நாம் குலதெய்வத்தை ஏன் வழிபட வேண்டும்?

why it is necessary to worship our diety god at new moon day

எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் நாம் முதலில் குலதெய்வ கோவிலுக்கு சென்று அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்ற பிறகு நாம் சுப காரியத்தை தொடங்கும். ஆனால் இதை  நம் பெற்றோர்கள் மற்றும் முதியவர்கள் பின்பற்றியதால் இதை நாமும் பின்பற்றுகிறோம். இதற்கான காரணத்தை இன்று வரை பலரும் அறிந்திடாமல் இருக்கிறார்கள். குலதெய்வ கோவிலில் சிறப்பு மற்றும் நாம் ஏன் குலதெய்வக் கோவிலில் சென்று வழிபடவேண்டும் என்பதை பற்றிய தெளிவான விளக்கம் யாரிடமும் இல்லை. இது அனைத்திற்குமான பதிலை இங்கே பார்ப்போம்.

குலதெய்வத்திற்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு நீங்கள் எந்த ஒரு கடவுளை வணங்கினாலும் அந்த கடவுள் உங்களுக்கு நேரடியாக ஆசீர்வாதத்தை தராமல் குலதெய்வம் மூலமாகவே உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். இதனால் நீங்கள் உங்களுக்கு பிடித்த கடவுள் அல்லது நீங்கள் நம்பும் கடவுளை பிரார்த்தனை செய்வதன் மூலம் உங்களுக்கு நேரடி பலன்கள் எதுவும் கிடைக்காது.

மேலும் படிக்க – சிவராத்திரியில் வில்வ பூஜை செய்து வளம் பெருக

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு நம் பூஜை அறையில் மற்ற சாமிகள் படத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை நம் குலதெய்வத்திற்கு கொடுக்க மறந்துவிடுகிறோம். இது மிகப்பெரிய தவறாகும், நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும் சக்தியை நேரடியாக தருபவர் தான் நமது குலதெய்வம். இதனால் இவரின் படத்தை பெரிதாக வைத்துவிட்டு மற்ற சாமிகள் படம் தேவை என்றால் வைக்கலாம் இல்லை என்றாலும் இதனால் தங்களுக்கு எந்தத் தீங்கும் நடக்கப் போவதில்லை.

நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த நம் குல தெய்வத்தை நாமும் அதே வழியில் வழிபட வேண்டும் அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் தான் உங்கள் வாழ்க்கை கஷ்டங்கள் மற்றும் நோய்கள் இல்லாமல் வாழ முடியும்.

வீட்டில் குலதெய்வத்தின் படத்தை தவிர மற்ற தெய்வங்களை வழிபடுவதினால் உங்களின் வேலை அதிகரிக்கிறது. ஏனென்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுளின் படங்களை உங்கள் வீட்டில் வைப்பதினால் அங்கு இருக்கும் அனைத்து கடவுளுக்கும் தனித்தனியாக பூஜைகள் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் செய்ய மறுத்தால் அது உங்களுக்கே வினையாக மாறிவிடும். இதனால் இது போன்ற கஷ்டங்களை நீங்கள் ஈடுபடாமல் இருக்க வேண்டுமென்றால் குலதெய்வத்தை மட்டும் வைத்து அவர்களை வழிபடுவதினால் நீங்கள் நினைத்த காரியம் அல்லது வரமாக என்னும் விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க – சிறப்புமிக்க தைப்பூசத் திருநாள்..!!

ஜாதகத்தில் இருக்கும் பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கையில் அவ்வப்போது தோன்றும் துன்பங்கள் அனைத்தும் நீங்க குலதெய்வ வழிபாட்டை நீங்கள் மறக்காமல் பின்பற்ற வேண்டும். எவரொருவர் தங்கள் குலதெய்வத்தை சரியாக பிரார்த்தனை செய்து வருகிறார்களோ அவர்களுக்கு எந்த கிரகம் மூலமாக பிரச்சனை வராமல் நம் குலதெய்வம் காத்துக் கொள்கிறது. இதுபோன்ற சூழல்களில் அம்மாவாசை அன்று உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று மண் விளக்கை ஏற்றி எலுமிச்சைப் பழத்தைக் அருகில் உள்ள சூலாயுதத்தில் குத்தி உங்கள் குலதெய்வத்தை வழிபடுவதன் மூலமாக நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். எனவே குல தெய்வத்தின் சக்தியை அறிந்து உங்கள் வேண்டுதலையும், பிரார்த்தனையும் முன்வையுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன