இந்தியாவில் லாக்டவுன் தொடருமா..?

  • by
will lockdown get extended in india

கொரோனா வைரஸின் தொற்று இந்தியா முழுவதும் பரவாமல் இருப்பதற்காக கடந்த இரண்டு வாரங்களாகவே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிளும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை இந்த 144 தடை உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இந்த தடையை நீக்கலாம், இல்லை தொடரலாமா என்பதைப் பற்றி ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும் அவர்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

தெலுங்கானா முதலமைச்சர்

தெலுங்கானாவின் முதலமைச்சர் திரு கே சந்திரசேகர ராவ் அவர்கள் இந்த ஊர் அடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு பின்தொடர வேண்டும் என அவரின் கருத்தை தெரிவித்து வருகிறார். மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை விட அவர்களின் உயிர் மிக முக்கியமானது என மத்திய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார். எனவே ஊரடங்கு நிறைவு பெற்றாலும் இந்த மாநிலத்தில் ஊரடங்கு தொடரும் என கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க – தீவிர கோவித் தொல்லையை தீர்க்க இன்னும் சில நாட்கள் ..

ஒடிசா மாநிலம்

ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் அவர்கள் இந்த ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவித்துள்ளார். எனவே மாநிலத்தை விட்டு யாரும் வெளியேறவோ, உள்ளே நுழையவோ முடியாது. அதைத் தவிர்த்து மக்களையும் மேலும் இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்திர பிரதேஷ்

உத்திர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களும் தங்கள் மாநிலம் முழுவதும் முடக்கப் போவதாக அறிவித்துள்ளார். எனவே மே 5 ஆம் தேதி வரை இது நீட்டிக்கப்படும் என்றுள்ளார். தடை உத்தரவை பிறப்பித்த எல்லா மாநிலங்களும் தங்கள் அன்றாடத் தேவைக்கு பயன்படும் உணவுப் பொருட்களை தடையில்லாமல் கொண்டு செல்லும் ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதன் மூலமாக தடை உத்தரவு பிரபித்தாளும் உணவுத் தட்டுப்பாடு என்பது இது போன்ற மாநிலங்களில் எதிரொலிக்காது.

மேலும் படிக்க – மதுரை மாநகராட்சியின் வீட்டுக்கு வீடு காய்கறி திட்டம்..!

பொதுக்குழு கூட்டம்

ஏப்ரல் 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எல்லாம் மாநிலத்தின் முதலமைச்சர்களையும் காணொளி மூலமாக சந்திக்கிறார். இதன் மூலமாக ஊரடங்கை கடைப்பிடிக்கலாமா அல்லது முடக்கலாமா என்பதைப்பற்றிய கருத்துக்களை எல்லாம் மாநிலத் தலைவர்களுடன் கேட்டு தெரிந்து அதற்கான தீர்வையும் எடுத்து இந்த நாளில் மக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். ஒரு சில மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கை நீட்டிக்கலாம் என்ற கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. அதிலும் அதிகப்படியான மாநிலத் தலைவர்கள் நீட்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். எனவே மத்திய அரசு ஊரடங்கை நீடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஊரடங்கால் இந்தியாவின் உற்பத்திகள் குறைந்துள்ளது, இருந்தாலும் பங்குச் சந்தையின் நிலவரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கை ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது, அதேபோல் கடைப்பிடித்தாலும் ஒரு சில சலுகைகளை மக்களுக்கு கொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன