கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள் தெரியுமா?

  • by
Why Women Not Getting Sleep When They Pregnant

கர்ப்ப காலம் என்பது பெண்களின் மறு பிறவி என்றே சொல்லலாம்‌ இச்சமயங்களில் பெண்கள் எப்போதும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொண்டு தன்னையும் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். இச்சமயங்களில் கிட்டத்தட்ட கருவுற்ற நாள் முதல் பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று இந்தப் பதிவில் காணலாம்.

முதல் முறை உணரும் குழந்தையின் அசைவுகள்

கருவுற்ற சில மாதங்களிலேயே குழந்தை வயிற்றுக்குள் அசைய தொடங்கிவிடும். இதனால் இரவு நீங்கள் உறங்கும் சமயங்களில் உங்கள் வயிற்றில் குழந்தைகளின் அசைவு அதிகமாக இருக்கும். இதனால் திடீரென்று உங்களுக்கு விழிப்பு ஏற்படும். எனவே இதை எளிதில் எடுத்துக் கொண்டு, குழந்தை அசைவை பொருட்படுத்தாமல் உறங்குவதே சிறந்தது.

மேலும் படிக்க – சீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் குணங்கள்..!

மன அழுத்தம்

குழந்தை கருவுற்ற நாள் முதல் பெண்களுக்கு கவலை மற்றும் மன அழுத்தப் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். எப்படி இந்தக் குழந்தை பிறக்கப்போகிறது, அதன் வலிகளை நாம் எப்படி பொறுத்துக் கொள்ள போகிறோம், என்ற கவலையே நாளடைவில் மன அழுத்தமாக தொற்றிக்கொள்கிறது. இதைத் தடுப்பதற்கு பெண்கள் எப்போதும் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய வேண்டும், அதேபோல் உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்னென்ன தேவை என்பதை சேகரிக்க தொடங்குங்கள். இது உங்கள் கவலையைப் போக்கி உங்கள் சந்தோஷத்தை அதிகரிக்கும்.

உடல் வலிகள் ஏற்படும்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நான்காவது மாதத்திலிருந்து அவர்களின் கை மற்றும் கால்களில் வலி ஏற்படும. இது உங்கள் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அல்லது உளைச்சல் பிரச்சனையாக இருக்கும். எனவே இது போன்ற சமயங்களில் நாம் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் என சக்திகள் அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் போன்ற உணவுகளை எடுப்பதன் மூலமாக உங்கள் உடல் வலிகள் குறைந்து இரவில் நிம்மதியான தூக்கம் உருவாகும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை உடம்புக்குள் நுழைய விடாமல் விரட்டும் பவளமல்லி!

இரவில் சிறுநீர் கழித்தல்

கருவுற்ற பெண்களுக்கு இரவில் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். இதனால் அவர்கள் தூக்கத்திற்கு இடையே எழுந்து சிறுநீர் கழிப்பதால் அவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுகிறது. அதிலும் எட்டாவது முதல் பத்தாவது மாதம் வரை அடிக்கடி சிறுநீர் வெளியேறும். எனவே இது போன்ற சமயங்களில் பெண்கள் முடிந்தவரை பகலில் நேரம் கிடைக்கும் பொழுது உறங்குவது சிறந்தது.

உணவு மற்றும் கனவு

இரவு உறங்குவதற்கு முன்பு ஒரு சில பெண்கள் அதிகமான உணவுகளை உட்கொள்வார்கள். இதனால் அதை விரைவில் செரிமானமாகாமல் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். அதே போல் ஒரு சில பெண்கள் மன அழுத்தத்தை போக்குவதற்காக இரவு நேரங்களில் காபி அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கர்ப்பகால சமயங்களில் நாம் அதிகமாக உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது, ஆனால் அதை இரவில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

மேலும் படிக்க – சருமப் பொலிவு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எலுமிச்சை பழம்.!

ஒரு சில பெண்களுக்கு பயங்கள் அதிகரித்து கெட்ட கனவுகளை உண்டாக்கும். எனவே உங்கள் மன அழுத்தத்தை குறைத்து கனவுகளை கட்டுப்படுத்துங்கள். இல்லையனில் உங்கள் பயமே உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும். பெண்களின் மறுபிறவி யாகக் கருதப்படும் இந்த கர்ப்ப காலத்தை சரியான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை கொண்டு கடப்பது தான் சிறந்தது. ஏனென்றால் இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன