பிரசவத்தின் பொழுது முதுகுத்தண்டில் ஏன் ஊசி போடுகிறார்கள்..!

  • by
why they are putting injection during c-section

உலக மருத்துவத்துறை எதிர்பார்க்காத அளவிற்கு வளர்ந்துள்ளது, இருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் எளிமையாக செய்து வந்த ஏராளமான சிகிச்சைகளை மருத்துவர்கள் இன்று மிக சிரமமாக செய்து வருகிறார்கள். அதில் மிக முக்கியமான சிகிச்சை முறைதான் பிரசவத்தின்போது செய்யப்படும் அறுவை சிகிச்சை. எனவே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 100/80 பெண்கள் பிரசவத்தின் பொழுது அறுவை சிகிச்சைதான் செய்து கொள்கிறார்கள். எனவே இதுபோல் பிரசவத்தை அறுவை சிகிச்சை மூலமாக செய்யப்படும் பெண்களுக்கு முதுகுத்தண்டில் ஊசி ஒன்றை போடுவார்கள். இதன் தாக்கம் குழந்தை பிறந்த அடுத்த மூன்றாண்டுகள் வரை இருக்கும் என ஏராளமான பெண்கள் தங்கள் அனுபவங்களை கூறி வருகிறார்கள்.

வலியை குறைக்கும்

தலை பிரசவம் என்பது பெண்களுக்கு மறு பிறவியாக அமைகிறது. ஏனென்றால் இதுவரை அவர்கள் உணராத வலி மற்றும் வேதனைகள் அனைத்தும் இந்த தலைப் பிரசவத்தில் உணர்கிறார்கள். இச்சமயத்தில் அவர்களுக்கு வலியை உணராமல் இருப்பதற்கு முதுகுத்தண்டில் ஊசி ஒன்றை போடுவார்கள். அந்த ஊசி போடும் போது ஏற்படும் வலி மற்றும் பிரசவம் நிறைவடைந்து ஒரு சில மாதங்கள் வரை இந்த வலியின் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். நாம் எப்போதெல்லாம் அதிக எடையை தூக்குகிரோமோ அல்லது அதிகமான வேலைகளை செய்கிறோமோ அப்போதெல்லாம் ஊசி போட்ட இடத்தில் உறுத்தல் ஏற்படும்.

மேலும் படிக்க – முருங்கைக்காயின் முக்கியத்துவம்..!

சுகப்பிரசவம்

சுகப்பிரசவத்தினால் பெண்களுக்கு ஏராளமான வலிகள் ஏற்படும். ஆனால் இந்த பிரசவத்தின் மூலமாக உங்களுக்கு குழந்தை பிறந்தால் நிச்சயம் உங்கள் எதிர்காலம் அழகாக இருக்கும். இந்த சமயத்தில் ஏற்படும் வலிகளை பொறுத்துக்கொள்ளும் பக்குவத்திற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் சுகப் பிரசவத்தின்போது உடல் ரீதியாக உங்களுக்கு ஏராளமான வலிகள் ஏற்படும் எனவே அதை எதிர்த்து போராடுங்கள். இல்லை எனில் உங்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் பார்ப்பார்கள், இதனால் ஏற்படும் வடு நிரந்தரமாக உங்களை பாதிக்கும்.

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு ஏராளமான பெண்கள் பிரசவத்துக்காக வருகிறார்கள். முடிந்தவரை சுகப்பிரசவம் மூலமாக குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முயற்சி செய்வார்கள். அது தோல்வி அடையும் பொழுது அறுவைசிகிச்சை பின் தொடர்வார்கள். எனவே உங்கள் உடலை பல மடங்கு வலிமையாக்கி ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சியை செய்து வந்தால் சுகப்பிரசவம் நடக்க அதிகமான வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க – வெள்ளரிக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..!

கவனம் கொள்ளுங்கள்

பெண்கள் கருவுற்ற மாதம் முதல் குழந்தை பிறக்கும் வரை மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதத்திற்கும் அதற்கேற்ற உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இதை தவிர்த்து உங்களுக்கு பிரசவம் நிகழப்போகும் நாட்கள் வரை மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும். சரியான மருத்துவமனை மற்றும் சரியான மருந்துகளை தேர்ந்தெடுத்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக நிச்சயம் உங்கள் பிரசவம் சுகமாக அமையும்.

பெண்களின் மிக முக்கியமான காலம் இதுவாகும், எனவே ஆண்கள் அதை கருத்தில் கொண்டு உங்கள் துணையுடன் நேரத்தை செலவழியுங்கள். அதைத் தவிர்த்து அவர்களை பொறுப்புடன் பார்த்துக் கொள்ளுங்கள், இதன் மூலமாக உங்கள் துணையும் மற்றும் உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன