கொரோனா தாக்கத்தால் ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்குமா.?

  • by
will gst collection increase due to corona virus

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மூலமாக ஜூலை ஒன்றாம் தேதி 2017 ஆம் ஆண்டு இந்தியாவிலும் ஜிஎஸ்டி முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியாவின் பொருளாதாரம் உயர வேண்டும் என்பதற்காகவும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு தேவையான வரித் தொகை கிடைப்பதற்காக இந்த ஜிஎஸ்டி விதிமுறையை இந்திய அரசு அமல்படுத்தியது. ஒரு சில நிறுவனங்களை தவிர்த்து மீதி எல்லா நிறுவனங்களும் இந்த ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று வரை மத்திய அரசு மற்றும் நிதித்துறை எதிர்பார்த்த அளவு ஜிஎஸ்டி வருவாய் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இந்திய அரசாங்கம் ஏராளமான திட்டங்களை வகுத்து வந்தது, இருந்தும் தங்கள் எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்த அளவே ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2020

2020ஆம் ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, நாட்டின் ஒரு வருடத்திற்கான வரிப்பணத்தை வைத்து பட்ஜெட் வெளியிடப்படும். இதில் ஒவ்வொரு துறைக்கும் ஏற்றார்போல் தொகைகளை பிரித்து அந்த துறையை வளரச் செய்து அதன் உற்பத்தியும் அதிகரிப்பார்கள். ஆனால் ஜிஎஸ்டியில் கிட்டத்தட்ட 6 லட்சம் கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டு இருந்த நிலையில் நமக்கு வெறும் 3 லட்சத்து 26 ஆயிரம் கோடியைதான் கிடைத்தது. இதைத் தவிர்த்து 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக அந்த மாதம் மட்டும் எவ்வளவு ஜிஎஸ்டி தொகை கிடைத்தது என்பதே கணக்கிட்டார்கள், அப்போது வருட இறுதி என்பதினால் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடியை வசூலித்தது. இதில் இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசின் ஜிஎஸ்டியை விட வெளிநாடு மூலமாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியே அதிகம்.

மேலும் படிக்க – கொரனாவால் தள்ளிப் போகும் திருமணங்கள்

ஜிஎஸ்டி வசூல் குறைவு

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஜிஎஸ்டி மூலமாக ஏராளமான தொகையை மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களிலிருந்து மத்திய மற்றும் மாநில அரசு வசூலித்து வந்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏராளமான நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்த ஆண்டுக்கான ஜிஎஸ்டி தொகை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டது. குறிப்பாக 28 சதவீதம் வரை வரி வசூலித்து வந்த ஏராளமான பொருட்களுக்கு கிட்டத்தட்ட 10% வரை குறைத்து 18 சதவீதமாக வசூலித்து வந்தார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எல்லா பொருட்களுக்கும் ஜிஎஸ்டி முற்றிலுமாக குறைத்தார்கள். நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புகையிலை மற்றும் புகைப் பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி தொகையை உயர்த்தினார்கள். அதைத் தவிர்த்து இதுவரை ஜிஎஸ்டி தொகையை வசூலித்த ஏராளமான பொருட்களுக்கும் இந்த ஆண்டு ஜிஎஸ்டி தொகை மிகக் குறைந்த அளவில் வசூலிக்க தொடங்கினார்கள்.

எதிர்பார்ப்பு வீணானது

ஏராளமான திட்டங்களை தீட்டி இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்கள். ஆனால் கொரேனா வைரஸ் பாதிப்பினால் நம்முடைய பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சுற்றுலாத்துறை மூலமாக ஏராளமான வரி தொகை நம்முடைய அரசுக்கு கிடைத்தது ஆனால் இந்த வருட ஆரம்பத்திலேயே வைரஸ் பாதிப்பினால் சுற்றுலாத்துறை சார்ந்த ஹோட்டல், ரயில் மற்றும் பேருந்து சேவை முடங்கியது இதன் மூலமாக லாபத்தை பார்க்கும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் முழுமையாக முடக்கப்பட்டு இதனால் இந்த ஆண்டுக்கு கிடைக்கக்கூடிய ஜிஎஸ்டி முற்றிலுமாக குறைந்துள்ளது.

லாக்டவுனுக்கு பிறகு

இந்தியா முழுவதும் லாக்டவுனில் இருக்கும் போதும் ஒரு சில இணையதள நிறுவனங்கள் லாபங்களை பெறுகிறது. இதைத் தவிர்த்து ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் விலக உள்ளதாக மத்திய மற்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் பிறகு நம்முடைய பொருளாதாரத்தை உயர்த்தும் ஏராளமான திட்டங்களை எல்லா நிறுவனங்களும் செயல்படுத்த தொடங்கிவிடும். இதைத் தவிர்த்து உலக நாடுகளுக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவிய இந்தியாவின் தொழில் அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது எனவே இந்த வருடத்திற்கான ஜிஎஸ்டி கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க – உடலில் நோய் எதிர்க்கும் சளியை தடுக்கும் மூலிகைகள்

பொருளாதாரம்

உலகில் பணக்கார நாடாக கருதப்பட்ட ஏராளமான நாடுகளில் வைரஸ் பெரிதாக தாக்கியுள்ளது. இதனால் அந்நாட்டு பொருளாதாரம் மிகப்பெரிய விழ்ச்சியில் உள்ளது ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது, இதை தவிர்த்து பாதிப்புகள் இன்றுவரை கட்டுக்குள் இருப்பதால் இந்த வைரஸ் தொற்று பரவுதல் குறைந்தவுடன் நம்முடைய வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இதைத் தவிர்த்து ஏராளமான வெளிநாடு நிறுவனங்களுக்கு நாம் வேலைகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது இந்தியாவிலிருந்து செய்வதன் மூலமாக நம்முடைய வருமானம் மற்றும் வருமானத்தின் மூலம் கிடைக்கப்படும் வரி அதிகரிக்கும்.

எனவே பொருளாதார மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று தவறான எண்ணங்களை கொள்ளாமல் இனி வரப்போகும் காலங்களில் இந்தியாவின் கை ஓங்கி இருக்கும் என்பதை உணருங்கள். மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் எப்படி சீனாவில் தங்கள் தொழிற்சாலைகளை துவங்கினார்களே அதே போல் இந்தியாவிலும் இதுபோன்ற தொழிற்சாலைகளை துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே நீங்கள் நினைத்ததை விட உங்கள் எதிர்காலம் அழகாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன