பெண்களையே அதிகம் குறிவைக்கும் உடல்பருமன் காரணங்களும் தீர்வுகளும்..!

  • by
why women in large number getting fat

உணவு வீணாகிறது என்கிற கவலையில் மிச்சமாகும் உணவு வகைகளை எல்லாம் சாப்பிட்டு விடும் பழக்கம் பொதுவாக நிறைய பெண்களிடம் உண்டு. உங்கள் எண்ணம் நல்லதுதான் ஆனால் மிச்சமான உணவுகள் நாய்கோ, குப்பைத் தொட்டிக்கோ போகும் போது பணம் மட்டும் தான் வீணாகும். ஆனால் அந்த உணவு உங்கள் வயிற்றுக்கு போனாலோ உங்கள் உடல்நலம் முழுதும் வீணாகிறது. அளவாக சமைத்து தேவையானதை மட்டும் சாப்பிடுங்கள். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் தான் உள்ளது.

உணவில் செய்யவேண்டிய சின்னச்சின்ன மாற்றங்கள் காலையில் டீ காபி குடிக்கும் பழக்கம் உள்ளவரா கொஞ்சம் பல்லை கடித்துக்கொண்டு சில மாற்றங்களுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். முடிந்தால் டீ காபி குடிப்பதற்கு பதிலாக ஒரு டம்ளர் சூடான வெந்நீருடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து அரை மூடி எலுமிச்சை பிழிந்து குடித்தால் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கலாம்.

ஒரே தானியத்தை ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் அரிசி அல்லது கோதுமை மட்டுமில்லாமல் விதவிதமான தானியங்களை பயன்படுத்துங்கள். காலையில் கோதுமை ரொட்டி, மதியம் அரிசிச் சோறு ,இரவு பழங்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி என மாற்றி அருந்துங்கள்.

மேலும் படிக்க – ராஜா போல வாழ்னுமா ராகி சாப்பிடுங்க..!

பொரித்த உணவு வகைகளையும், இனிப்பு வகைகளையும் சாப்பிடவேண்டும் என்ற ஆவல் எழும்பொழுது உங்கள் உடம்பைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

கூடியவரை எல்லா வேலைகளிலும் பச்சைக் காய்கறிகள் பழங்களை உட்கொள்ளுங்கள். வாழைப்பழம் கிழங்கு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

காலையில் அரசனைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிடவேண்டும் என்னும் முதியவர்களின் வாக்கைப் பின்பற்றுங்கள்.

நார்சத்து அதிகமுள்ள உணவுகளையும், மென்று தின்னக் கூடிய உணவுகளையும் நிறையச் சாப்பிடலாம். மேலும் காற்று ஏற்றப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து எலுமிச்சைச் சாறு இயற்கையான பழரசங்கள் இளநீர் போன்றவற்றை பருகவும்.

மேலும் படிக்க – கற்றாழையில் கூந்தல் பாதுகாப்பு குறிப்புகள்.!

எக்காரணம் கொண்டும் பட்டினி இருக்காதீர்கள் .ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்கு பதிலாக சிறிது சிறிதாக ஐந்து ஆறு முறை சாப்பிடலாம்.

இரவு உணவை படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்னதாக முடித்துக் கொள்ளுதல் நல்லது. தொலைக்காட்சி முன் அமர்ந்து கொண்டு, கைபேசியை பார்த்துக்கொண்டு கணிப்பொறியில் பணியில் பணி புரிந்து கொண்டு சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் நம்மையும் அறியாமல் அதிகமாக சாப்பிட்டு விடுவோம்.

எடை குறைப்பதில் தண்ணீரின் பங்கு

காலை உணவுக்கு முன் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீரும், மதிய உணவிற்கும் மாலை சிற்றுண்டிக்கும் இடையே அரை லிட்டர் தண்ணீரும், உட்கொள்ளுதல் வேண்டும்.

மறுபடியும் இரவு உணவுக்குமுன் ஒரு லிட்டரும் ,இரவு உணவிற்குப் பின் அரை லிட்டரும். நீரருந்த வேண்டும் .முடிந்த வரை சற்றுச் சூடான நீரையே அருந்துங்கள் அது சீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு கொழுப்பைக் கரைக்கிறது. இந்தத் தண்ணீர் மருத்துவத்தின் மூலம் உடல் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் படிக்க – இரும்பு தேகம் பெற கரும்புச்சாறு சாப்பிடுங்க

டயட் என்றால் என்ன? டயட் என்பது பட்டினி கிடப்பதில்லை. அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதில்லை .வெள்ளையாக இருப்பவற்றை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்யுங்கள் .சர்க்கரை ,உப்பு சாதம் பால் தயிர் போன்றவற்றின் அளவை குறைக்க வேண்டும்.

ஸ்கிம் மில்க் என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால் .ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியே தான் இருக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இந்த பாலை உபயோகிக்கலாம் சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.

வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ், பார்லி சேர்த்துக்கொள்ளுங்கள். ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும், பார்லி உடம்பில் உள்ள அதிக நீரையும் குறைக்கும். கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு பார்லி எடுத்துக் கொண்டால்

உடலில் உள்ள நீர் சத்துக்கள் அனைத்தும் குறைந்து, சுகப்பிரசவத்தில் பிரச்சினை ஏற்படும் .

இடுப்பு அளவை குறைக்க!

இடுப்பளவு குறைய வேண்டும் என்பது இன்றைய நாளில் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலும் ஆண்களோ பெண்களோ தங்கள் இடுப்பு அளவை குறைக்க வேண்டுமென்று சிரமப்படுகிறார்கள். இதற்கு உடற்பயிற்சி ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

குழந்தை பிறந்ததற்கு பின் உடல் எடை அதிகரிக்க காரணங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது.

குழந்தையை கவனிப்பதில் நம்மை நாம் கவனித்து கொள்வது இல்லை. குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும் என்று சாப்பிட்டு சாப்பிட்டே நம் வயிற்றின் கொள்ளளவு அதிகமாகிவிடுகிறது. மேலும் அதிகமான உடல் உழைப்பு இல்லாமல் போவது .

அடிவயிற்று சதை பகுதியை மட்டும் குறைக வீட்டிலேயே செய்யும் எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்யும் போது முறைகள்

உடற்பயிற்சி செய்யும் போது மிகவும் வேதனைப்படும் அளவு வலி இருந்தால் உடனே நிறுத்திவிட வேண்டும் .வயிறு முழுக்க சாப்பிட்டு விட்டு உடற் பயற்சி செய்யக்கூடாது. உணவு சாப்பிட்டு குறைந்த பட்சம் 4 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்து முடித்த பின் குறைந்த பட்சம் அரை மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும் .ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடலாம். தண்ணீர் நிறைய குடிக்கலாம். அதுவும் சூடான தண்ணீராக இருந்தால் நலம் .

பயிற்சிகளின் எண்ணிக்கையை படிப்படியாக தான் உயர்த்த வேண்டும் .நமக்கு வேகமாக உடல் எடை குறைய வேண்டும் என்று கடுமையாக பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. நாம் உட்காரும் போது சோபா ,சேர் என்று உட்காராமல் தரையில் உட்கார்ந்து எழுந்து பழகலாம் அதுவுமே ஒரு உடற்பயிற்சி தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன