தமிழ் நாட்டில் ஏன் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவியது..!

  • by
why corona virus spread increased in tamil nadu

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அக்கறையில்லாத மனிதர்கள் இதுபோன்ற தடைகளை மதிக்காமல் உல்லாசமாக சுற்றி திரிந்தார்கள். இதனால் கடுப்பான காவல் அதிகாரிகள் தங்கள் கண்களில் சிக்குபவர்கள் அனைவரையும் வெளுத்துக் கட்டினார். இதை தவிர்த்து இவர்கள் சுற்றுவதால் ஏற்படும் ஆபத்தை குறைக்க சுகாதார தொழிலாளர்கள் தங்களால் முடிந்தவரை நம்முடைய சாலைகளை சுத்தம் செய்தார்கள். இருந்தும் தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அத்துமீறியவர்கள்

இதுபோன்ற 144 தடை உத்தரவை மீறி தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இதை தவிர்த்து கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை சிறை பிடித்துள்ளார். தமிழக அரசுக்கு கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் அபராதமாக கிடைத்துள்ளது. இதுபோல் பொறுப்பில்லாத குடிமகன் மூலமாக தமிழகத்திற்கு ஏராளமான லாபம் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!

வைரஸ் பரவ வாய்ப்புகள்

ஆனால் இதுபோல் பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் பொறுப்பற்றவர்களினால் இந்த கொரோனா வைரஸ் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இது சாதாரண பொருட்களின் மேல் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் வரை உயிர்வாழும், எனவே இவர்கள் சுற்றும்போது தொட்டாலோ அல்லது அதைச் சுவாசித்தாலும் இவர்களுக்கும் இந்தத் தொற்று பறவி படிப்படியாக மற்றவர்களுக்கு பரவும் இந்த வைரஸ் ஒரு சமூக தொற்றாக மாறிவிடும்.

வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு

கடந்த வாரம் தமிழகத்தில் குறைந்த அளவில் இருந்த இந்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மிகப் பெரிய அளவில் உருவாகிள்ளது. மகாராஷ்டிரா, கேரளாவுக்கு அடுத்த படியில் வைரஸ் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் அலட்சியம் தான். நமக்கு என்ன ஆகப்போகிறது என்ற அலட்சியத்தினால் தமிழகத்தில் இருக்கும் மக்கள் பல நகரங்களுக்கு சென்று இந்த வைரஸ் தொற்றை வாங்கி வந்துள்ளார்கள். அரசாங்கம் கட்டுப்பாடுகளை மீறி இதுபோன்ற செயல்களில் மூலமாக தங்கள் உயிர் மட்டும் அல்லாமல் தங்களைச் சுற்றி உள்ளவர்களையும் பாதிக்க செய்த பெருமை இவர்களுக்கு உண்டு.

மேலும் படிக்க – கொரோனா வைரசை கண்டு பயப்படாதீர்கள்..!

பரிசோதனைக் கூடம்

சில வாரங்களுக்கு முன்பு வரை பரிசோதனை கருவிகள் நம்மிடம் குறைவாக இருந்தது, ஆனால் தற்போது இதுபோன்ற கருவிகள் நம்மிடம் அதிகமாக இருப்பதினால் பரிசோதனையும் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதைத் தவிர்த்து தனிமைப் படுத்தப் பட்டவர்கள் மற்றும் சுற்றுலா சென்று நாடு திரும்புவார்கள் என அனைவரின் நிலையும் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இதைப் போலத்தான் இந்த வைரஸ் தொற்று எந்த அளவில் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் என்பது தெளிவாக தெரியும்.

உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது. எனவே இந்த வைரஸ் தொற்றை முழுமையாக தடுப்பதற்கான வாய்ப்புகள் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு மிகப் பொறுப்பாக உங்கள் நாட்களை வீட்டிற்குள் கழியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன