786 என்ற எண்ணை முஸ்லிம்கள் ஏன் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்..?

why muslims commonly use the number 786 and secret behind it

உலகில் மிகப்பெரிய மதம் என்று கருதப்படும் கிறிஸ்துவத்தை பின்னுக்குத் தள்ளும் நிலையில் இருக்கிறது இஸ்லாமிய மதம். இதற்கு காரணம் இஸ்லாமிய மதத்தில் செய்யப்படும் வழிபாடுகள்தான். எல்லா மதத்திலும் தங்கள் கடவுளை போற்றி அவருக்காகவே கோவில்களுக்கு சென்று பூஜை மூலமாக பிரார்த்தனை செய்வோம், ஆனால் இஸ்லாமிய மதத்தில் கடவுளுக்கு என்று ஒரு உருவமே இல்லை. எல்லாம் கடவுள் என்ற வழியில் இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அப்படியிருக்கையில் இவர்களை சுற்றியும் இவர்களைப் பற்றி ஏராளமான அரசியல்கள் நடந்துகொண்டு வருகிறது. உலக அளவில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற கோணத்திலேயே மக்கள் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை மற்றும் மதபற்று மட்டுமே அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் 786 என்ற எண்ணை ஏன் அதிகளவில் பயன் படுத்துகிறார்கள் அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

786 என்ற எண்ணை உலக அனைவரும் பயன் படுத்துவதில்லை, இதை இந்தியா, பாகிஸ்தான், மியன்மார் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே இதை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணைய் ஒரு வியாபாரப் பொருளாகவே பார்க்கிறார்கள், இந்த எண் கொண்ட ரூபாய்  தாளை அதிக பணத்தை கொடுத்து வாங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சுபகாரியங்கள் அல்லது நல்ல செயல்களை செய்வதற்கு முன் இந்துக்கள் எப்படி பிள்ளையார் சுழி போடுகிறார்களோ மற்றும் கிறிஸ்தவர்கள் சிலுவை போடுகிறார்களோ அதற்கு இணையாக இவர்கள் இந்த எண்ணெய் சுபகாரியங்களுக்கு முன் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க – சிறப்புமிக்க தைப்பூசத் திருநாள்..!!

786 என்று என்னை பிஸ்மில்லா அல் ரஹ்மானி அல் ரஹீம் என்ற குர்ஆன் வெளிப்பாட்டை இந்த எண் மொத்தமாக சித்தரிக்கிறது என்று ஒரு சிலரால் நம்பப்படுகிறது. ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் ஒவ்வொரு என் மதிப்பு இருக்கிறது. இதன் மதிப்பை பிஸ்மில்லா என்ற வார்த்தையை மதிப்பிட்டால் 786 என்ற எண் வருகிறது. இதை பெரும்பாலும் பாகிஸ்தானியர்களின் நம்பிக்கையாக இருந்தது பின்பு படிப்படியாக இந்தியா மற்றும் ஆசியாக்களில் இதை பின்பற்றத் தொடங்கினார்கள்.

இதன் வெளிப்பாடாக இவர்கள் புதிதாக வாகனம் வாங்கினாலும் அல்லது ஏதாவது பொருளை வாங்கினாலும் அதில் இந்த எண் உள்ள பொருளுக்கே முன்னுரிமை தருவார்கள் இதை தவிர்த்து இதற்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் இவர்கள் செலவு செய்ய தயாராக இருந்தார்கள். இதனாலேயே பலரும் இந்த எண் உள்ள ரூபாய் தாள்களை அதிக விலைக்கு விற்றார்கள் மற்றும் வீட்டு கதவு முன் அல்லது இவர்கள் பயன்படுத்தும் ஏதாவது பொருள்களின் மேல் இந்த என்னை நிரந்தரமாக பதி விட்டார்கள்.

ஆனால் பண்டைய காலங்களில் இது போன்ற வழிமுறைகள் எதுவும் இல்லை. இதற்கான பதிவுகளும் எந்த ஒரு புத்தகத்திலும் குறிப்பிடவில்லை இதனாலேயே பெரும்பாலான முஸ்லிம்கள் இதை எதிர்த்து வந்தார்கள். அல்லாவிற்கு நிகராக எந்த ஒரு சொல்லும் கிடையாது. அது மட்டுமல்லாமல் இது போன்ற குறுக்கு வழி உடைய எழுத்துக்களை கொண்டு இறைவனை பார்ப்பது இவர்கள் வழிமுறைப்படி தவறாகும். எனவே இதை பின்பற்றுவது தவறானது என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.

மேலும் படிக்க – தை அமாவாசையின் சிறப்புகள் மற்றும் அந்நாளில் என்னவெல்லாம் செய்யலாம்.!

பாரம்பரியப் பண்பு மிக்க ஒரு மதம்தான் இந்த இஸ்லாமிய மதம். இவர்கள் மதத்தை மேம்படுத்துதலும் அல்லது புதுமை காண்பதற்க்கு நம்பிக்கை இல்லாதவர்கள். பழங்கால இறைவனை எப்படி எல்லாரும் போற்றி அவர்களும் அதே வழியில் போகக் கூடியவர்கள், எனவே இதுபோன்ற கடவுளின் பெயரை சுருக்கி அமைப்பதில் விருப்பம் இல்லாதவர்கள் ஆனால் ஒரு சிலரின் மூடநம்பிக்கையால் இன்றும் இதை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த எண் ஒரு அதிர்ஷ்டகரமான எண்ணெய் என்று நம்பப்படுகிறது. இதனாலேயே புதிதாக பெயர் வைப்பதற்கு இந்த எண் வரும்படி அவர்களுக்கு பெயர் வைக்கிறார்கள். இதை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அதிகமானவர்கள் இது ஒரு அதிர்ஷ்டகரமான எண் என்ற எண்ணத்தில் இதை தன் மேல் வரைந்து கொள்ளும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன