சிவபெருமானுக்கு ஏன் மாணிக்கவாசகரின் மேல் மட்டும் பாசம் அதிகம்?

why does lord shiva has so much affection on manicka vasagar

மாணிக்கவாசகர் எப்போதும் ஒரு சிறப்புமிக்க பக்தர் என்று முன்னோர்கள் நமக்கு அறிவுரைத்து உள்ளார்கள். இதற்கு உதாரணமாக மாணிக்கவாசகருக்காக சிவபெருமான் அடியை கூட வாங்கிக் கொள்வார் என்று கூறியுள்ளார். இப்படி சிவபெருமானுக்கு மாணிக்கவாசகம் எப்போதும் ஒரு சிறப்பு மிக்க நபராக இருக்கிறார் என்பதை பற்றி பார்ப்போம்.

பெண்கள் சிவபெருமானின் புகழை பாட வேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் திருவெண்பா பாடலை எழுதினார். இதனால் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த பெண்கள் திருவெண்பா பாடல்களை பாடி அண்ணாமலையாரை துதித்தனர்.

மேலும் படிக்க – ராகு கேது பெயர்ச்சி பலன்கள்..!

எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் அங்கே சைவ சமய குரவர்கள் என்று அழைக்கப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் என்ற நால்வரின் சிலைகள் கண்டிப்பாக இருக்கும். அதில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவருக்கு இல்லாத தனிச்சிறப்பு எப்போது மாணிக்கவாசகருக்கு உண்டு. மாணிக்கவாசகரை மட்டும் தன்னுடைய திருவிளையாடல் நடத்தியதோடு நில்லாமல் ஆதியும் அந்தமும் இல்லாத தன்னைப்பற்றி பாடல் பாட சொல்லி அதைத்தானே தன் கைப்பட எழுதி அதற்கு திருவாசகம் என்று பெயரிட்டு கையொப்பமிட்டார் இறைவன். அந்த அளவுக்கு இறைவன் மாணிக்கவாசகர் மேல் பாசம் வைத்திருந்தார்.

மாணிக்கவாசகருக்காக இறைவன் வாங்கிய அடி எப்போது என்றால், ஒரு நாள் மாணிக்கவாசகர் மீது வைத்திருந்த பாசத்திற்கு கட்டுப்பட்டு தான் மாணிக்கவாசகரை காப்பாற்ற வைகையில் வெள்ளம் வரச்செய்து பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னன் கையினால் அடியும் வாங்கினார். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் இறைவன் ஒருவர் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தாள் அவருக்காக அடியும் வாங்கிக்கொள்வார் என்பதை அவர் வாங்கிய அடியில் தான் திருவாசகம் என்ற ஒப்பற்ற நூல் உருவானது.

மேலும் படிக்க – காசியின் காவலர் காலபைரவர் வேண்டியதை தருபவர்..!

ஒரு சாதாரண மனிதன் கடவுளுக்கு சொல்ல நினைத்ததை திருவாசகம் மூலமாக சொல்லியிருக்கிறார் மாணிக்கவாசகர். இதன் பெருமையைக்காகவே சிவபெருமாள் இவர் மீது இந்த அளவிற்கு பாசத்தை வைத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன