கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கான காரணம்..!

  • by
why corona virus is spreading so fast

நம்முடைய உலகம் பல விதமான வைரஸ் தொற்றுகளின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளது. ஆனால் மற்ற எந்த ஒரு தொற்றுக்களில் இல்லாத உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் இந்த கொரோனா வைரஸ் கொண்டுள்ளது. இது இவ்வளவு வேகத்தில் பரவுவதற்கான காரணம், இதைத் தடுப்பதற்கான வழிகளை இந்த பதிவில் காணலாம்.

சீனாவின் நிலை

கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலில் சீனாவில்தான் உருவாகியது. முதல் மாதத்தில் குறைந்த அளவில் காணப்பட்ட இந்த பிரச்சனை இரண்டே வாரங்களில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உருவாகியது. அதைத் தொடர்ந்து மூன்றாம் மற்றும் நான்காம் வாரம் கணக்கிட முடியாத அளவிற்கு உருவாகியது. இதனால் இதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்று அனைவருக்கும் புரிந்தது. எனவே இதை எப்படித் தடுக்க வேண்டும் என்று மற்ற நாட்டவர்களும் யோசிக்கத் தொடங்கினார்கள். இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளது சீனா.

மேலும் படிக்க – கரோனா நோய்த் தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள செய்ய வேண்டியவையும்,செய்யக் கூடாதவையும்.!

இத்தாலியின் நிலை

இத்தாலியில் இந்த வைரஸ் சீனாவிற்கு முன்பு பரவி இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் சீனாவை காட்டிலும் இத்தாலியில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. உலகில் அதிகம் வயதானவர்களை கொண்டிருக்கும் இத்தாலி இந்த வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதன் உற்பத்தியை ஆரம்பத்தில் அலட்சியமாக விட்டதே இத்தாலியில் இவ்வளவு உயிரிழப்புக்கு காரணமாகி விட்டது.

மற்ற நாடுகளின் நிலை

அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஜெர்மனி, ஈரான், சுவிசர்லாந்து, தென் கொரியா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பரவியுள்ளது. இதில் சீனா மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் மற்றும் ஈரானில் தான் உயிரிழப்புகள் அதிகம். வயதானவர்கள் அதிக அளவில் தாக்கும் இந்த கொரோனா தொற்று பரவுவதை நாம் ஆரம்பத்தில் தடுத்தால் மட்டுமே இதுபோன்ற நிலை நம் நாட்டிற்கு வராது.

ஒருவர் பின் ஒருவர்

இளம் வயதில் உள்ளவர் தான் செல்லும் இடத்தில், தொடும் எல்லா இடத்திலும் இந்த வைரஸ் பரவுகிறது. அந்த இடத்தை வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் தொடுகையில் அவருக்கும் இந்த வைரஸ் தொற்று உண்டாகி அவர் செல்லும் இடங்களெல்லாம் இந்த வைரஸ் தொற்றுகள் பரவுகிறது. இதனால் இது படிப்படியாக ஏறிக்கொண்டே செல்கிறது, உங்கள் கைகளில் இருக்கும் இந்த வைரஸ் எப்போது உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாய்களில் உங்கள் கைகளை வைக்கிறீர்களோ அப்போதுதான் உங்களுக்குள் இது முழுமையாக செல்கிறது. பின்பு உங்கள் உடல் கட்டமைப்பு, அதற்கு ஏற்றபடி மாற்றி உங்கள் அணுக்களை முழுமையாக அழிக்கிறது.

மேலும் படிக்க – உடல் எடையை எளிமையான முறையில் குறைக்கும் வழிகள்..!

வெளிநாட்டவர்கள்

வெளிநாட்டிலிருந்து இந்தியா மற்றும் இதர நாடுகளுக்கு செல்பவர்கள் வைரஸ் தொற்றுடன் வருகிறார்கள். பின்பு தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களை சந்திக்கிறார்கள், பின்பு அந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள், தங்கள் குடும்பம் அல்லாமல் மற்றவர்களை சந்திக்கிறார்கள். எனவே இப்படி இந்த வைரஸ் படிப்படியாக சமுதாய முழுக்க பரவுகிறது. எனவே அனைவரும் வெளியே சுற்றாமல் வீட்டில் இருப்பதன் மூலமாக இந்த வைரஸ் மற்றவர்களிடம் பரவுவது தடுக்கப்படுகிறது. எனவே முதலில் பாதிக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு அவர் வைரஸ் பற்றி உறுதி செய்கிறார். இதன்மூலம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மற்ற அனைவரையும் பாதுகாக்கலாம்.

எனவே இந்தத் தொற்று பரவுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் மற்றவர்களில் இருந்து விலகியிருக்க வேண்டும். அதேபோல் வீட்டிலேயே இருந்து பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தத் தொற்று உங்களை பாதிக்காது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன