குளிர்காலங்களுக்கு ஏற்ற பழங்களில் முதலில் இருப்பது கமலா ஆரஞ்சு பழம்..!

why eating kamala orange is for your health in winter

குளிர்காலம் வந்துவிட்டாலே நமது உடல் வெப்பநிலை குறைந்து பல விதமான ஆரோக்கிய குறைபாடு பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வோம். இதை சரி செய்வதற்காக நாம் சரியான உணவு மற்றும் பழங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லை எனில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நாம் நினைத்துப் பார்க்காத பல வியாதிகள் நமக்கு ஏற்படும் அதிலும் குளிர்காலம் என்றாலே ஜலதோஷம், சளி, இரும்பல், காய்ச்சல் போன்றவைகள் ஏற்படும் இதை தவிர்ப்பதற்கு நாம் தினமும் ஒரு கமலா ஆரஞ்சு பழத்தை உட்கொண்டால் போதும்.

கமலா பழம் மற்ற நாட்களில் புளிப்பாகவும் சாப்பிட உகந்ததாக இருக்காது ஆனால் குளிர் காலங்களில் மட்டும் இதன் சுவை அதிகமாகவும் இனிப்பாகவும் இருக்கும். இது இயற்கையின் ஒரு அற்புதமான செயலாகும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது இதனால் நமது இருதய நோய், சிறுநீரகக் கல் மற்றும் எந்த ஒரு தொற்று அபாயங்களையும் இது வரவிடாமல் தடுக்கிறது.

மேலும் படிக்க – மாசு நிறைந்த உலகில் உங்களை காத்துக்கொள்ள ஆயுத்தமாகுங்க.!

ஆரஞ்சு பழத்தை உன்பதினாள் நமது செரிமான பிரச்சனையை தீர்த்து நமது உடல் எடையை குறைக்க உதவுகிறது. எனவே இதில் இருக்கும் சக்தி நமது உடல் ஆரோக்கியத்தை பேணிக் காத்து குளிர் காலத்தில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதன் பிறகு குளிர் காலங்களில் இந்தப் பழத்தை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் சளி, ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும் என்பதை தவிர்த்து நமது உடல் ஆரோக்கியம் அடையும் என்பதை உணர்ந்து கமலா ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன