சித்திரையின் முக்கியத்துவம் அறிவோம் வாங்க

  • by

சித்திரை  மாதம் முதல் நாள் தமிழ் நாட்டில் தமிழ் வருடப் பிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் மக்களால் பூஜை புனஸ்காரங்கள் செய்து பட்சனங்கள், காய் கனிகள் வைத்து இறைவழிபாடு செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.  சித்திரைக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 சித்திரை முதல் நாளை சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும், பங்குனியைக் ‘கடை மாதம்’ என்றும் அழைப்போம்.  மேச ராசியில் சித்திரையில் சூரியன் சஞ்சரிக்கும் முதல் என்ற தொடக்கம் மேச ராசியில் இருப்பதால் இதனை முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 

சித்தர்கள் கணிப்பு:

தமிழ்நாட்டில் சித்தர்கள் அவரிகளின் கணிப்புகளும்  தமிழ் மாதமான சித்திரையை முதலாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. உயிரினங்களுக்கு உகந்த மாதம் சித்திரை மற்றும் மகான்களின்  மாதமாக இதனை கணிக்கின்றனர். 

 இடைக்காட்டுச் சித்தர் அவர்கள் மாத பலன்ளையும், வருட பலன்களையும் எழுதி வைத்துள்ளார். 

 சித்திரை  மாதத்தில் வாராஹ அவதாரம்  எடுத்தது. சதுர் மஹாயுகம் சித்திரையை முதலாக வைத்து தொடங்குகின்றது. கிருதயுகம் தொடங்கியதும் சித்திரை மாதம் என்பது  நாம் அமைவரும் அறிந்த ஒன்றாகும். சித்திரையின் தொடக்கத்தில் கங்கை மற்றும் மத்ஸ்ய அவ்தாரங்கள் நடந்தனை இதனை வைத்து நாம் சித்திரையில் உள்ள மகத்துவத்தை  தெரிந்து கொள்ளலாம். சித்திரை மாதம் தொடக்கத்தில் வேம்பில் இருந்து பூக்கள் பூக்கத் தொடங்கும். வசந்த கால தொடக்கமாகவே இதனை கருதலாம். சித்திரையில் மேசம் முதல் ராசி அதனையும் அதனுடன் இணைந்த அஸ்வினி முதல்  நட்சத்திரமாக அஸ்வினிகுமாரர்கள் இதன் அதிபதிகள் என்ற சிறப்பும் கொண்டுள்ளது. 

அஸ்வினி தேவர்கள் முதல்  நட்ஸ்த்திரமான அஸ்வினி அதிபதிகளாக இருக்கின்றனர். நட்சத்திர நாளும் சித்திரையில் தொடங்குவதால் அந்த நாள் முக்கிய நாளாக  கொண்டாடி வருகின்றனர்.  இந்த நன்நாளில் அஸ்வினி குமாரர்கள் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து  செயல்படுவார். அஸ்வினியில் சூரியன் பிறந்திருப்பார் அதனால் அவர் நீடித்து நிலைத்திருப்பார் என்கின்றது குறிப்புகள். 

12 மாதங்கள் காலச்சக்கிரத்தின்  உடல் உறுப்புகளாக கணக்கிடப்படுகின்றனர். மனிதனுக்கு  நோய் நொடிகள் அனைத்தும் மாதத்திற்கு ஏற்ப இருக்கும் சித்திரையில் வெயில்  மண்டையைப் பிழக்கும் அதனைத்தான் குறிக்கின்றது. இந்த மாதத்தில் மேச ராசி, சூரியன்   பயணம் லக்னத்தை ஜகமாக கொண்டு அழைப்பார்கள். இதைவைத்துதான் உலகத்தின் போக்கும் என கணிப்பார்கள்.  உலகத்தின் பலனை இந்த சூரிய லகனத்தை வைத்துதான் கணிப்பார்கள். இதனை வைத்து இந்த ஆண்டு நாட்டில் என்னனென்ன நடக்கும் என்பதை அறிதியிட்டு தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க:தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வழிகள்..!

சித்திரை தொடக்க்த்தை பஞ்சாங்கம் கணிப்புகள் வெளிவரும். இதில் விவசாயன்,  விலைவாசி, செல்வம் ஆகியவற்றை கணிக்க முடியும். ராஜாக்கள் சித்திரை வருடப் பிறப்பில் கடவுளை   ஆராதித்து பஞ்சாக்க வாக்கியத்தை கேட்பார்கள். இதனை வைத்து நாட்டில் விளைச்சல், வளங்கள், போர் ஆகிய அனைத்தும் முடிவெடுத்து திட்டமிட்டு நாட்டை வழிநடத்துவார்கள். 

இந்தனை ஆண்டுகள் ஆகியும் இதனை வைத்துதான்  தமிழர்கள் கொண்டாட்டத்தை தொடங்குகின்றனர். எவ்வளவு மாற்றங்கள் நாம் எதையோ செய்தோம்  ஆனால் பாரம்பரியம் என்பது வேறு என்பதை பார்க்க முடிகின்றது. சித்திரையின் மகத்துவமும் வேறானாது ஆகும். இதனைத்தான் அடிப்படையாக வைத்து செயல்பட வேண்டும் என்ற முன்னோர்கள்  பாரம்பரியத்தை இன்றைய அவசர உலகிலும் நாம் கடைப்பிடிக்கின்றோம் இது சிறப்பினும் சிறப்பாக அமைந்து இருக்கின்றது.  இந்த சித்திரை பலன்களை வைத்து நமது வீடுகளில் முக்கிய முடிவை எடுக்கின்றனர். நல்ல தொடக்கங்களை எல்லாம் இந்த மாதத்தை முதலாக தொடங்குகின்றனர்.

மேலும் படிக்க: இபோலா மற்றும் கொரோனா வைரஸிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது..!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன