கொரோனாவிற்கும் 2020 ஜூன் 21ல் ஏற்படவிருக்கும் சூரிய கிரகணத்திற்கும் என்ன தொடர்பு? உங்கள் ராசி தப்பிக்குமா…!

  • by

இந்தாண்டு ஜூன் 21ல் வானில் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது.

இப்போது பரவலாக இதை பற்றிய பேச்சுதான் எங்கு பார்த்தாலும். அப்படி என்ன அதிசயமான கிரகணமா என்றால், ஆம்!

இந்த வளைய சூரிய கிரகணம் பல ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு நடைபெறவுள்ளது, அதுவும் தந்தையர் தினமான ஜூன் 21ல் தோன்றுகிறது.

மேலும் இது ராசி, நட்சத்திரம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது, இதை பற்றி காண்போம்.

சூரிய கிரகணம் தொடங்கும் ராசி மற்றும் நட்சத்திரம்:

வருகிற ஜூன் 21ல் நடைபெற இருக்கிற சூரிய கிரகணம் மிதுன ராசியில் உள்ள மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் தோன்றுகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் மட்டுமல்லாது எத்தியோப்பியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஆப்பிரிக்க போன்ற நாடுகளிலும் தெரியும்.

இந்த வளைய சூரிய கிரகணத்தின் விளைவாக 4 ராசிக்காரர்கள் சிரன்ஹா பலனை பெற உள்ளதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்திய நேரப்படி வளைய சூரிய கிரகணம் ஜூன் 21ல் காலை 9:15:58 மணிக்கு தொடங்கி, மதியம் 12:10 மணிக்கு உச்சத்தை அடைகிறது.

மேலும் படிக்க -> நீங்கள் செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி வேண்டுமா-அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது யோகா..!

​ சூரிய கிரகணம், செவ்வாய் மற்றும் ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்படும் நட்சத்திரங்களில் நிகழ்கிறது.

சதயம், சுவாதி, மற்றும் திருவாதிரை, ஆகிய இந்த 3 ராகுவின் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை, ஆகிய இந்த 3 செவ்வாயின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், மேலும் ரோகிணி, புனர்பூசம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்களின் ஆஸ்தான ஜோதிடரை அணுகி என்னென்ன பரிகாரங்கள் மேற்கொள்வதென்று கேட்பது முக்கியம்.

கொரோனவை தீர்க்குமா இந்த சூரிய கிரகணம்:

இந்த சூரிய கிரகணம், கிரக நட்சத்திரங்களில் ஏற்படும் சிலவித மாற்றங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முடிவுக்குக் காரணமாகலாம் என்று ஒரு சில ஜோதிடர்கள் ஆருடம் கூறுகிறார்கள்.

மேலும் இந்த சூரிய கிரகணத்தால் பால் உற்பத்தி குறைவு, தானியங்கள் உற்பத்தி குறைவு, இவையெல்லாம் மலையின் குறைவால் ஏற்படும் என நம்புகிறார்கள்.

நாடுகளுக்கிடையே உள்ள பதற்றம் போருக்கும் வழிவகுக்கும் என்றும் உயர் பதவியில் இருப்போரின் ராசி நட்சத்திரத்தின் நகர்வு தான் இதற்கு பதில் என்றும் கூறுகிறார்கள் ஜோதிடர்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று வரும்காலம் தான் பதில் கூறும்.

மேலும் படிக்க -> உங்களுக்கு சிகிச்சை தேவையா? இந்த 5 அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு சிகிச்சையாளரைப் பார்க்க வேண்டும்…!

சூரிய கிரகணத்தின் போது அனைவரும் செய்யவேண்டியது:

பொதுவாக கிரகணம் என்றால் மக்கள் மனதில் பல்வேறு வகையான நம்பிக்கைகள் தோன்றும். இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என பலரும் கூறுவார்கள்;

அதிலும் குறிப்பாக சூரிய கிரகணம் என்றால் அதற்கேற்ற பரிகாரங்கள் உண்டு. அவற்றுள் பொதுவாக கிரகண நேரத்தில் உணவு உண்ணக்கூடாது, வீட்டில் இருக்கும் உணவு பதார்த்தங்களில் தர்பை மற்றும் துளசி போட வேண்டும், கிரகணத்தின்போது கோயில்களுக்கு செல்லக்கூடாது, இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கூடாது, கிரகணம் முடிந்த பின்னர் தான் குளிக்கவேண்டும் என்பது போன்ற நம்பிக்கைகள் இன்றளவும் மக்கள் மனதில் உள்ளது அதைத்தான் ஜோதிடர்களும் கூறுகிறார்கள். மேலும் சூரிய காயத்ரி மந்திரங்களை கூறுவது இன்னும் சிறப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன