பசி எல்லைமீறி செல்லும்போது நமக்கு ஏன் குமட்டல் வருகிறது?

why nausea comes when your carvings become uncontrollable

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இதற்கு நாம் எப்போதும் இயற்கையான உணவுகளை உட்கொள்வது தான் நோயற்ற வாழ்விற்கு உகந்ததாகும். அதுமட்டுமல்லாமல் நாம் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். அப்படி நாம் உணவு அருந்த மறந்து விட்டாலும் அல்லது தாமதமாக உணவு அருந்தினால் நம்மை அறியாமலே நமக்கு குமட்டல் ஏற்படும். இதற்கு காரணம் நமக்கு பசியின் அளவு மிக அதிகமாக இருப்பதுதான் இது ஏன் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.

எப்போதெல்லாம் பசி எடுக்கிறது அப்போதெல்லாம் நாம் உணவு அருந்தி விடவேண்டும். ஆனால் நம் வேலை காரணமாக நாம் தாமதமாக உணவு அருந்தினால் நம் உடலில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரப்பை அதிகப்படுத்தி குமட்டலை ஏற்படுத்துகிறது. இது காலை உணவு மட்டுமல்லாமல் மதிய உணவைக்கூட நீங்கள் சரிவர சாப்பிட முடியாமல் செய்து விடுகிறது.

மேலும் படிக்க – குப்பை இலைகளில் இருக்கும் நன்மைகள்..!

பொதுவாக நாம் உணவை உட்கொண்ட உடனே ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி ஆகி நமது உணவை உடைத்து அதை ஆற்றலாக மாற்றுகிறது. இந்த ஆற்றல்தான் நம் உடல் முழுக்க சென்று நம்மை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்கிறது. இந்த நீண்ட செயல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நாம் உணவை எடுத்துக்கொள்ள மறந்து விட்டாலும் அல்லது தாமதமாக உணவு எடுத்தாலும் நமது வெறும் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி ஆகிறது. ஆனால் உணவு ஏதும் இல்லாததால் நமது உணவுக் குழாய் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்துகிறது இதனால் தான் நமக்கு நெஞ்செரிச்சல் குமட்டல் போன்றவை உண்டாகிறது.

மேலும் படிக்க – ஏராளமான நன்மைகளை தரும் கிராம்பு.!

எனவே நாம் உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஆரம்பத்தில் சாதாரணமாக தான் இருக்கும் ஆனால் எப்போது வலியுடன் சேர்ந்து நமக்கு குமட்டல் ஏற்படுகிறதோ அப்போது இது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பிக்கிறது. இதனால் ஆரம்பத்திலேயே நாம் சரியாக உணவு அருந்துவது நல்லது இல்லையெனில் நாம், நம் நேரங்களை அதிகமாக மருத்துவமனையிலேயே செலவழிக்க நேரிடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன