யாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா?

  • by
Who Will Get Kidney Cancer

மனிதர்களின் உடல் ஆரோக்கியம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது. இதனால் அவர்களுக்கு நீரிழிவு நோய், இருதய நோய், புற்றுநோய் என பல வியாதிகளில் வந்து கொண்டு இருக்கின்றன. இப்போது சமீபத்தில் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிறுநீரகப் புற்றுநோய்

ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுநீரகத்தை சரியாக பராமரிக்காமல் இருந்தால் நாளடைவில் உங்கள் சிறுநீரக பகுதியில் புற்றுநோய் பற்றிக்கொள்கிறது. இதை தடுப்பதற்கு நாம் சரியான உணவுகளை எடுத்துக்கொண்டு, தவறான பழக்கங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்களையும் இந்த சிறுநீரக புற்றுநோய் தாக்கும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை உடம்புக்குள் நுழைய விடாமல் விரட்டும் பவளமல்லி!

புகை பிடிப்போருக்கு புற்றுநோய்

புகை பிடிப்பதினால் வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் வயிற்றில் புற்று நோய் ஏற்படும். ஆனால் சமீபத்தில் புகை பிடிப்பதினால் 30% ஆண்களுக்கும் 25% பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். பெண்களை விட ஆண்கள் தான் சிறுநீரகப் புற்றுநோய் பாதிப்படையச் செய்கிறது. அதிலும் கருப்பினத்தவர் சேர்ந்தவர்களிடம் இந்த புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

வயது வரம்பில்லாமல் தாக்கும் புற்றுநோய்

இளம் வயதில் புகைப்பிடிப்பவர்கள் மற்றும் சரியான உணவு முறைகளை பின்பற்றதவர்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால் 50 வயதில் இருந்து 70 வயது வரை இருப்பவர்களை இந்த புற்றுநோய் எளிதில் தாக்குகிறது. இச்சமயங்களில் இவர்களின் சிறுநீரக பாதிப்புகள் அதிகமாக இருப்பதினால் முதியவர்களை எளிதில் தாக்குகிறது.

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களை புற்றுநோய் தாக்குகிறது. இவர்களின் தவறான உணவு முறைகளினாள் சிறுநீரக புற்றுநோய் பாதிப்பில் இவர்களும் இனைக்கிறார்கள். அதேபோல் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் அதிகமாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துகொள்பவர்களையும் இந்த புற்றுநோய் தாக்குகிறது.

மேலும் படிக்க – சருமப் பொலிவு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எலுமிச்சை பழம்.!

ஆரோக்கியமான உணவுகள்

நம்முடைய சிறுநீரகத்தை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு நாம் அதிக அளவிலான நீர் எடுத்துக் கொள்ள வேண்டும், அதிலும் நீர் ஆதாரங்கள் உள்ள காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது சிறந்தது.

உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய பீட்சா, பர்கர் மற்றும் தெரு ஓரங்களில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். இதில் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய கொழுப்புப் பொருட்களை அதிகமாக கலக்கிறார்கள். அதேபோல் தெரு ஓரங்களில் விற்கப்படும் தின்பண்டங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் என பலவிதமான பொருட்கள், நம்முடைய உடலுக்கு தீங்கை விளைவிக்குவதை சேர்க்கிறார்கள். இதுபோன்ற உணவுகளைத் தவிர்த்து இயற்கையின் மூலமாக கிடைக்கக் கூடிய உணவுகளை உண்டு இந்த புற்றுநோய்யை நம்மால் வரவிடாமல் தடுக்க முடியும்.

தடுக்கும் முறைகள்

புகைப்பிடிப்பவர்கள் உடனே புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் இந்த புற்றுநோய் பாதிப்பு குறையும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நம்முடைய இரத்தத்தின் அளவை எப்போதும் சமமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடல் எடையை எப்போதும் சமமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

கொழுப்புகள் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அதேபோல் காலையில் இருந்து இரவு வரை என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்ற திட்டங்களை தீட்டுவது முக்கியமாகும்.

மேலும் படிக்க – தயிர் சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா?

குடும்ப வழிகளில் புற்றுநோய்

ஒரு சிலருக்கு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாமல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். இதன் காரணம், அவர்களின் குடும்ப வழிகளில் யாருக்காவது புற்றுநோய் இருந்தால் அது ஜெனிடிக் குறைபாடினால் உங்களுக்கும் அந்த புற்று நோய் தொற்றிக்கொள்ளும். எனவே இது போன்ற சமயங்களில் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்தாலும் அவர்களையும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதிப்பது நல்லது.

புற்றுநோய் பாதிப்பு இக்காலகட்டத்தில் மிகப்பெரிய வியாபாரமாக செயல்பட்டு வருகிறது. எனவே அதை கருத்தில் கொண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்யுங்கள். இதற்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதிப்பது சிறந்ததாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன