திருமணம் ஆன புதுப்பெண் ஏன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வரவேண்டும்.!

why newly married bride should enter the groom's house with right leg?

திருமணமான புதுப் பெண்ணை எப்போதும் வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து வா என்று அழைப்பார்கள். இதற்கான காரணம் நாம் என்ன நினைத்திருப்போம் என்றால் நல்ல காரியம் எது செய்வதாக இருந்தாலும் அதை வலது கை அல்லது வலது கால் மூலமாக தான் தொடங்க வேண்டும் என்பது விளக்கப்படாத ஒன்றாக உள்ளது. ஆனால் இதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் நமது வலது கால் பாதத்தில் நாராயணன் சகிதமாக அன்னை மகாலட்சுமி குடியிருக்கிறார். இதனால்தான் நமது வலது காலை முதலில் எடுத்து வைத்து உள்ளே வா என்கிறார்கள்.

சுத்தம் எங்கிருக்கிறதோ அங்கு தான் மகாலட்சுமி இருப்பாள் என்பார்கள். பெரியோர்கள் இதனால்தான் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் மகாலட்சுமி குடி ஏறுவாள் என்பார்கள். அதேபோல்தான் ஆறு, குளம், இயற்கை அழகு உள்ள எல்லா இடங்களிலும் மகாலட்சுமி இருப்பாள். இதற்காக தான் நாம் எப்போதும் நம் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் நம் பாதத்திலும் மஹாலக்ஷ்மி அருள் இருக்கும் எனவேதான்  சுபகாரியங்களுக்கும் முன்பாக நமது பாதங்களில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

மேலும் படிக்க – குலதெய்வம் வழிபாட்டை செய்து பலன் பெறுவது எவ்வாறு ?

யார் மீதாவது நம் பாதங்கள் பட்டால் உடனே அவர்களுக்கு மரியாதை தன்மையுடன் மன்னிப்பு கேட்கிறோம். இதற்கு காரணம் நம் பாதம் தீண்டத்தகாத ஒரு பகுதி அல்ல அது மிகவும் புனிதமான ஒரு பகுதியாகும். இதற்காகதான் ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது தலை வாயிற்படியில் படிநிலை வைத்து காலால் உள்புறமாக உதைக்கிறார். எனவே நம் உடலில் மிக மரியாதைக்குரிய பகுதியாக இருக்கும் பாதத்தினால்தான் மகாலஷ்மி உங்கள் வீட்டிற்குள் நுழைகிறாள்.

எப்போதும் நாம் ஒருவருடன் ஆசீர்வாதம் அல்லது மரியாதைக்குரிய நிமித்தமாக ஏதாவது செயலை செய்வதாக இருந்தாலும் அவர்கள் பாதத்தை தான் தொட்டுக் கும்பிடுவோம். இதை ஏன் நம் தலையில் தொடக் கூடாது. ஏனென்றால் பாகத்தில் தான் லட்சுமி குடியிருக்கிறாள் எனவே எல்லா சுப காரியங்கள் செய்வதற்கு முன் நம் பாதங்களை மிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் இப்படி செய்வதன் மூலம் தான் மகாலஷ்மி  நம் பாதத்தில் குடியேறி நம் இல்லத்தில் மகிழ்ச்சியும் செல்வத்தையும் பெருக உதவுவாள்.

2 thoughts on “திருமணம் ஆன புதுப்பெண் ஏன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வரவேண்டும்.!”

  1. Pingback: எதிர்பார்ப்பு இல்லாத காதல் வேண்டுமா இதை செய்யுங்கள்

  2. Pingback: இதுபோன்ற ஆண்களைதான் பெண் திருமணம் செய்து

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன