மிளகு ரசம் கரோனாவை கொள்ளுமா..!

  • by
will pepper rasam cure corona virus

தென்னிந்திய உணவுகளில் மிக முக்கிய பங்கை வகிப்பது ரசம். மதிய வேளைகளில் இன்றும் 80% தென்னிந்திய மக்கள் ரசம் இல்லாமல் உணவை அருந்துவதில்லை. ரசத்தை அருகில் வைத்துக்கொண்டு நீங்கள் எவ்வளவு உணவுகளை வேண்டுமானாலும் உண்ணலாம், ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் உணவை எளிதில் ஜீரணம் செய்ய உதவுகிறது. இதை வெகு எளிதில் குறைந்த நேரத்தில் சமைக்கலாம் அதை தவிர்த்து இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எனவே இத்தகைய ரசத்தில் இருக்கும் மருத்துவ குணங்களை காணலாம்.

கரோனா அழிக்குமா

எல்லா மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால் கரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகமாக தாக்குகிறது. மற்றும் அவர்களே அதிகளவில் உயிரிழக்கிறார்கள். எனவே இதைத் தடுப்பதற்கு உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும். எனவே ரசத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அதில் சேர்க்கப்படும் மிளகு, பூண்டு, சீரகம், கொத்தமல்லி, புளி, மஞ்சள் போன்றவைகள் உங்கள் செரிமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதனால் கரோனா மட்டுமல்லாமல் எந்த ஒரு வியாதியும் உங்களை அண்டாது.

மேலும் படிக்க – அன்னாச்சி பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள்..

வயிற்றுப்போக்குக்கு சிறந்தது

ரசத்தை நாம் எடுத்துக் கொள்வதற்கு மற்றொரு முக்கியமான காரணம், நமக்கு இருக்கும் வயிற்றுப்போக்கை சரிசெய்யும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் எந்த உணவையும் உண்ண முடியாமல் உடல் சோர்வுடன் இருப்பார்கள். எனவே இதை தடுப்பதற்காகவே வயிற்றுப் போக்கு அதிகமாக உள்ளவர்கள் ரசத்தை சாப்பிடுவார்கள். இதன் மூலமாக வயிற்றுப்போக்கும், அசிடிட்டி, செரிமான பிரச்சினை என அனைத்திற்கும் நிவாரணமாக இருக்கிறது.

புற்றுநோயை குறைக்கும்

ரசத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் மற்றும் மிளகினால் உங்கள் உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. அதைத் தவிர்த்து வேறு எந்த ஒரு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மசாலாக்கள் மற்றும் எண்ணங்களை சேர்த்து சமைக்கப்படும் உணவுகளை சாப்பிடக்கூடாது. ஆனால் இவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுதான் ரசம். எனவே நோயாளிகள் அனைவரும் பாகுபாடின்றி ரசம் சாதத்தை சாப்பிடலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை

ரசத்தை ஒரு கப் குடிப்பதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் குடல் இறக்கம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும். அதை தவிர்த்து இதில் புரோட்டின், வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் அவர்களுக்கு சக்திகளை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் “பட்டர் ஃப்ரூடில்” இருக்கும் நன்மைகள்..!

குழந்தைகளுக்கான சிறந்த உணவு

ரசத்தில் மெக்னீசியம், காப்பர், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதினால் இது உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவும். அதைத் தவிர்த்து குழந்தைகளுக்கு முதன் முதலில் கொடுக்கப்படும் உணவு ரசம் தான். இதனால் அவர்களின் உணவு விரைவில் ஜீரணமாகி ஆனந்தமாக சுற்றி திரியும்.

உங்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றி உங்கள் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. தினமும் ரசத்தை உட்கொள்வதன் மூலமாக உங்கள் உடல் எடையும் குறையும். இதனால் முடிந்தவரை மதியம் மற்றும் இரவு வேளைகளில் ரசத்தை பயன்படுத்தி உணவு அருந்துங்கள். இதை சமைத்து சாப்பிடுவதன் மூலமாக மற்ற நாட்டவர்களும் பலன் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன