லாக் டவுன் ஏன் இவ்வளவு வலியை தருகிறது..!

  • by
why this corona lockdown is so painful

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் பரவாமல் இருப்பதற்காக மத்திய அரசு இந்த லாக்டவுன் திட்டத்தை அமல்படுத்தியது. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் நாம் இந்த லாக் டவுனை கடைப்பிடித்து வருகிறோம். இன்னும் 14 நாட்கள் இதே நிலை தொடர்ந்தால் மட்டுமே இந்த லாக் டவுன் முடிவிற்கு வரும். இது ஒரு சிலருக்கு எளிமையாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள பல பேருக்கு இந்த  லாக் டவுன் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

லாக் டவுன்

இந்தியாவை தவிர்த்து உலக நாடுகள் அனைத்தும் இந்த லாக்டவுனை பின் தொடர்ந்து வருகிறது. இதன் மூலமாக இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உலகத்தின் பொருளாதாரம் அனைத்தும் பாதித்துள்ளது. ஆனால் இந்தக் கொரோனா தொற்று உருவான சீனாவின் பொருளாதாரம் மட்டும் மேல் நோக்கிச் செல்கிறது. இது அனைத்திற்கும் காரணம் அவர்களின் ராஜதந்திரம் என்று பல நாட்டுப் பத்திரிகைகள் கூறி வருகிறது. பொருளாதாரத்தை தவிர்த்து நம்முடைய அன்றாட வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவுகள், நம்முடைய நண்பர்கள், சொந்தக்காரர்கள் என எல்லாவற்றயும் நினைத்துக் கவலைப்பட தொடங்கிவிட்டோம்.

மேலும் படிக்க – கொரோனா வைரசை கண்டு பயப்படாதீர்கள்..!

தினக்கூலி தொழிலாளர்கள்

லாக் டவுன் அமல்படுத்தியவுடன் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள், இந்தியாவில் பல மாநிலங்களில் தினக்கூலி செய்யும் தொழிலாளர்கள் தான். இவர்கள் அன்றைய நாளுக்கு செய்யும் வேலையைப் பொறுத்து பெரும் சம்பளத்தில் மூலமாகவே தங்கள் குடும்பத்தை பாதுகாத்து வந்தார்கள். ஆனால் இந்தியா முழுவதும் எப்போதும் முடகத்திற்கு வந்ததோ அப்போதிலிருந்து இவர்களின் வருமானம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதன் மூலமாக அன்றாட வாழ்க்கையை இவர்கள் மிக கஷ்டத்துடன் எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் ஊர்களை விட்டு பிற மாநிலங்களுக்கு வேலைக்கு வந்துள்ளாதால் இவர்களுக்கு கிடைக்கப்படும் உணவுகள் மற்றும் அரசாங்க உதவிகள் ஏதும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

தொழில் செய்பவர்கள்

தொழில் செய்து வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கும் இந்த முடக்கம் பெரிய ஆபத்தாக அமைந்தது. மளிகை கடை, காய்கறிக்கடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வைத்து தொழில் செய்பவர்களின் நிலை ஓரளவுக்கு நிலையாக இருக்கிறது. ஆனால் மக்களை நம்பி பிற உபயோகப் பொருட்களை வைத்து தொழில் செய்பவர்கள் தங்கள் கடைகளை முழுமையாக அடைந்துள்ளார்கள். இதனால் தாங்கள் வாங்கிய கடன் முதல், குடும்பத்தில் இருக்கும் கடமைகள் வரை எதையும் சரியாக செய்ய முடியாமல் கஷ்டப் பட்டு வருகிறார்கள். இதில் சிறிய தொழில் செய்பவர்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை பதித்துள்ளார்கள். பெரிய தொழில் செய்பவர்களின் இருப்புத் தொகை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சிறிய தொழில் செய்பவர்கள் அன்றாட கிடைக்கும் லாபத்தை பொருத்தே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள், இவர்களுக்கு இது சற்று கடினமானது மாறியுள்ளது.

மாணவ மாணவிகள்

எந்த ஒரு கவலைகளும் இல்லாமல் சுதந்திரப் பறவைகளாக சுற்றிவந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரியில் பயில்பவர்களின் நிலை இப்போது மோசமாக மாறி உள்ளது. இதுவரை முழுமையாக இரு நாட்கள் கூட வீட்டில் தங்காத இவர்கள் தொடர்ந்து 10 நாட்கள் தங்கி உள்ளதால் இவர்களின் மன நிலை மிக மோசமாக மாறி உள்ளது. நண்பர்களை நேரில் சந்திக்க முடியாத நிலை மற்றும் வெளியே சென்று தங்கள் நேரத்தை கழிக்கமுடியாத நிலை என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போன் கையுமாக இவர்கள் வீட்டில் அடைந்து வருகிறார்கள்.

வேலைக்கு செல்பவர்கள்

தினமும் அரசாங்க வேலை மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வேலையை வீட்டில் இருந்தபடி செய்கிறார்கள். ஒருசில வேலையை வீட்டில் இருந்தபடி கூட செய்யாமல் இருப்பதனால் எந்த ஒரு வேலையும் இல்லாமல் இவர்களின் மனநிலை பெரிதாக பாதித்துள்ளது. அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக எல்லா வேலைகளையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கு செல்லும் ஏராளமான நடுநிலை வயது உடையவர்கள் வயதானவர்களைப் போல் உணர்ந்து வீட்டில் தனிமையில் அடைந்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க – தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய்….!

பிற மாநிலங்களில் சிக்கியவர்கள்

தங்கள் வீட்டை விட்டு பிழைப்பிற்காக பிற மாநிலத்திற்கு சென்று உள்ள தொழிலாளர்களும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். தங்கள் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை மற்றும் தங்கள் குடும்பம் வெகு தூரத்தில் படும் கஷ்டங்கள் என அனைத்தையும் நினைத்து இவர்களின் நாட்கள் வேதனையாக செல்கிறது. நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இதுபோன்ற இக்கட்டான நிலையில் தங்கள் குடும்பத்துடன் இருக்க முடியாத சூழ்நிலை உண்டாவதை நினைத்து ஒவ்வொரு நாளும் கஷ்டப் பட்டு வருகிறார்கள். இவர்கள் இந்த முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் என நாட்களை எண்ணி தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

இது அனைத்திற்கும் தீர்வாக இருக்க உங்கள் குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அவர்களுடன் இணைந்திருங்கள். குடும்பத்திற்குள் மகிழ்ச்சியான சூழ்நிலையை உண்டாக்குங்கள். எப்போதும் நேர்மறை எண்ணத்தை எல்லோருக்கும் பகிருங்கள். எல்லாம் நன்மைக்கே, எல்லாமே ஒரு நாள் முடிவிற்கு வரும் என்ற எண்ணத்தில் இனி வரும் நாட்களை பொறுமையாக கழியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன