ஏன் மற்றும் எப்பொழுது நாம் எண் ஜோதிடரை சந்திக்க வேண்டும்..!

  • by
why and when you should consult a numerologist in your life

எண் கணிதம் என்பது அறிவியல் சார்ந்ததா அல்லது ஜோதிடத்தை சார்ந்தவை என்று குழப்பம் எல்லோருக்கும் இருக்கும். இதை அறிவியல் சார்ந்ததாக பார்க்கப் படுபவர்கள் எண் கணிதத்தை கணக்கிடுவதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் எண் கணிதத்தை ஜோதிடமாக பார்ப்பவர்கள் அதன் ஆழத்தை ஆராய்ச்சி செய்து அதனால் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் பெற்று வாழ்கிறார்கள். உலகில் ஏராளமான பகுதிகளில் அக்காலம் முதல் இந்த எண் கணிதத்தை பின்தொடர்ந்து வந்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் இன்றும் ஐரோப்பிய போன்ற கண்டங்களில் கண்டறிந்துள்ளார்கள். இது படிப்படியாக ரோமர்கள், பாரசீகர்கள் அதைத்தொடர்ந்து இந்தியர்கள் என உலகில் இருக்கும் ஏராளமான நாடுகளுக்கு இந்த எண் ஜோதிடம் பரவி உள்ளது.

எண் ஜோதிடம்

மனிதர்கள் எண்களின் அடிப்படையிலேயே பிறக்கிறார்கள், அதைத்தொடர்ந்து எண்களினால் செய்யப்பட்ட கணக்கைக் கொண்டு வாழ்கிறார்கள். ஒருவர் மண்ணில் பிறந்து, வாழ்ந்து, இறக்கும்வரை அவர்களின் வாழ்க்கையில் எண்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். உங்களுக்கு வைக்கப்பட்ட பெயரில் இருக்கும் எழுத்துக்கள் கூட எண்களை கொண்டதாக இருக்கும். இதனால் உங்களுக்கு சூட்டப்படும் பெயரைக் கொண்டு உங்கள் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நீங்கள் பிறந்த நாள், நேரம், ஆண்டு போன்றவைகளை பொறுத்தே உங்கள் எதிர்காலம் அமைகிறது.

எப்போது சந்திக்க வேண்டும்

எண் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் அதை நாடுவதற்கான சூழல் நிகழ்ந்துவிடுகிறது. அச்சமயத்தில் உங்கள் வாழ்க்கையில் எண் ஜோதிடத்தை வேண்டியதற்கான காரணங்கள் ஒருசிலவற்றே இருக்கின்றன.

குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமை, குழந்தை பாக்கியம் தள்ளிப் போகுதல், இடைவிடாத பிரச்சனை, பணப்பிரச்சனை, உறவுகளில் ஏற்படும் பிரச்சினை, வேலையின்மை போன்ற ஏதாவது ஒரு சூழல் உங்களை எண் ஜோதிடத்திற்க்குள் அழைத்து வரும்.

தீர்வளிக்கும் ஜோதிடம்

நீங்கள் வாழும் வாழ்க்கைதான் மற்றவர்களும் வாழ்கிறார்கள், ஆனால் இருவரின் வாழ்க்கையில் ஏராளமான ஏற்றம் மற்றும் இறக்கம் இருக்கும். இதை சமநிலைப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது எண் ஜோதிடம். மற்றவரைப் போல செல்வமும், மகிழ்ச்சியும் சேர்த்து வாழ வேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கையின் எண்னை அறிய வேண்டும், அதற்கு நீங்கள் செய்யும் அனைத்து காரியத்திற்குப் பின்னால் இருக்கும் கணக்குகளில் புரிந்து அதை செயல்படுத்த வேண்டும். எல்லோருக்கும் அவருக்கென்று ஒரு அதிர்ஷ்ட எண் இருக்கும், அதை சாதாரணமாக உருவாகாது. உங்கள் பிறந்த நாளை பொறுத்தே உங்களின் அதிர்ஷ்ட எண் உருவாகிறது, அதை அறிந்து உங்கள் அனைத்து செயல்களையும் அந்த அதிஷ்ட எண்னை கொண்டு செய்யுங்கள். இதனால் உங்கள் வாழ்க்கை நீங்கள் எண்ணிப் பார்த்ததை விட அற்புதமாக அமையும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் எண் ஜோதிடத்தின் அடிப்படையில் அமைத்து பாருங்கள். இதனால் உங்களுக்குள் தன்னம்பிக்கை அதிகரித்து உங்கள் வாழ்க்கையை அற்புதமாக எதிர்கொள்வீர்கள். எண் ஜோதிடத்தை பின்தொடர்வதினாள் உங்கள் எதிரில் இருக்கும் அனைத்து தடைகளையும் தீர்த்து புதிய வழிகளை உண்டாக்கும் திறன் உங்களுக்கு கிடைக்கும். இதனால் தேவையான செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார வலர்ச்சி, ஏராளமான செல்வாக்கு போன்ற அனைத்தும் உங்களுக்கு எளிதாக கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன