சிந்தனை சிற்பி வாழ்வியலின் குரு பெரியார்

  • by

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் பாடமாக இருபார்கள். நம்மை சிலர் கவர்ந்து செயல்படுவார்கள். சிலர் இப்படி வாழ வேண்டும் என நமக்கு வழிக்காடுவார்கள் அவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர் இவரது கொள்கைகள், கேள்விகளுக்கு பதிலளிக்கும் போக்கு அத்துடன் நம்மை சிந்தித்து செயல்பட வைக்கும் ஒரு பெருன்ம் பொருப்பை தன்னகத்தே கொண்டிருந்தார்.

பெரியார்:

சாதரண குடும்பத்தில் பிறந்தவர் ஆனால் அசாதரணமான செயலை செய்வதில் வள்ளவராவார் பெரியார். வாழ்க்கையில் ஊமையாய் இருக்காதே என்ற கேள்வி கேழு என்ற தத்துவத்தை அவரிடம் கற்கலாம். கேள்விகளுக்கு பதிலளிக்கவும் நாம் இருக்க வேண்டும்.

உளவியல் ரீதியாக ஒரு செயலை ஒரு பக்கமாக மட்டும் பார்க்காமல் மற்றொரு பக்கமும் நோக்கச் செய்வார். எந்த ஒரு விசயத்தை அப்படியே நம்புவது கூடாது. எந்த ஒரு விசயத்தை ஆராய்ந்து பார்க்கும் நுண்க்கத்தை நாம் அவரிடம் கற்க வேண்டும்.

மேலும் படிக்க – நேரத்தை திட்டமிடுவது எப்படி.?

பெரியார் சமுகத்தின் அறிவாக இருந்தார்:

பெரியார் தான் மட்டுமன்றி தன்னை சேர்ந்த ஒட்டு மொத்த சமுதாயத்தை எழுப்பினார். இதனால் இவரின் போக்கு அனைவருக்கும் உந்து சக்தியாக இருந்தது.

மாணவப் பருவத்திலேயே ஒழுக்கம்:

மாணவப் பருவத்திலேயே ஒழுக்கத்தை கற்றுத்தந்த ஆசானாக இருக்கின்றார். நமக்குள்ள பொறுப்பை செவ்வனே செய்தல் அதுதான் ஒழுக்கம் என்கின்றார். பொறுப்புகள் மாணவப் பருவம் முதல் பின்பற்ற வேண்டும். பெரியாரின் வாழ்வியல் சிந்தனைகள் நம்மை செம்மையாக்கும் சக்தி கொண்டது ஆகும்.

பகுத்தறிவு பகலவர்:

கல்வி கற்றல், பகுத்தறிவுக் கல்வி கற்றலை அவசியம் என்கின்றார். சுயமரியாதை உணர்ச்சியை மேலோங்கச் செய்யும் கல்வி அவசியம் என்கின்றார். 13 வயது வரை பிள்ளைகளை அனைத்திற்கும் பழக்க வேண்டும் என்கின்றார்.

குழந்தைகளை வீரமானவர்களாக வளர்க்க வேண்டும். எதற்காகவும் பயம் சொல்லி வளர்க்க கூடாது. பெரியாரின் பார்வையில் திருமணம் என்பது குற்றமாக உள்ளது. சமூக பணி ஆற்ற திருமணம் ஒரு தடையாகும் என்கின்றார். பெரியார் நம்மை மூளையில் இருந்து இயக்க வைப்பதில் வல்லவர் ஆவார்.

பெண் சுதந்திரம்:

பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும், கல்வி பயில் வைக்க வேண்டும். பெண் என்பவள் ஒரு போகப் பொருளாகவே மதிக்கப்படுகின்றாள் சம்பிரதாயங்களும் சடங்களுகும் அவளை அடக்கி ஒடுக்குகின்றது. சுய சிந்தனை செய்து செயல் பட வைக்க வேண்டும். அவளுக்கு என்ன வேண்டுமே அதை அவளே செய்ய வேண்டும் என்பதை பெரியார் வலியுறுத்தி கூறியிருப்பார். சமுக விடுதலையின் கருவியாகப் பெரியார் இருந்தார் எனில் அது மிகையாகது.

கும்மி, கோலாட்டம் விடுத்து குதித்து விளையாடு, குஸ்தி போடு பெண்னே என பெண்களுக்கான வரையரையை ஒழித்தவர் பெரியார்.

பெரியாரின் கொள்கைகள் நம்மை பேச வைக்கும், கேள்விகளில் வாழ வைப்பார். பெரியார் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி, பெண்களை பேச வைத்தார். வீதிக்கொரு பெரியார் இருந்தால் வில்லங்கம் வராது.

மேலும் படிக்க – ஹெல்மெட்டில் இருக்கும் வகைகள்..!

சமுதாயம் சரிவர இயங்க ஆரம்பித்துவிடும். பள்ளி கல்லுரிகள, பெண்கள், சமுகம் சிறக்க பெரியாரின் சிந்தனைகள் அவரின் வழிக்காட்டல்கள் நமக்கு உதவுகின்றன. பிரச்சனைகள் ஏற்படும் அதனை எப்படி அணுக வேண்டும் என்பதனை நாம் இவரிடம் இருந்து கற்கலாம். வாழ்விலை நமக்கு கற்பித்த பெருமை அவரையே சாரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன