அனைத்து நோய்களுக்குமான தீர்வு – சித்த மருத்துவம்!

 • by
mahabharatam part -1, vysa munivar birth story

சித்த மருத்துவம் என்பது ஒரு தமிழ் மருத்துவ முறையாகும். பழங்கால தமிழ் சித்தர்கள் இதனைத் தங்கள் ஞான அறிவால் நன்குணர்ந்து நோய்களுக்கான மருந்தை மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர். “உணவே மருந்து-மருந்தே உணவு” என்பது சித்தர்களின் வாக்கு. என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு இயங்கி வருவது சித்த மருத்துவம். சித்த மருத்துவத்தின் வரலாறு யாரும் அறிந்திலர் இது எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. மேலும் அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

நம்மை சுற்றியுள்ள புல், பூண்டு, செடி, வேர், பட்டை, இலை, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகம், திரிசாதி, திரிபாலை, செந்தூரம், பொடிகள், கஷாயங்கள் முதலிய பலவற்றை கொண்டு பல வியாதிகளுக்கு சிகிச்சை அளிப்பது. நல்ல தண்ணீர், பால், தேன், நெய் முதலியனக் கொண்டும் சித்த மருத்துவத்திற்கு வைத்தியம் செய்யப்படுகிறது.

வாத நோய்கள் :

வாதத்தில் முக்கியமாக 80 நோய்கள் உள்ளது. நரம்பு வலி, வாயு, இரத்த அழுத்தம், காக்கா வலிப்பு, பக்கவாதம், இதய நோய் முதலியவை இதில் அடங்கும். இந்த நோய் இப்போது பரவலாக அனைத்து இடத்திலும் உள்ளது.

சிலேத்தும நோய்கள் :

சிலேத்துமத்தில் 96 நோய்கள் உள்ளன. அவற்றில் மூக்கடைப்பு, தடிமன், இருமல், மூக்கில் நீர்வடிதல் சயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும். இன்றும் இந்த முறை நடைமுறையில் உள்ளது.

பித்த நோய்கள் :

பித்தத்தில் முக்கியமாக 40 நோய்கள் உள்ளது. செரியாமை, வயிற்றுவலி, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, வயிற்றுப்புண், மஞ்சள் காமாலை, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.

சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் புறமருந்துகள் :

 • ஒற்றடம்-சரக்குகளை சூடுபடுத்தி துணியில் முடிந்து நோயுள்ள இடங்களில் ஒற்றுதல்
 • பற்று- சரக்குகளை நீர்மப்பொருள் விட்டு அரைத்து சுடவைத்தோ சுடவைக்காமலோ நோயுள்ள இடங்களில் அப்புதல்
 • வேது- சரக்குகளை எடுத்து கொதிக்க வைத்து அதனின்று எழும் ஆவியை நவதுவாரங்களில் ஏதாவது ஒன்றின் வழியாக இழுத்தல்
 • பூச்சு-நீர்மப்பொருட்கள் மற்றும் பசை குழம்பு நிலையில் உள்ளவற்றை நோயுள்ள இடங்களில் பூசுதல்
 • கட்டு – இலைகள் அல்லது பட்டைகளை நைய இடித்தோ அரைத்தோ வதக்கியோ புளித்தநீர் முதலியவற்றில் வேகவைத்தோ கட்டுதல்
 • அறுவை- தேவையில்லாதவற்றை அறுத்து நீக்கி தைத்து செம்மைப்படுத்தல்
 • காரம் – விரணத்தை ஆற்றுவதற்காக தோற்றவிப்பதற்காக பயன்படுத்தப்படும் சில நச்சுமருந்துகளும் அதன் கட்டுகள்
 • பொடி – சரக்குகளை பொடித்து எடுத்து கொள்ளுதல்
 • குருதி வாங்குதல்- இரத்தக்குழாயை கீறி இரத்தத்தை வெளிப்படுத்தல்
 • நாசிகாபரணம்-சரக்குகளை இடித்து மூக்கிலிடுவது

டாக்டர் ஆர். பத்மப்ரியா சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் (பிஎஸ்எம்எஸ்) பெற்றார். இவர் ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சையில் முதுகலை டிப்ளோமா மற்றும் அழகுசாதன டிப்ளோமாவும் பெற்றுள்ளார். டாக்டர் ஆர். பத்மப்ரியா சித்த ஆலோசகராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ள இவர், சென்னையில் உள்ள பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக உள்ளார். நீரிழிவு நோய், தசை-எலும்பு பிரச்சினைகள், தோல் கோளாறுகள், குழந்தை பராமரிப்பு, இளம்பருவ மகளிர் மருத்துவ பிரச்சினைகள், பெற்றோர் ரீதியான மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு ஆகியவற்றின் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். 

டாக்டர் ஆர். பத்மப்ரியா அவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன