகு செய்வோம்!

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தேன், ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் கிராம்புகளை பொடியாக்கி ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் எண்ணெய் சருமம் உள்ள முகத்தை அழகான சருமமாக மாற்றி விடும்.

சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும். இதனால் உங்கள் முகம் சிவந்து காயங்கள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. இதை தவிர்ப்பதற்கு கிரீன் டீ மற்றும் தேனை ஒன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் முகம் பொலிவடையும் மற்றும் எல்லோரையும் போல நீங்களும் சாதாரண சருமத்தை பெற முடியும்.

மேலும் படிக்க – உதடுகள் பொலிவுடன் இருக்க இதனைப் பின்பற்றவும்

வறண்ட சருமம் உள்ளவர்கள் தேன், அவகோடா மற்றும் பாதாமை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொண்டு உங்கள் முகத்தில் தடவினால் முகத்தில் இருக்கும் வறட்சித் தன்மையை நீக்கி உங்கள் சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் மாற்றமுடியும். இதை 15 நிமிடங்கள் முகத்தில் ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் முகம் பொலிவடையும்.

கரும்புள்ளி உள்ள சருமத்தில் தேன், தயிர் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் அல்லது முகம் முழுக்க இதைத் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு முகத்தை கழுவினால் நாளடைவில் உங்கள் முகத்தில் ஏற்பட்டு இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து உங்களை அழகாக பெண்ணாக மாற்றி விடும்.

மேலும் படிக்க – கண்களில் லென்ஸ் அணிபவர்கள் மேக்கப் செய்வது எப்படி?

இவை அனைத்தையும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் உங்கள் சருமம் நீங்கள் நினைத்தபடி இருக்கும். இதை தவிர்த்து நாம் தேர்ந்தெடுக்கும் பொருட்கள் அனைத்தும் தரமானதா என்பதை அறிந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். இதை வீட்டிலேயே எளிமையான முறையில் பயன்படுத்தி உங்கள் முகத்தை அழகாகவும், தெளிவாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன