மன ஆரோக்கியம் – பொய் சொல்கிறதா இந்தியா?

  • by

மன ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்தியா அதிர்ச்சியூட்டும் தவறான தகவலைக் கொண்டுள்ளது.

உலகளவில் மன ஆரோக்கியம் ஒரு முக்கிய கவலையாக உள்ளது, அதில் இந்தியாவும் தப்பவில்லை. மனநலத் துறையில் முன்னேற்றங்களை மதிப்பீடு செய்தால், அதன் வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது.

1954-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் (WHO) முதல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ப்ரோக் சிஷோல்ம், “மன ஆரோக்கியம் இல்லாமல் உண்மையான உடல் ஆரோக்கியம் இருக்க முடியாது” என்றார். இதை அவர் கூறி 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், காட்சி மட்டும் மாறவில்லை. மன ஆரோக்கிய குறைபாடுகள் உலகளவில் கணிசமான தொகையை பெற்றுள்ளது.

மனநல கோளாறுகள் எண்ணிக்கை உலகளவில் குறைத்து மதிப்பிட பட்டிருக்கலாம்; இதற்கு காரணம் போதிய விளையாட்டுக்கு உத்வேகம் அளிக்காமல் இருப்பது, சுகாதார பிரச்சினைகள், பணிபுரியும் பணியாளர்களுக்கு பணிச்சுமை, அவர்களுக்கான சுகாதார பிரச்சினைகள் மற்றும் சுற்றுப்புற பிரச்சினைகள் போன்ற பல ஏற்றத்தாழ்வுகள் நிவர்த்தி செய்வதன் அடிப்படையில் கணிசமான சிக்கல்கள் இருப்பதால் இதில் மன ஆரோக்கியம் தொடர்பான எண்ணிக்கைகள் தவர்க இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் படிக்க-> நீங்கள் செல்போனுக்கு அடிமையாகி விட்டீர்களா?

மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு :

மனநல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் சாதகமான விளைவுகளை அளிக்கின்றது, மனநோயைச் சுற்றியுள்ள விழிப்புணர்வை இலக்காகக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சில உத்திகள் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பு, மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவை அடங்கும். மனநோய்களைப் பற்றிய போதிய அறிவின் பற்றாக்குறை மனநல சுகாதார முறைக்கு ஒரு சவாலாக உள்ளது மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நேர்மறையான முடிவுகளையும் அளித்துள்ளது, இதன் மூலம் பிற பங்கேற்பை இது பாதிக்கிறது.

மன ஆரோக்கியத்தைப் பற்றிய மக்களின் புரிதல் :

இந்தியாவில் மனநோய்களின் சுமையைச் சமாளிக்க மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தனிநபர்கள் மனநோயை அச்சத்துடன் தொடர்ந்து பார்த்தால், மனநல பற்றிய அக்கறை உள்ளவர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.

ஆனால் அவர்களை காணும் பிறர், இவர்கள் வேற்று கிரகவாசிகள் போல தோன்றும் ஏனென்றால் மன நலத்தில் அக்கறை கொண்டுள்ள மக்கள் அவர்களின் நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் வழக்கத்திற்கும் சற்று விழிப்புணர்வுடன் இருக்கின்ற காரணத்தினால் பெரும்பாலானோர் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இவ்வாறு யோசிக்கக் கூடும்.

மேலும் கல்வி என்பது இதில் முக்கியமான பங்கு வகிக்கின்றது கல்வியை கொண்டு இதை சாத்தியப்படுத்த முடியும்.

மன ஆரோக்கிய விழிப்புணர்வுக்கான புரிதல்:

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் மன ஆரோக்கியத்தில் சற்று பின்தங்கி இருப்பது கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயம். மக்களுக்கு மனநல விழிப்புணர்வை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை நிலை மேம்படும் ஒருவர் மன நல ஆரோக்கியத்தை சரியாக பாதுகாக்கவில்லை என்றால் பிற்காலங்களில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அரசின் திட்டங்கள் :

தேசிய மற்றும் மாவட்ட மனநல சுகாதார திட்டங்களை அரசுகள் மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் காட்டக்கூடாது. மனநல ஆரோக்கியத்திற்கு அரசுகள் அதிக கவனம் கொடுப்பது முக்கியம் இன்றும் சில இடங்களில் தேசிய ஊரக சுகாதார தொலைநோக்குப் பார்வை என்ற திட்டம் செயல்முறையில் உள்ளது;

அரசின் இந்த திட்டத்துடன் அரசு சாரா அமைப்புகளும் சேர்ந்து மக்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இதற்கு அரசிடம் இருந்து போதிய நிதி மற்றும் தொடர் செயல்முறை இவை இருந்தால் போதுமானது பெரும்பான்மையான இடங்களில் இவை கிடைக்காமல் இருப்பதினால் அதில் சுணக்கம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க-> நிம்மதி இல்லையா? இதை படியுங்கள்!

கல்வி முறை :

பெரும்பாலும் மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் 24 வயதிற்கு முன்னரே தோன்றுகிறது. இது சம்பந்தமாக கல்லூரிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டங்கள் மிகவும் குறைவானவை அவை புரிந்துகொள்வதற்கும் தாராளமாக இல்லை. கல்வியில் மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட செயல்முறைகள் மிகவும் குறைவாக உள்ளதால் இதைப்பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே மிகவும் குறைவாகவே உள்ளது அதை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் பங்கு:

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணைய தொடர்பு மற்றும் சமூக ஊடங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர், இது எவ்வகையிலும் அவர்களுக்கு மன ஆரோக்கியத்திற்கான வலிமையை அளிக்காது, மாறாக ஒரு விதமான சமூக அழுத்தத்தையும் கொடுக்கும் இணையத்தில் இருந்து மீண்டு வருவதற்கு அவர்களது கவனத்தை படிப்பிலும் அல்லது வேறு சில செயல்களில் செலுத்தினால் போதுமானது சமூக ஊடகங்கள் என்றைக்கும் ஒருவித அழுத்தத்தை கொடுக்கும்.

பல நாடுகள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த பழமையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன அதில் பெரும்பாலானவை எவ்வித உதவியையும் தேவைப்படுவோருக்கு செய்வதில்லை;

மேலும் படிக்க-> மனநலத்திற்கு என்ன செய்து மீள்கிறது இந்தியா?

ஆகையால் பழையன கழித்து விட்டு புதிய கொள்கைகளையும் குறிக்கோள்களையும் அரசுகள் செயல்முறைப் படுத்துவது அவசியம் புதிய நடைமுறைக்கு தேவையான மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நிபுணர்களுடன் ஆலோசித்து சிறந்த முடிவை அரசு இருக்குமேயானால் மன ஆரோக்கியம் தீர்க்கக் கூடிய ஒன்றாக மாறிவிடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன