சிவராத்திரியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் அதன் சிறப்புகள் என்ன?

  • by
Why We Celebrete Shivaraathri

இந்துக்களினால் விமர்சையாக கொண்டாடப்படும் மிகப்பெரிய விரதமே இந்த மகா சிவராத்திரி. ஒவ்வொரு இடங்களிலும் சிவனின் ஆலயம் இருக்கும், அந்த ஊரில் இருக்கும் அனைவரின் பாவங்களை போக்கி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு சிவனை இரவு முழுவதும் வழிபடும் நாளே மகா சிவராத்திரி.

மகா சிவராத்திரி

மகாசிவராத்திரி ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. அதாவது வருகிற பிப்ரவரி 21ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்க – அன்னதானம் செய்வதால் கிடைக்கும் அற்புத பலன்கள்..!

ஏன் கொண்டாடுகிறோம்

பிரளய காலத்தில் பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழிந்து நிலையில், அம்பிகை உமாதேவி ஈஸ்வரனை பிரார்த்தனை செய்து மீண்டும் பூமிக்கு உயிர்ப்பிக்கும் வகையில் விரதம் இருந்தால். நான்கு ஜாமங்களில் இரவு முழுவதும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்தால். இதனால் மனம் இறங்கி சிவன் மீண்டும் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மறுவாழ்வு அளித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அம்பிகை இந்த நாளில் சிவனை போற்றும் வகையில் தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தினாளே இந்த இரவை மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுவார்கள் என்றும், சிவனை முழுமனதுடன் பிரார்த்தனை செய்வார்கள் என வேண்டினாள்.

சிவராத்திரி விரதம்

சிவராத்திரி விரதம் அன்று சூரியன் மறைந்த பிறகு முதல் துவங்கி அடுத்த நாள் சூரியன் உதயமாகும் வரை செய்யப்படுவதே இந்த சிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று ஒருபொழுது மட்டுமே உணவு அருந்தி பிறகு சிவ ராத்திரி முழுவதும் கண் விழித்திருந்து அடுத்த நாள் அதிகாலையில் நீராடி சுவாமி தரிசனம் செய்து அடியார்களுக்கு உணவுவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க – ராகு கேது பெயர்ச்சி பலன்கள்..!

வேடனின் சிவராத்திரி

ஒருநாள் வேடன் வேட்டைக்குச் சென்ற பொழுது அவனை புலி ஒன்று துரத்தியது. அதற்கு பயந்து அவன் அருகிலிருந்த வில்வமரத்தில் ஏறிக்கொண்டான். தூக்கம் கண்ணை கட்டிய நிலையில் தூக்கி விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்று எண்ணி வில்வ மரத்தில் இருந்து ஒவ்வொரு இலைகளாக இரவு முழுவதும் பறித்துக் கீழே போட்டான். எதிர்பாராமல் அந்த இலைகள் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. அன்று சிவராத்திரி என்பதினால் இரவு முழுவதும் கண்விழித்து சிவனை வணங்கியதற்கு அந்த செயல் சமமானது. எனவே உடனே அந்த வேடனுக்கு முக்தி அளித்து மோட்சத்தை அருளினார் சிவபெருமான், என்று புராண கதைகள் சொல்லப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி பலன்கள்

சிவராத்திரி விரதம் மொத்தம் ஐந்து வகைப்படும். நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி. இதுபோல் சிவராத்திரி விரதங்கள் இருந்தால் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் நம்மை விட்டு நீங்கிப் போகும்.

மேலும் படிக்க – காசியின் காவலர் காலபைரவர் வேண்டியதை தருபவர்..!

எனவே மகாசிவராத்திரியின் பலனை அறிந்து அதில் சிவனுக்கான விரதத்தை வழிபடும் மூலமாக செய்து நீங்கள் தெரிந்ததோ அல்லது தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தையும் போக்கிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன