ஊரடங்கு காலத்தில் வீட்டில் வளர்க்க வேண்டியது

  • by

வீட்டில் இருக்கும் பொழுது நாம்  வீட்டிலுள்ளோரிடம் பேசுவோம் வேலை செய்வோம் அத்துடன் நமக்குத் தேவையான அனைத்து  பணிகளும் நம வீட்டில் இருக்கும் பொழுது செய்வோம் ஆனால் நம்மிடம் இருக்க வேண்டியது   வீட்டில் நாம் ஏற்கனவே வைத்து பராமரிக்கத்தவறியிருப்போம் அந்த செடிகளை எல்லாம் பேணிப் பாதுகாக்கலாம். இதனை நாம் நிச்சயம் காக்க வேண்டியது அவசியம் ஆகும். 

உங்கள் பணிகள்  ஒவ்வொன்றும் எவ்வளவு முக்கியமோ வீட்டில் அதுபோல் நாம் கவனிக்கத்தவறிய செடிகள் கொடிகள் பற்றி கவனிப்போம். இதுக்காக லாக்டவுனில்  எங்கும் செல்ல வேண்டாம். ஆனால் நம்மிடம் இருக்க வேண்டிய அடிப்படையான வீட்டில் ஏற்கனவே வைத்து கண்டுகொள்ளாமல் விடப்பட்ட செடியே போதுமானது அதை  மீண்டும் சரி செய்து வளர்த்தால் சிறப்பு. 

இப்படியாக வீட்டில் புதினா முளைக்க வைக்கலாம். கொத்துமல்லி செடியை விதையை தூவி வளர்க்கலாம். அத்துடன் ஓமவல்லி,  திருநீற்றுப்பச்சிலையை கசக்கி வைக்கலாம். மேலும் இத்துடன் ஏற்கனவே நீங்கள் வளர்த்துவரும் மற்ற செடி கொடிகளைப் பழுதுபார்க்கலாம். 

இவை உங்கள் மன அழுத்தத்தை கொடுக்கும் உடல் மனதிற்கு புத்துணர்ச்சியை அதிகப்படுத்தும். இந்த அடிப்படையான   விசயங்களை செய்தாலே போதுமானது ஆகும்.

 

துளசி:

துளசி வளர்ப்பின் மூலம் அதன் இலைகளை சளித் தொல்லைக்கு பயன்படுத்தலாம் துளசி இழையை டீயில் போட்டு  நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் உடல் நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கியம் பெருகும். துளசி சித்தா ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  துளசி மூலிகை செடிகளின் ராணி என அழைக்கப்படுகின்றது. துளசி பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா தொற்றைப் போக்கும். ஆண்டி பாக்டீரியம், ஆன்டி பயோடிக்  பொருட்கள் காய்ச்சல், ஜல தோசம் மூச்சுப் பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. இதிலுள்ள மூலிகை குணங்கள் காலரா,சீரண பிரச்சனை, இன்ஸோமினியா, ஹைஸ்டிரியா போன்றவற்றை எதிர்த்து குணமாக்குகின்றது. துளசி இலையை   கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி நற்பலன் பெறுகின்றனர். 

வெந்தயச் செடி:

வெந்தயச் செடியை வீடில்யேயே வளர்க்கலாம். இந்தனை இந்தியாவில்  வட மாநில மக்கள் மேத்தி என்று அழைக்கின்றனர். விதைகள், இலைகள் மருத்துவ தன்மை வாய்ந்தாகும். நமது உடல் குளிர்ச்சியாக வைக்க வெந்தயம் அவசியம் ஆகும்.  இது கல்லீரல் புற்று நோய் தடுப்பாக இருக்கின்றது. மாதவிடாய் காலத்தில் பெண்களிம் வலி நிவாரணியாகவும் செயல்படுகின்றது. வெந்தயம் அலர்ஜி, குடல் அலர்ஜி,  குடல் அலசர் தடுக்கும் இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை குறைக்கும். சுவாசக் கோளாரை சரி செய்யும். 

இதனை அழகாக ஒரு அட்டைப் பெட்டியில் நாம் எளிதாக  மண்ணிட்டு அதனில் வெந்தய விதையை தூவி வளர்க்கலாம் இது அழகாக கீரையுடன் வளரும்.  வெந்தயம் உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். 

மேலும் படிக்க: 2022ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்..!

கற்றாழை: 

கற்றாழை அனைவரது வீட்டிலும் எளிதில் வளர்க்கலாம். இன்றைய காலங்களில் கற்றாழை வளர்ப்பு அழகுக்காகவது அதிக வீட்டில் காணப்படுகிறது. கற்றாழாய் வளர்க்க தண்ணீர் அவசியமில்லை, இதற்கு சூரிய ஒளி மட்டும் போதும். இது வளர்க்கும் வீட்டில் கொசு வராது ஏன்  பாம்பும் வராது. கற்றாழையை உடல் பாதுகாக்க வெளி மற்றும் உள அழகைப் பராமரிக்கவும் கொடுக்கலாம். இதன் மூலிகை தன்மைகள் உடலில் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வயது சிக்கலைப் போக்கும். கற்றாழை ஜூஸ் தினமும் குடிக்க உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்க முடியும். 

தீக்காயம் குணப்படுத்தும் மருந்தாகவும். தோல் பிரச்சனைக்கு நிவாரணியாகவும் இதுப் பயன்படுகின்றது.  அலர்சியை எதிர்க்கும் சருமத்தில் தலை முடிகளை பாதுகாக்கும். 

வேப்பிலை:

நமது எல்லாருடைய வீட்டிலும் இருக்க வேண்டியது வேப்பிலை மரம். இது ஆற்றல் வாய்ந்த ஒரு மரம் ஆகும். வீட்டில் வளர்க்க வேண்டிய மரமாகும். இதனை குறிப்பிட்ட உயரம் வரை வீட்டில் வைத்து அதன்பின் இதனை மரமாக தள்ளி வைக்கலாம். வேம்பு ஒரு  அதிசய மூலிகை ஆகும். வேம்பு கிருமி நாசியாகும்.  மேல் குறிப்பிட்டுள்ள இந்த அடிப்படை செடிகள் இருப்பின் எதுவும் நம்மை அண்டாது.

மேலும் படிக்க: தயிர் யோகர்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன