கொரோனா வைரஸின் தாக்குதல் எப்போது முடிவுக்கு வரும்..!

  • by
when will corona virus pandemic end

முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் உண்டாக்கிய பயத்தை விட இந்த கொரோனா வைரஸ் ஏராளமான பயத்தை மக்களுக்குள் விதைத்துள்ளது. எப்போது யார் வேண்டுமானாலும் இதனால் பாதிப்படையலாம் அதை தவிர்த்து உங்கள் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் என யார் வேண்டுமானாலும் இதன் மூலமாக பாதிப்படையலாம். கண்களுக்குத் தெரியாத இந்த தொற்றுக் கிருமி நம்முடைய அன்றாட வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல் நம்முடைய உயிரை பறிக்கும் தன்மையைக் கொண்டது. இத்தகைய கொடிய வியாதியின் தாக்குதல் எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் உலகத்தில் இருக்கும் எல்லா மக்களின் கேள்வியாகும்.

இன்றைய நிலவரம்

தற்போது கணக்கின்படி கொரோனா வைரஸின் தாக்குதல் கிட்டத்தட்ட 7,22,196 பேர்களை தாக்கி உள்ளது. இதில் 33,976 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் 1,51,766 பேர் இதில் இருந்து மீண்டு வந்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும் இந்த வைரஸ் முதியவர்களை அதிகமாகத் தாக்கியுள்ளது. அதிலும் அவர்களின் உயிர் இழுப்பு தான் எல்லா நாட்டிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க – உங்கள் வீட்டில் நீங்கள் செய்ய வேண்டிய கடமை..!

இந்தியாவின் நிலை

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு ஆயிரத்தை கடந்து செல்கிறது இன்று வரை 27 பேர் உயிரிழந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அல்லது முதியவர்கள். கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வைரஸின் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்தத் தொற்று எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இதன் முடிவு எப்போது

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் உருவான இந்த வைரஸின் பாதிப்பை ஜனவரி மாதத்தில்தான் அவர்கள் சீனர்கள் கண்டறிந்தார்கள். அதை தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் என்று இரண்டு மாதங்களில் இந்த வைரஸை கட்டுப்படுத்தினார்கள்.  இந்த நிலை தான் மற்ற எல்லா நாடுகளுக்கும் நிகழும் என்று சொல்லமுடியாது. இத்தாலி ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் மூலமாக குறைந்தது ஆறு மாதங்கள் வரை இந்த கொரோனா வைரஸின் பிரச்சனை நம்மைச் சுற்றி இருக்கும். கொரோனா வைரஸ் மிக எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செல்வதினால் நாம் பாதுகாப்பாக வீட்டில் இருந்தால் மட்டுமே இந்த வைரஸின் பாதிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

மேலும் படிக்க – ஒழுக்கமற்ற இளைஞர்களினால் ஏற்படும் விபரீதம்..!

மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸிற்க்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் பொறுப்பில் ஏராளமான நாடுகள் இருக்கிறது. ஒரு சில நாடுகள் மருந்துகளை கண்டுபிடித்தாலும், அதற்கான ஆய்வின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. அதன்பிறகுதான் அந்த மருந்துகளை பயன்படுத்தி வைரஸ் பாதிப்புகளை குறைக்க முடியும். சித்த மருத்துவத்தில் நாம் சளி மற்றும் இருமல் பிரச்சனை வராமல் இருப்பதற்கு பயன்படுத்தும் நிலவேம்பு கஷாயத்தை உட்கொள்வதினால் கொரோனா வைரஸ் நம் உடலில் உற்பத்தி செய்யும் சளி மற்றும் இருமல் பிரச்சனையை குறைக்க முடியும் என்று சித்த மருத்துவ ஆய்வில் தலைமையகம் ஆயிஸ் அறிவித்துள்ளது. இதையும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அங்கீகரித்து நிலவேம்பு கசாயத்தை பயன்படுத்தலாம் என்று கூறி வருகிறது.

கொரோனா வைரஸின் பாதிப்பை கண்டறியும் கருவியை இந்திய பெண்மணியான “மின்னல் தக்காவே போசலே” என்பவர் பூனேவில் தனது ஆய்வகத்தில் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலமாக கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியும். அதை தவிர்த்து மற்ற கருவிகளை ஒப்பிடுகையில் இது இரண்டு மணி நேரத்தில் இந்த பரிசோதனைக்கான முடிவுகளை அளித்துவிடும். இதைப் பயன்படுத்த தொடங்கியவுடன் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அடுத்த இரண்டு வாரத்தில் தான் இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் எந்த அளவிற்கு இந்நோய் பரவி உள்ளது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன