அதற்குள் மற்றொரு கிரகணமா..? இம்முறை சந்திரகிரகணம்.!

which zodiac signs are affected by eclipse

கடைசியாக 2019 டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நாம் சூரிய கிரகணத்தின் அனுபவத்தை பெற்றிருந்தோம். அதைத் தொடர்ந்து 2020தில் ஏற்பட்டிருக்கும் முதல் கிரகணம் சந்திர கிரகணம். ஆனால் இதை இந்தியாவில் இருந்து யாரும் பார்க்க முடியாது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களால் மட்டும்தான் இந்த சந்திர கிரகணத்தின் அனுபவத்தை பெறமுடியும்.

இந்த சந்திர கிரகணம் புனர்பூசம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இதனால் மீனம் ராசியில் உள்ள திருவாதிரை புனர்பூசம், கடகம் ராசியில் உள்ள புனர்பூசம், துலாம் விருச்சிகத்தில் உள்ள விசாகம், மீன ராசியில் உள்ள புரட்டாசி நட்சத்திரக்காரர்களும் பரிகாரம் செய்து கொள்ளலாம். இதைத் தவிர்த்து, இருக்கும் பன்னிரெண்டு ராசிக்காரர்களும் இச்சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க – காலத்தை கட்டுப்படுத்தும் காலா என்கிற காளி..!

மேஷம் ராசிக்காரர்கள் குடும்பத்துடன் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் சகோதரர்களுடன் எந்த சண்டையும் போட வேண்டாம். மேலும் 10 மணி அடைந்தவுடன் உறங்கி விடுவது நல்லது.

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொறுமையுடன் பொருளாதாரத்தை உயர்த்தி அமைதியாக இருங்கள். குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளில் தலையிடாதீர்கள் புத்தியை உபயோகித்து சமாதானம் பேசுங்கள்.

மிதுனம் ராசிக்காரர்கள் உடல்நிலை மேல் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுங்கள், அமைதியாக இருப்பதே சிறந்த வழி. இந்த சமயங்களில் பேசாமல் இருப்பது நல்லது. இதனால் உங்கள் பொருளாதார சிக்கல்கள் தீரும்.

கடகம் ராசிக்காரர்கள் தனியாக இருப்பதும், ஆன்மிக நாட்டத்தில் இருப்பது நல்லது. தேவையற்றவைகளை பேச வேண்டாம். அமைதியாக உங்கள் பணியை மட்டும் செய்யுங்கள்.

மேலும் படிக்க – வாழ்க்கையில் வெற்றியடைய சுக்கிர பரிகார மிக அவசியம்.!

சிம்மராசி காரர்கள் வயதில் மூத்தவர்கள் அல்லது சகோதரர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பணிவும் மரியாதையும் மிக அவசியம். செய்யும் முதலீடுகள் இலாபங்கள் ஏற்படலாம் இதைத் தவிர்த்து இரவு வேலை செய்பவர்கள் தங்கள் மேலதிகாரியுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

கன்னி ராசிக்காரர்கள் இரவு வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். மேலதிகாரியுடன் ஒத்துழைத்த நடந்துகொள்வது நல்லது. தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். முடிந்தால் கிரகணம் சமயங்களில் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பது நல்லது. இல்லையெனில் இரவு வேலையை தவிருங்கள். உங்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுங்கள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட தூரப்பயணம் அல்லது ஆன்மிக பயணங்களை மேற்கொள்ளுங்கள். சில காரியங்கள் தடை ஏற்படும், அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம் ராசிக்காரர்கள் வாகனங்கள் ஓட்டும் போதும் கவனமாகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லை எனில் உங்களுக்கு விபத்துக்கள் ஏற்படலாம். உடல் சோர்வு, அலைச்சல்கள் ஏற்படலாம் வீட்டிலேயோ அல்லது அலுவலகத்தில் பேசும்போது கவனமாக பேசுங்கள்.

தனுசு ராசிக்காரர்கள் அலுவலகத்தில் அல்லது வீட்டிலேயோ கவனமாக பேசுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பொறுமையுடன் நிதானமாக இருங்கள். வெளியே காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மகரம் ராசிக்காரர்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. சிறிய சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் வியாபாரத்தில் எதிரிகளைச் சமாளிக்கும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், இது உங்கள் வியாபாரத்தை வலுப்படுத்தும்.

மேலும் படிக்க – திருமணத்தடையை நீக்கும் காலபைரவர் வழிபாடு..!

கும்பம் ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். அம்மா வழிகளால் பிரச்சினை ஏற்படலாம். குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். பூர்வீக சொத்துக்களில் பிரச்சினைகள் வரலாம். ஆன்மீகம், தியானம், கடவுள் வழிபாடுகள் மூலமாக பிரச்சினையை தீர்க்கலாம்.

மீனம் ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். மனதளவில் தைரியமாக இருங்கள், பொறுமையும், நிதானமும் தேவை. இந்த சமயங்களில் எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன