காகத்திற்கு படைத்து பிதருக்களிடம் ஆசி பெறுங்கள்!

  • by

காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்பது நாம் அறிந்ததுதான் அதற்கு செய்யும்  படையல் முன்னோர்கள் ஆசிர்வாதம் பெற்றுதரவல்லது. காகத்தினை எமலோகத்தின் வாசலில் இருக்கும், எமனின் தூதுவன் ஆகும். 

 தினமும்  உணவு சாப்பிடும் பொழுது  காகத்துக்கு ஒரு பிடி உணவு வைக்க வேண்டும் என்பது முன்னோர்கள்  வாக்கு ஆகும்.

காகத்திற்கு உணவு

முன்னோர்களின் ஆன்மாக்கள்:

முன்னோர்கள் இறந்த பிறகு ஆன்மாக்கள் அவர்கள் குடும்பத்தைக் காண வசித்த இடத்தைத் தேடி வரும் என்பது நம்பிக்கையாக காலம் காலமாக பின்பற்றப்படும் ஒரு முறையாகும். 

மேலும் படிக்க – வாழ்க்கையில் வெற்றியடைய சுக்கிர பரிகார மிக அவசியம்.!

 நம்முன் நேரடியாக முன்னோர்கள்  தோன்றுவதில்லை. அவர்களின் வருகையானது  காகத்தின் ரூபத்தில் வருவதாகக் கூறப்படுகிறது. நம் முன்னோர்களை நினைத்து தினமும் ஒரு பிடி சாதம் காக்கைக்கு வைக்க வேண்டும்.

ஒரு பிடிசாதம்:

தினம் முன்னோர்களுக்கு சாதம் வைப்பது சிறந்த ஒன்றாகும்.  தினமும் ஒரு பிடி உணவு வைக்க நேரம் மற்றும் நினைவில்லை எனில்  அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களிளாவது முன்னோர்களின் பெயர்களை சொல்லி அவர்களுக்கு எள்ளும் தண்ணியும் வைத்துத் திதி கொடுத்து வந்தால் நன்மை  பயக்கு அவர்களின் ஆசிர்வாதம் உங்களை சிறப்பான முன்னேற்றதை கொடுக்கும். 

காகத்திற்கு உணவு

முன்னோர்களின் ஆசியானது வாழ்வியலுக்கு அவசியம் ஆகும் அது முறையாக பெறவவில்லை எனில் செய்யும்  காரியங்கள் பூர்த்தியாகது. அதிலும் முன்னோர்களின் சாபம் பொல்லாததது ஆகும். .

காகத்திற்கு உணவளிப்பதால் பயன்கள்:

முன்னோர்களுக்கு  நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்குத் தினசரி உணவு கொடுத்தல் அவசியம் ஆகும்.  காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன்-மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் திளைக்கச் செய்யும். குடும்பத்தில்  அமைதி நிலைத்திருக்கும். 

மேலும் படிக்க – திருமணத்தடையை நீக்கும் காலபைரவர் வழிபாடு..!

 சனீஸ்வர பகவானின் வாகனம் காகம் என்பதால் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவானின் கெடுப்பார்வையில் இருந்து    கொஞ்சம் தப்பிக்கலாம்.

ஏழை சனி:

உங்களுக்கு ஏழரை சனி நடைபெறும் காலத்தில் . இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறுவதற்க்கு சிறந்த வழி காகத்திறகு ஒரு பிடி சோறு மற்றும் வர திராட்சை அது உங்களை அருள் பெற வைக்கும். சனீஸ்வரன்  தீவிர பார்வையானது தீமை நன்மை இரண்டும் கலந்து வரும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறும் காலங்களில் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பதன் மூலம் ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்க முடியும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன