உடலுறவு கொள்வதால் கொரோனா வைரஸ் பரவுமா..!

  • by
will corona virus spread through during intercourse

கடந்த சில மாதங்களாகவே உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் அதிலும் இந்தியாவில் மார்ச் மாதம் 14ஆம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது அதை தவிர அனைவரும் தங்கள் வேலையை வீட்டிலிருந்தபடியே செய்ய வேண்டும் என்று இந்திய அரசாங்கம் அவர்களுக்கு கட்டளையிட்டது. இதுபோன்ற சூழலில் வீட்டில் இருக்கும் நீங்கள் பொழுதுபோக்கிற்காகவும் அல்லது அன்பை பரிமாறுவதற்கு உங்கள் துணையுடன் உடலுறவு மேற்கொள்வது பாதுகாப்பானதா என்பதை காணலாம்.

உடலுறவு

ஆண், பெண் இருவரும் உடலுறவு மேற்கொள்வதினால் அவர்கள் உடம்பில் ஒரு சில ஹார்மோன்கள் அதிகரித்து உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதைத் தவிர்த்து உங்கள் மனநிலையை அமைதியாகவும் ஒருவர் மேல் ஒருவர் வெறுப்பில்லாமல் அன்பாக இருப்பதற்கு உடலுறவு உதவுகிறது. உங்கள் உடல் மற்றும் மனதை வலிமையாக வைத்துக் கொள்ள இந்த உடலுறவை நாம் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வரும் சூழலில் உடலுறவு கொள்ளலாமா என்பதை தெளிவாக காணலாம்.

மேலும் படிக்க – வீட்டுக்குள் முடங்கியது நாடு 21 நாட்கள் நீட்டிக்கும்!

நோய்த்தொற்றுகள்

ஆரோக்கியமற்ற முறையில் உடலுறவு கொள்வதன் மூலமாக உங்களுக்கு பாலியல் நோய்கள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அது ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல் உறுப்பு வழியாகவே உருவாகும் என்பது உடல் உறுப்பு வழியாக உருவாகிறது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. நாம் தொடுதல் மூலமாகவும், மூக்கு வழியாகவும், கண்கள் வழியாகவும் அல்லது வாய் வழியாகவும் கொரோனா வைரஸ் நமக்குள் செல்கிறது. எனவே பாதுகாப்பான உடலுறவு கொள்வதனால் கொரோனா வைரஸ் உங்களை பாதிக்காது.

பாதிப்பு உள்ளவர்கள்

உங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்வது சிறந்தது அப்படி உங்களுக்கு உங்கள் மேல் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கிட்டத்தட்ட இரண்டு வாரம் முழுமையாக உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். இதன்பிறகு உங்களுக்கும் பாதிப்புக்கான அறிகுறி எதுவும் தென்படாமல் இருந்தால் நீங்கள் உங்கள் துணையுடன் உடலுறவு மேற்கொள்ளலாம். அப்படி உங்களுக்கு பாதிப்புகள் இருந்தால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – கொரானாவுக்கு காரணமான உணவுகள் அதை தவிர்ப்பது எப்படி

பரவும் வழிகள்

கொரோனா வைரஸ் காற்றின் மூலமாக பரவக்கூடியது, ஒருமுறை அதை நாம் சுவாசித்தால் நமக்குள் கொரோனா வைரஸ் பாதிப்புகள் உண்டாகும். அதைத் தவிர்த்து சுவாசம் மற்றும் வாய் வழியாக நுழையக்கூடிய இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. எனவே உங்கள் துணைக்கு நீங்கள் முத்தம் கொடுக்கும்போது இந்த வைரஸ் எளிதில் அவர்களுக்குள் செல்கிறது. எனவே உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மிகவும் பாதுகாப்பான முறையில் முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டு அதற்கேற்ப வகையில் உடலுறவை மேற்கொள்ளலாம்.

கணவன் மற்றும் மனைவி இடையே அன்பு நிலையாக இருக்க வேண்டும் என்றால் உடல் உறவு மிகவும் அவசியமான ஒன்று. என்னதான் நாம் வாய் வழியாகவோ அல்லது கண்கள் வழியாக அன்பை பரிமாறிக் கொண்டு இருந்தாலும் அதற்கென்று இருக்கும் நிலைதான் உடலுறவு. எனவே இதை மேற்கொள்வதற்கு சில வாரங்கள் பொறுத்திருங்கள், உங்களுக்கு எந்த ஒரு நோய் தொற்றிக்கொள்ளும் இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன