இளம் வயதினரை தாக்கும் இருதய நோய்..!

why does youngsters get affected by heart disease

இருதய நோய் என்பது வயதானவர்களும் அல்லது முதியவர்களுக்கு ஏற்படுவதில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இதய நோய் அதிகமாக இளம் வயதினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு இருதய நோய் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் மருத்துவமனை கையுமாக அலைய வேண்டியதுதான். அதுமட்டுமல்லாமல் அதற்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்ய வேண்டும். இப்படிப்பட்ட இருதயநோய் சமீப காலமாகவே 25 வயதைக் கடந்த இளம் வயதினவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் இந்த நோய் வருடத்திற்கு வருடம் நோய் ஏற்படுபவர்களின் வயது குறைந்துகொண்டே போகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதய நோய் மிக எளிதில் தொற்றிக் கொள்கிறது. அதிலும் டைப் 2 நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.

இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் உப்பை சேர்த்துக் கொள்கிறோம். இதுபோன்றவர்களுக்கு மிக எளிதில் இந்த பிரச்சினையின் தாக்கம் ஏற்படும். மன அழுத்தம், மனக் குழப்பம், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், குடிப்பழக்கம் மற்றும் புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் மிக எளிதில் வருகிறது.

மேலும் படிக்க – தூங்குவதற்கான எண்ணங்கள் மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக உள்ளதா..!

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துகொள்வது நல்லது ஏனென்றால் ரத்த அழுத்தம் உங்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, இருதய செயலிழப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் சிறுநீரக செயலிழப்பு, கண் கோளாறு போன்ற பல்வேறு பிரச்சினைகளை இது தூண்டுகிறது. எனவே ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது.

உங்களுக்கு இருதய நோய் வருவதற்கான காரணம் நீங்கள் செய்யும் வேலையாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் நாம் செய்யும் வேலையை நம் மனம் சோர்வடைந்து வேளைகளில் அதிக மன அழுத்தத்தை காண்பதினால் உங்கள் ஆரோக்கியம் குறைந்து ரத்த அழுத்த பிரச்சனைக்கு உங்களை தள்ளுகிறது, இதனால் உங்கள் இருதயம் பாதிக்கப்படுகிறது. நம் உடலுக்கு கொழுப்பு சத்து மிக முக்கியமான ஒன்று ஆனால் அதை நாம் அதிகளவில் உட்கொள்வதினால் அல்லது கெட்ட கொழுப்புகளை உணவில் சேர்த்துக் கொள்வதினால் நமது ரத்தத்தில் கொழுப்புகள் அதிகமாக படிந்து இருதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் வேகத்தை குறைப்பது மட்டுமல்லாமல் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது இதனால் உங்கள் இருதயம் செயல் இழந்து விடுகிறது.

இருதயப் பிரச்சினை என்பது தலைமுறை பிரச்சினையாகவும் இருக்கிறது. உங்கள் அப்பாவிற்கு அல்லது குடும்பத்தில் யாராவது இருதய நோயால் பாதிப்படைந்து இருந்தால் அந்தப் பிரச்சனை அடுத்த தலைமுறைக்கும் தொடரும் என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனது இதனால் உங்கள் குடும்பத்தில் யாராவது இதுபோன்ற பிரச்சினையில் பாதிப்படைந்து இருந்தாள் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

மேலும் படிக்க – அதிக கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்.!

இதை தடுப்பதற்கு நாம் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை பரிசோதிப்பது நல்லது மற்றும் குடி மற்றும் புகையிலை பழக்கத்தை கொண்டிருந்தால் அதை உடனடியாக நிறுத்த முயற்சி செய்வது நல்லது. இதை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு தினமும் உடற்பயிற்சியை சிறிது நேரம் செய்தாலே நாம் எந்த ஒரு இருதய பிரச்சினைகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.

1 thought on “இளம் வயதினரை தாக்கும் இருதய நோய்..!”

  1. Pingback: பீபி, கொலஸ்ட்ரால் இல்லாமல் வாழ இதை சாப்பிடுங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன