புல்லரிக்கும் நேரங்களில் நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் ?

when goosebumps occur what's going on inside your body

நீங்கள் நம்ப முடியாதவற்றை உங்கள் கண் முன் பார்த்தீர்கள் என்றால் உங்களை அறியாமல் உங்கள் உடல் சிலிர்த்துக் கொள்ளும். உங்கள் உணர்வை உடனடியாக தூண்டும் இந்த புல்லரிப்பு எப்போதெல்லாம் நீங்கள் அதிர்ச்சி அல்லது குளிர்ச்சியை உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்களை அறியாமல் இந்த உணர்வு வெளிப்படுகிறது. அதிகமாக இது நமது கைகளின் பின் பகுதியில் தோன்றுகிறது. இது எதற்காக தோன்றுகிறது, இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

நமக்கு எப்போதெல்லாம் பயம், மகிழ்ச்சி, குளிர், சோகம் மற்றும் பாலியல் உணர்வு போன்றவைகளை உணரும் பொழுது நம்மை அறியாமல் நம்முள் ஏற்படும் உணர்வு தான் இந்த புல்லரித்தல். சில நேரங்களில் நாம் காரணங்களே இல்லாமல் இது போன்ற உணர்வை வெளியிடுவோம். ஆனால் இது எப்போதும் காரணமில்லாமல் வெளியேறாது. நமது ஆழ்ந்த உணர்ச்சி அனுபவங்களை அனுபவிக்கும் போதுதான் இதுபோன்ற உணர்வு நமக்குள் ஏற்படுகிறது.

மேலும் படிக்க – ஏராளமான நன்மைகளை தரும் கிராம்பு.!

நம் சருமத்தில் நம் கண்களுக்கு தெரியாத சிறு துளைகள் உள்ளது. இதனால் நமக்கு புல்லரிக்கும் போதெல்லாம் நமது சருமத்தில் இருக்கும் முடியின் வேரில் அரக்டர் பில்லி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய தசை சூழ்ந்துள்ளது. இந்த சிறிய தசை இருக்கும் தோலில் சிறிய புடைப்பு தோன்றும். இதனால் நம் எப்போதெல்லாம் அதிக மகிழ்ச்சி அடைகிறோம் அப்போது இது இறுக்கமாகி நமக்கு அரிப்பை ஏற்படுத்துகிறது. பிறகு இது தளரும் பொழுது துளைகள் மறைந்து இயல்பு  நிலைக்கு வந்து விடுகிறோம்.

புல்லரிப்பில் பல வகைகள் உள்ளன அதில் நமக்கு எப்போதெல்லாம் குளுர்ச்சி இருக்கிறதோ நம் உடலுக்கு வெப்பம் தேவை என்பதை உணர்த்துவதற்காக நம் சருமம் இறுகி தசையில் இருக்கும் முடிகள் வெளியேறி நமக்கு வெப்பம் தேவை என்பதை உணர்த்துகிறது.

மேலும் படிக்க – மன அழுத்தத்தை குறைப்பதற்காக நாம் பின்பற்ற வேண்டிய வழிகள்.!

உங்களுக்கு சோகம், பயம், மகிழ்ச்சி அல்லது பாலியல் உணர்வுகள் ஏற்படும் போது நமக்கு புல்லரிப்பு என்பது இரண்டு விதமாக வெளிப்படுகிறது. தோளில் நடுப்பகுதியில் உள்ள தசைகள் செயல்பாடு அதிகரிக்க செய்கிறது மற்றும் உங்கள் சுவாசம் கனமாகவும், உங்களை படபடக்க வைத்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் உங்கள் தோலை இறக்கி புல்லரிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

புல்லரிப்பது என்பது உங்கள் உடலுக்கு சில தேவைகளை மறைமுகமாக சொல்வதற்கான எச்சரிக்கை மணி என்று பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இதை நீங்கள் அறிந்து உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அதற்கேற்ற செயல்களை அப்போது செய்து முடியுங்கள்.

1 thought on “புல்லரிக்கும் நேரங்களில் நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் ?”

  1. Pingback: ஆண்கள் வேக்சிங் செய்வதற்கு முன்பு தெரிந்துகொள்ள

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன