கற்பூரவல்லி, துளசி, வேப்பில்லை, இது கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றுமா..!

  • by
will tulsi,neem save us from corona virus

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் மிகக்குறைவாக இருந்தது ஆனால் இப்போது கிட்டத்தட்ட 62 பேருக்கும் மேல் வைரஸ் பாதிப்பு அடைந்து உள்ளார்கள். எல்லா திசைகளிலிருந்தும் விழிப்புணர்வு வந்தும் நம்முடைய அலட்சியத்தின் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா மற்றும் தமிழகத்திற்க்கும் வந்துள்ளது. எனவே இதை துளசி ஓமவள்ளி மற்றும் வேப்பிலையைக் கொண்டு எப்படி தடுக்கலாம் என்று இந்த பதிவில் காணலாம்.

கற்பூரவள்ளி

கற்புரவள்ளி செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இதை பல நாடுகளில் மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். அதைத் தவிர்த்து ஆயுர்வேத மருத்துவத்தில் மிகப்பெரிய பங்கை கற்புறவள்ளி வகிக்கிறது. இதை வெறுமனே எடுத்து மென்று சாப்பிடுவதன் மூலமாக உங்கள் சளி, ஜலதோஷம், இருமல் போன்ற பிரச்சனைகள் தீரும். ஆனால் இதில் காரம்அதிகமாக கொண்டதினால் இதை அப்படியே மெல்லுவதை விட தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் நல்லது.

மேலும் படிக்க – சத்துமாவு சாப்பிடுவதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

துளசி

நாம் பயன்படுத்தப்படும் எல்லா மூலிகைகளையும் துளசியின் பங்கு இருக்கும். இதை நாம் குடிக்கும் தீயிலிருந்து, பல் துவக்க பயன்படுத்தப்படும் பல்பொடி வரை பயன் இருக்கிறது. அதிகளவிலான ஆரோக்கிய குணங்களைக் கொண்ட துளசியை நாம் சாப்பிடுவதன் மூலமாக நமது உடலில் உண்டாகும் தீய பாக்டீரியாக்களை அழிந்து விடும். இதனால் நமக்கு அஜீரணக் கோளாறு, தொண்டை பிரச்சனை, வாய் துர்நாற்றம் போன்ற அனைத்தையும் தீர்க்கும்.

வேப்பிலை

ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கியமான இலைதான் வேப்பிலை இது நமது வயிற்றுக்குள் இருக்கும் பூச்சிகள் மற்றும் கிருமிகள் என அனைத்தையும் அழிக்கும் தன்மை கொண்டது. வேப்பிலையை சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இதிலிருக்கும் அதிக அளவிலான கசப்புத்தன்மை உங்கள் உடலில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் அகற்றும்.

மூன்றும் சேர்ந்தால்

வேப்பிலை, ஓமவள்ளி மற்றும் துளசி என மூன்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கசாயமாக குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் எந்தவிதமான நோய்களும் அண்டாது. அதை தவிர்த்து சமீபத்தில் மிக வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து கூட நம்மால் தப்பிக்க முடியும்.

மேலும் படிக்க – சுத்தமற்ற உணவுகளை சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்சினைகள்..!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் எந்த ஒரு நோய் தொற்றுகள் இருந்தாலும் நம்மால் தப்பிக்க முடியும். எனவே இந்த மூலிகை இலைகளை கொண்டு நம் கசாயம் குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த ஒரு நோயும் உங்களை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன