வெள்ளி மோதிரத்தை எந்த விரலில் போட வேண்டும்?

which finger you should wear silver ring and what are its benefits

நம் கையில் மோதிரத்திற்கு என்றே தனியாக ஒரு விரல் உள்ளது. இதுவரை ஏன் நம் இதை மோதிரவிரல் என்று அழைக்கிறோம் என்பது தெரியாமல் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாம் மோதிர விரலில் மோதிரத்தை அணிந்தால்தான் நமக்கு எந்தத் தீங்கும் உண்டாகாமல் ஆரோக்கியமாக இருப்போம், இதற்கு அறிவியல் பூர்வமாகவும், ஜோதிடம் வழியிலும் ஏகப்பட்ட தெளிவுரைகள் இருக்கின்றன. ஆனால் நாம் வெள்ளி மோதிரத்தை எந்த விரலில் அணிய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இதை படியுங்கள்.

வெள்ளியை சந்திரனின் மனோபாவம் கிரகம் என்று சொல்வார்கள்.

இதனால் வெள்ளி மோதிரத்தை அணிவது சந்திரனைக் குறிக்கிறது, வெள்ளி மோதிரம் அனிபவர்களுக்கு செல்வமும் அதிர்ஷ்டமும் கிடைக்கிறது. 

மேலும் படிக்க – வளர்பிறையில் சஷ்டி விரதத்தினால் வாழ்வில் வளம் பெறலாம்..!

இதை எப்போது அணிய வேண்டும்

வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று வெள்ளியை வாங்கி அதை சந்தனமும் பன்னீர் கொண்டு நன்கு கழுவி பின்பு உங்கள் இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு மகாலட்சுமி அல்லது அம்மனின் பாதத்தின் அடியில் வைத்து பூஜை செய்த பின்பு நீங்கள் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும்.

அந்த மோதிரத்தின் மேல் ஸ்ரீம் என்ற எழுத்தை பதித்து அணிந்து கொண்டால் உங்களுக்கு செல்வம் அதிகமாக சேரும் என்கிறார்கள். தம்பதியினர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு நீங்கள் க்லிம் என்ற மந்திரத்தை பதித்தவாறு மோதிரத்தை அணிய வேண்டும். வலது கையில் ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிவதன் மூலம் நமது மனம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண முடியும். இதனால் நாம் மன நிம்மதியுடன் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் எண்ணம் நமக்கு தோன்றும். அதுவே இடது கையில் ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிந்தாள் நமக்கு செல்வம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு அடைய முடியும்.

மேலும் படிக்க – அதிசயங்களுக்குள் அதிசயங்களான பழங்கால கோவில்கள் பாருங்க.!

மோதிரத்தை அணிந்தால் மட்டும் போதாது நம் எண்ணத்தில் எப்போதும் அதை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் வெள்ளிக்கு நேர்மறை சக்திகள் அதிகமாக இருப்பதினால் நாம் என்ன நினைக்கிறோமோ அது நடக்க இது உதவுகிறது. வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்பவர்களுக்கு வாழ்வில் நிம்மதியும், சந்தோஷம், பணவரவு, ஆரோக்கியமான வாழ்க்கை என எல்லாவற்றும் கிடைக்கும். இதற்காக நம் சிந்தனைகளை எப்போதும் தெளிவாகவும். நேர்மையாகவும் இருக்க வேண்டும். இதனால் அனைவருக்கும் வெளியில் சக்திகள் நம்மை நல்வழிக்கு கொண்டு செல்லும் இதை தவிர்த்து நாம் நினைத்த காரியத்தை செய்வதற்கான சக்திகளை இந்த மோதிரம் நமக்கு தருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன