கொரோனாவை கொள்ளுமா கபசுரக் குடிநீர்..!

  • by
will kabasura kudineer kill corona virus

மனிதர்களில் உடல் நிலையை பாதிக்க செய்யும் அனைத்து விதமான கிருமிகளை அழிப்பதற்கு ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறது என நமது முன்னோர்கள் கூறி வந்தார்கள். இதை அறிந்த இந்திய அரசாங்கம் ஆயுர்வேதத்தை தனிப்பிரிவாக அறிவித்து, அதற்கான துறையையும் உருவாக்கியது. எனவே மருத்துவத்தை போன்றே ஆயுர்வேதத்தையும் நாம் படித்து பட்டம் பெறலாம். எனவே எந்த ஒரு உடல் பிரச்சினை நமக்கு ஏற்பட்டாலும் இயற்கை வழியில் குணப்படுத்துவதற்கு மக்கள் ஆயுர்வேதத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

நிலவேம்பு கசாயம்

டெங்கு போன்ற வியாதிகளை குறைப்பதற்கு மக்கள் நிலவேம்பு கசாயத்தை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இயற்கையாக உருவாகும் நிலவேம்பில் இருக்கும் பட்டையை கொண்டு உருவாக்கப்படும் இந்த பொடியை கசாயமாக குடிப்பதன் மூலமாக உடலில் உள்ள கிருமிகள் அழிகிறது. எனவே கோடை காலம் வந்தாலே எல்லோரும் நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது. இதன்படி கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதர்க்கு மக்கள் நிலவேம்பு கசாயத்தை குடித்து வந்தார்கள்.

மேலும் படிக்க – எலும்பிச்சை சாற்றில் நிறைந்துள்ள சத்துக்கள்!

கபசுரக் குடிநீர்

கபசுரக் குடிநீர் என்பது ஏராளமான கலவைகளை கொண்டு, மூலிகைகளை ஒன்றிணைத்து தயாரிக்கப்படுவது. இதைப் பொடியாக்கி அனைத்து ஆயுர்வேத நிலையங்களிலும் மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் விற்கிறார்கள். இதை பன்றிக் காய்ச்சல், கிருமி காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்துவதற்காக மக்கள் பயன் படுத்தினார்கள். ஆனால் இதை இப்போது உருவாகும் கொரோனாவை வைரசிற்கு எதிராகவும் ஒரு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். கபசுரக் குடிநீரில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருந்தாளும் கொரோனா வைரஸை முழுமையாக அழிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

மருத்துவ குணம்

மனிதர்களுக்கு ஆரோக்கிய பற்றாக்குறை ஏற்படும் பொழுது அது ஏதாவது ஒரு உடல் பிரச்சினைகள் மூலமாக வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல் என படிப்படியாக சென்று நமது உடலில் இருக்கும் உறுப்புகளை பாதிக்கச் செய்கிறது. இது போன்ற பிரச்சினையை ஆரம்ப நிலையிலே அழிப்பதற்காக தான் சித்த மருத்துவத்தை பயன்படுத்தி வந்தார்கள். நம் சமையல் அறைகளில் அதிகமாக பயன்படுத்தி வரும் சுக்கு, மிளகு, திப்பிலி, மிளகு, சீரகம் போன்ற பொருட்களைக் கொண்டு ஏராளமான ஆயுர்வேத மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து வந்தார்கள். இதைப் பயன்படுத்துவதன் மூலமாக எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதனை ஆரம்பத்திலேயே நம்மால் அழிக்க முடியும். எனவே உங்கள் உடல்நிலை மிக மோசமான நிலைக்குச் சென்றால் இதைப்போன்ற மருத்துவத்தை சார்ந்து இல்லாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மேலும் படிக்க – வெந்தயமும் மனித வாழ்வின் ஆரோக்கியமும் அவசியம்!

கபசுரக் குடிநீர் போன்ற ஆயுர்வேத மருந்துகளில் மூலமாக நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். இருந்தாலும் இதை பின் தொடர்வதற்கு முன்பாக நீங்கள் உங்கள் உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும், அதை பொறுத்துதான் உங்கள் உடல் பிரச்சனை குணமடையும். எனவே இதுபோன்ற ஆயுர்வேத உணவுகளை ஆரம்பம் முதலே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சரியாக செய்தால் எதிர்காலத்தில் எந்த ஒரு நோய் தொற்றும் உங்களை பாதிக்காமல் ஆரோக்கியமாக வாழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன