கடைசி நேரத்தில் தேர்வுக்கு தயாராக முடியுமா?

  • by

பள்ளி, கல்லூரி மற்றும் பொதுத்தேர்வுகளுக்கு தயார் செய்யும் பலரும் இறுதி நேரத்தில் தான் படிப்பர். தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு அட்டவணை முன்கூட்டியே அறிவித்தாலும், சராசரி மாணவர்களும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களும் தேர்வுக்கு இறுதி நேரத்தில் தான் படிக்கிறார்கள். அந்த வகையில், கடைசி நேரத்தில் தேர்வுக்கு தயராவது குறித்த முக்கியமானவற்றைகளை இங்கு காணலாம்.

கால அட்டவணை :

தேர்வுக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிக மிக முக்கியமானது. பாடத்தின் முதல் மற்றும் கடைசி பகுதி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் பகுதி என பாடத்திட்டத்தை நீங்களே பிரித்தெடுத்து அதற்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்ய வேண்டும். மேலும் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்களை ஆராய்ந்து படிக்க வேண்டும்.

வினாக்களை புரிந்து கொள்ளுதல் :

சிறுவினா, குறுவினா, கொள் குறிவினா உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும். என்ன வகையான வினாக்கள், எப்படிபட்ட அமைப்பை நமது பாடம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதில் அதிக மதிப்பெண் பெறும் முறையில் படிக்க வேண்டும்.

துறைசார் தயாரிப்பு :

நீங்கள் படிக்கும் துறை சார்ந்த தேர்வுக்கு தயாராக வேண்டும். புவியியல், வரலாறு, உயிரியல், மொழி சார்ந்த பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அரசியல், விஞ்ஞானம், பொறியியல் போன்ற பாடங்களை நன்கு புரிந்து கொண்டு தயாராக வேண்டும். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களை தீர்வு காணும் வகையில் படிக்க வேண்டும்.

மத்திய அரசு போட்டித் தேர்வு :

UPSC, TNPSC, SSC மற்றும் சிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசு நடத்துகிறது. மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் பெரும்பாலும் 3 கட்டத் தேர்வாகவே நடத்தப்படுகின்றன. முதன்மைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்க்காணல் அடிப்படையில் நடத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று வருபவர்கள் மெயின் தேர்வினை எழுத தகுதி பெறுவார்கள். பின்பு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்க்காணல் நடத்தப்படும். அதற்குப் பின்புதான் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

உணவும் முக்கியமே :

உணவும் உறக்கமும் இரு கண்கள் என்று நினைத்துக் கொண்டு அளவோடு உண்டு உறங்குவது தேர்வு பயிற்சிக்கு மிக மிக முக்கியமானது. அதிகம் உணவு உண்டால் தேர்வின் போது தூக்கம் வரும். நீண்ட நேரம் விழித்திருந்தாலும் இதே பிரச்னை தொடரும். எனவே அளவோடு உணவை உட்கொள்ள வேண்டும். எளிதில் செரிமனமாகும் உணவை தேர்வு செய்ய வேண்டும். கிரீன் டீ, சாக்லேட்டுக்கள் போன்றவற்றை அவ்வபோது படிக்கும் நேரத்தில் சாப்பிட்டால் உற்சாகத்துடன் படிக்கலாம்.

நீங்கள் தேர்வுக்குத் தயாராகிறீர்களா, அல்லது உங்கள் மூளை புத்திசாலித்தனமாக இருக்க பயிற்சி செய்ய விரும்புகிறீர்களா? இந்த வகுப்பில், நீங்கள் பின்வரும் நன்மைகளைப் பெறலாம்:

  1. உங்கள் படிப்பு நேரத்தைக் குறைக்கவும்
  2. உங்கள் கற்றலை எவ்வாறு சுவாரஸ்யமாக்குவது என்பதை அறியவும்
  3. உங்கள் நினைவாற்றலின் உண்மையான திறனைப் பயன்படுத்துங்கள்.

அரவிந்த் பசுபதி போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு நினைவக மேம்பாட்டு நிபுணர். அவர் இத்தாலியில் கோஸ்டா குரூஸ் லைன்ஸில் பணிபுரிந்தபோது, வெவ்வேறு மொழிகளைக் கற்ககும் ஆர்வம் கொண்டார். நம் மூளை எவ்வாறு இயங்குகிறது, எப்படி வேகமாக மனப்பாடம் செய்யலாம், எப்படி சிறப்பாக கவனம் செலுத்த முடியும் என்பதைப் பற்றி பல ஆண்டுகளாகப் அவர் ஆராய்ந்தார் – மேலும் அவர் நிறைய தந்திரங்களையும் நுட்பங்களையும் கண்டறிந்தார். மிக விரைவில் பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலியன் போன்ற பல ஐரோப்பிய மொழிகளைப் பேசக் கற்றுக்கொண்டார்.,புத்திசாலித்தனமான படிப்பு திறன் நுட்பங்களின் உதவியுடன் யார் வேண்டுமானாலும் விரைவாக கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் உணர்ந்தார். அரவிந்த் பசுபதி தனது திறமைகளின் செயல்திறனை நிரூபிக்க, ஒரு நிமிடத்தில் 270 பைனரி எண்களை மனப்பாடம் செய்வதில் கின்னஸ் உலக சாதனை படைத்தார்!

அரவிந்த் பசுபதி அவர்களுடன் ஆன்லைன் ஆலோசனையை மேற்கொள்ள…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன