தார்பாருக்கு திறக்குமா திண்டுக்கல் பூட்டு..!

will darbar movie release in dindugal city

ஜனவரி 9ஆம் தேதி தர்பார் திரைப்படம் மிகப் பெரிய திருவிழா போல் உலகம் முழுக்க திரையிடப்பட்டது. ஆனால், திண்டுக்கல்லில் மட்டும் தர்பார் திரைப்படம் சுமார் 11 திரையரங்குகளில் இன்னும் திரையிட படாமல் இருக்கின்றன. சாதாரணமாக நாம் ஒரு திரைப்படத்திற்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பின் அந்த திரைப்படம் திரையரங்குகளில் போடவில்லை என்றால் நாம் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகுவோம், அதுவே ரஜினிகாந்த் படம் என்றால் நினைத்துப் பாருங்கள். அவர்கள் ரசிகர்கள் எவ்வளவு வேதனை அடைந்து இருப்பார்கள் என்று.

மேலும் படிக்க – நம்ம வீட்டு பிள்ளை “சிவகார்த்திகேயன்” வாழ்க்கை முறை.!

லைக்கா நிறுவனத்திற்கும், டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் தியேட்டர் முதலாளிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பணப் பிரச்சினைகளினால் திண்டுக்கலில் சில திரையரங்குகளில் இந்த திரைப்படங்கள் திரையிடப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்குகளில் இருக்கும் மற்ற திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்து எறிந்தார்கள். இதனால் பெரும்பாலான திரையரங்குகள் போராட்ட களமாகவே மாறிவிட்டது.

தமிழகம் முழுக்க முதல் 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து ரசிகர்கள் சிறப்பு காட்சிகளுக்காக திண்டுக்கல் முழுக்க உள்ள திரையரங்குகளில் இரவு முதலே கொண்டாடி வந்தார்கள். ஆனால் திடீரென திரைப்படம் திரையிடப்பட்டது என்ற செய்தியைக் கேட்டவுடன் இவர்கள் லைக்கா நிறுவனம் மற்றும் திரையரங்குகள் மேல் உள்ள கோபத்தை போராட்டம் மூலமாக தெரிவித்தார்கள். இதனால் இந்த செய்தி இந்த நிறுவனத்திற்கு செல்லும் வரை போராடுவோம் என கண்களில் படும் பேனர்களை அனைத்தையும் கிழி கிழி என்று கிழித்து எறிந்தார்கள். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து அவர்களை சமாதானப் படுத்தினார்கள்.

மேலும் படிக்க – சூரரைப் போற்று சூர்யாவின் வாழ்க்கை முறைகள்.!

ரஜினிகாந்தின் திரைப்படம் திண்டுக்கல்லில் வெளியிடப்படுவதற்கு பணப் பிரச்சனை தான் காரணமா அல்லது இதில் ஏதாவது அரசியல் இருக்குமா என்பது தெரியவில்லை இருந்தாலும் லைக்கா நிறுவனம் தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கான அனுமதியை பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன